இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

28.06.1995 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சூட்டி, மேஜர் தமிழ்மாறன், கப்டன் மாறன், கப்டன் எழிற்செல்வன், லெப். அகிலன், லெப். உதயா, 2ம் லெப். இசையழகன், வீரவேங்கை பாமினி ஆகிய மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் தாக்குதல் அணிகள் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவு இராணுவ முகாம் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதமொன்றை பரிசீலனை செய்யும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்….!

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் – அம்பாறை)
மேஜர் தமிழ்மாறன் / கஜேந்திரன் (அரசரட்ணம் பாலகிருஸ்ணன் – தோப்பூர், திருகோணமலை)
கப்டன் மாறன் (குணநாயகம் குலேந்திரன் – அல்வாய், யாழ்ப்பாணம்)
கப்டன் எழிற்செல்வன் / ஜவான் (செல்லப்பு தயாபரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அகிலன் (அருச்சுனன் சிவரதன் – பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயா (கந்தையா சித்திரகுமாரி – கண்டி, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் இசையழகன் / கிறிஸ்ரி (கந்தையா கணேசமுர்த்தி – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை பாமினி (சின்னவன் நகுலேஸ்வரி – புத்தூர், யாழ்ப்பாணம்)

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

துன்கிந்த கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

“துன்கிந்த” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி மேஜர் கடலரசன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர், கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் வீரவணக்க நாள் இன்றாகும். 30.10.2001 அன்று யாழ். மாவட்டம்...

கடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி

கடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில்...

லெப்.கேணல் அகிலா

எங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை,...

25 வருடங்கள் கடந்த வரலாற்றில் மிகப் பெரும் அவலம் நிறைந்த வலிகாம இடப்பெயர்வு

30.10.1995 மக்கள்  அளித்த மாபெரும் பங்களிப்பு   (1995) வரலாற்றுப் பதிவாகிவிட்ட மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு. தமிழீழ மக்களின் சழூக கலாச்சார பொருளாதார மையமாகவும் தளராத கோட்டையாகவும் பொங்கிப்பிரவாகிக்கும் விடுதலைத்தீயின் பிறப்பிடமாகவும் இருந்து யாழ்ப்பாணத்தில் மண்ணும் மக்களும்...

Recent Comments