யாழ். மாவட்டம் கோண்டாவில் பகுதியில் 21.10.1987 அன்று இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர் ஆகிய மாவீரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் சந்தோசம் மாஸ்டரும் ஒருவர்.
அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”