இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப்.கேணல் காவியா, லெப்.கேணல் மதி உட்பட்ட 70 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப்.கேணல் காவியா, லெப்.கேணல் மதி உட்பட்ட 70 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

 

நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி – எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இப்படை நடவடிக்கைக்கு எதிராக சனவரி 16 – 17 வரை விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் போரிட்டு படைநடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினர்.

இத்தற்காப்புச் சமரில் லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட 70 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

விடுதலைக்கு  வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்.!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments