இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home போராளியின் அகத்திலிருந்து லெப்.கேணல் கலையழகன் ஒரு பல்கலையாளன் .!

லெப்.கேணல் கலையழகன் ஒரு பல்கலையாளன் .!

 

 

சிவபாதசுந்தரம்  சீலானாக பதினேழு  ஆண்டுகள்  காத்திருந்தது கலையழகனாகிப்  பதினான்கு ஆண்டுகாகத்  தேச விடுதலைக்கு வராலற்றில்   இவன் எழுதிச்சென்ற  சில பக்கங்களைப்  புரட்டி பார்ப்பதற்கு  நாம் இன்னும் சிறிது காலம்  பொறுத்திருக்கவேண்டும்  ஏனெனில்  நமது  ஈழத்தின்  விடியலுக்காக இம்மாவீரரின்  களத்தில்  இயங்கிய  தளங்களும் புலத்தில் இயங்கிய  வகைகளும் அத்தகையன .

யாழ் .மாட்டத்தின்  வயலும் வனப்பும்மிக்க கிராமமொன்றில் ,ஆசைக்கொரு அக்காவுடானும்  பாசமிகு  மூன்று  அண்ணன்களுடன் கடைக்குட்டியாக வளர்ந்து  1993 தன்னைத்  தாயகமீட்ப்பு  போரில்  இணைத்துக்கொண்ட எங்கள் மாவீரன் லெப் .கேணல் கலையழகன்

சரத்பாபு – 07 பயிற்சிப்  பாசறையில்  தன்  போராட்ட  வரலாற்றுக்கு அடித்தளமிட்டு ,பின்னர்  கேணல் கிட்டு  அரசறிவியற் கல்லூரியில் அரசியல் ,இராஜதந்திர கற்கையில்  ஈடுபட்டு வந்த  காலத்தில்  சூரியக்கதிர் -01  சத்ஜெய -03,ஜெயசிக்குறுய் ,ஓயாத அலைகள் -03 எனத்  தாயகத்தில்  நிகழ்ந்த பல சமர்க்களங்களில் ,தன்  தடம்  பதித்த  எங்கள்  மாவீரன்  லெப்.கேணல்  கலையழகன்

 • சாதுரியம் கலந்த  விகடக்கதைகாளால் எல்லோரையும் சிந்தித்து சிரிக்க  வைக்கும்  கலை  தெரிந்தவன் “
 • வெளிப்பார்வைக்குக் கல்லெனத்தெரியினும் உள்ளே என்றும்  வற்றாத ஈரமாய் பாசமும்  நேசமும்  காட்டிப்  பழகும்  கலை அறிந்தவன் :
 • விவாதமேடைகளிலும் நாளாந்த உரையாடற் பொழுதுகளிலும் ,நறுக்குத் தெறத்தாற்போல  பொருள்  பொதிந்த  வாதங்களை மணிக்குரலில்  முன்வைக்கும்  கலை  விததகன் :
 • கடினப் பயிற்சியென வருகையில் ,எழுகின்ற தடைகளைத்  திறனுடன்  சமாளித்து ,சளைக்காது சிறப்புறப்பயிலும்  கலை  மிகுந்தவன் :
 • நெருக்கடி மிகுந்த ,பல சிக்கல் முடிச்சுக்களைக்  கொண்ட புலகளத்தை ,அமைதிகுள்ளே ஆளுமை புகுத்தி வழிப்படுத்தும் கலை வல்லுநன்
 • கடினங்களும் இயங்குதடைகளும் செல்வழியைத் திசைதிருப்பவோ செயற்படுசக்தியை அசைக்கவோ இடமளித்துவிடாது  இயங்கும் கலை உடையவன் :
 • நட்புக்கும் நாளாந்தக்கடமைக்கும் ,தேசப்பணிக்கும் உறவுக்குமிடையே அளவான இடைவெளி பேணி இட்டப்பனியைத் திறனுடன் முடிக்கும்  கலை  ஆளன்  :
 • தன்னாற்றலுக்குச் சிறிதும் பொருத்தமேயற்ற  எச்சிறுபணி எனினும்,மறுத்துரை பேசிடாது முழுமூச்சுடன்  முனைந்து முடித்திடும்  கலை உணர்ந்தவன்    :
 • பல்லாயிரம் பணிச்சுமைகளுக்குள்ளே ஓய்வின்றிச்சுழன்று உழைத்த பொழுதிலும்  புலச்செயற்பாட்டாளர்களுடன் கிரமமான தொடர்பினைப் பேணும் கலை  வித்தகன் :
 • பளீரென வெளிக்கும் முகச்சிரிப்புடன்  அனைவரையும் அரவணைத்து ,முரண்களைந்து  அவரவர்  மனமறிந்து  இனிதாய்ப்  பேசும்  கலை  கொண்டவன் :
 • இழப்புகையும் வேதனைகளையும் அலட்சியப்படுத்தி ,ஆசைகளையும் தேவைகளையும் தூரவிரட்டி இயன்றவரை  தேசப்பணிக்கெனவே வாழும் கலை  ஆற்றலன் :

இவற்றின்  காரணமாகவேதான்  இவன் எல்லோராலும் விரும்பப் பட்டிருந்தான். இவற்றின் காரணமாகவேதான்  இவன்  நண்பர்களை  அதிகம்  ஈர்த்திருந்தான் ..

இவற்றின்   காரணமாகவேதான் இவன்  சிறந்த பொறுப்பாளனாய்  மிளிர்ந்திருந்தான் .

இவற்றின் காரணமாகவேதான் இவன்  தலைவனையும்   கவர்ந்திருந்தான்

 

-கேணல்  கிட்டு அரசறிவியற் கல்லூரித் தோழர்கள் –

வெளியீடு:கலையழகன் என்னும்காவிய நாயகன் நூல் 

இணைய  வெளியீடு : வேர்கள் இணையம்

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments