லெப். கேணல் ஈழப்பிரியன், கப்டன் றோய் வீரவணக்க நாள்
இன்றாகும்.
வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்
யாழ் மாவட்டம் பலாலி காவலரண் பகுதியில் 1990ம் ஆண்டு காயமடைந்து பின்பு சிகிச்சைக்காக தமிழகம் சென்று அங்கு 31.12.1990 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ரோய் அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் 31.12.2008 அன்று சிறிலங்காப் படைகளினுடனான முற்றுகைச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்’ அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதியும், கிளிநொச்சி கோட்ட கட்டளைப் பணியகத் துணைக் கட்டளைத் தளபதியுமான லெப். கேணல் ஈழப்பிரியன் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...
25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...