இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home ஒரு போராளியின் குருதிச் சுவடுகள் லெப்டினன்ட் கேணல் ரத்தி

லெப்டினன்ட் கேணல் ரத்தி

லெப்.கேணல் 

ரத்தி

கிருஸ்ணபிள்ளை சுபாஜினி 

கரவெட்டி, யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 30.06.1975

வீரச்சாவு: 15.05.1997

வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு


 

2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி.

 

 

எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒர் கிராமமான துன்னாலையில் பிறந்து வளர்ந்தவள் தான் ரத்தி. இவள் தனது கல்வியை வடமராட்சி வடஇந்து மகளிர் கல்லூரியில் கற்றுவந்தாள் இவள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தாள் இவற்றில் மட்டுமன்றி கலைநிகழ்ச்சிகளிலும் இவள் திறமை விளங்கியது. இவ்வாறாக இவளது கல்வி தொடர்கையில் எமது மண் அந்நியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட நினைவுகள் இவள் கண் முன் நிழலாடியது.

இவளின் ஒன்றுவிட்ட அக்காவான கப்டன் லீமாவும் இவளும் ஆருயிர் சகோதரிகள் இவர்களைப்பார்ப்பவர்கள் எவரும் உடன் பிறப்புக்கள் என்று தான் கூறுவார்கள் அப்படி ஒரு பாசப்பிணைப்பில் தான் இருவரும் வளர்ந்தவர்கள் இருவரும் வீட்டில் யார் முதல் இயக்கத்துக்கு செல்வது என்று சண்டைபிடிப்பார்கள் கப்டன் லீமா கூறுவார் “சுபா நீ நில் நான் போறன் நீ வீட்டில் ஒரே பிள்ளை” என்று அதற்கு றத்தியன் பதிலோ “இல்லையக்கா நான் போறன் நீங்கள் நில்லுங்கோ அனரி பாவம் என இருவருக்கும் வாக்கு வாதம் தொடரும்.

1990-ன் முற்பகுதியில் ஒரு நாள் காலை 8 மணியளவில் கப்டன் லீமா தனது பாசமான சகோதரிக்கும் கூறாது எல்லோருக்கும் மட்ல் எழுதிவைத்துவிட்டு தாய் மண்ணைக் காக்க பயிற்சிப்பாசறை நோக்கி செல்கின்றாள். லீமாவின் தாயார் அழுதவண்ணம் இருக்க அன்று காலை 10 மணிக்கு “அன்ரி அழாதேங்கோ நான் அக்காவை பார்த்துக்கொண்டு வாறன் என்று கூறிவிட்டு தானும் தாயகப் போரில் இணைந்து கொள்ள விரைகின்றாள். ஆம் இருவரும் மகளிர் படையணியின் ஏழாவது பயிற்சி முகாமில் தமது பயிற்சிகளை முடித்தார்கள் பின் இருவரும் வெவ்வேறு கடமைகளுக்காக இனுப்பப்படுகின்றனர்.

கப்டன் லீமா 1991ல் ஆனையிறவுச்சமரில் விரகாவியம் ஆகின்றாள் இச் சமரில் றத்தி மிகவும் நிதானத்துடனும் முகாமை அழிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் தனது குழுவையும் நகர்த்தி தானும் நகர்கின்றாள். குண்டுமாரி பொழியும் வேளைதனில் லீமாவின் உடன் பிறப்பென பாசம் வைத்த றத்தியின் உடலையும் குண்டு பதம் பார்த்து குருதி சொரியவைத்தது. அவள் மயக்கமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டாள்.

அங்கு மயக்கம் தெளிந்தவுடன் “என்ரை அக்கா ஒரு பிரச்சினையும் இல்லாமல் நிக்கிறாவா” என அருகில் நின்ற தோழியிடம் கேட்கின்றாள் தோழிகள் இவளின் பாச அக்காவின் இழப்பை இப்போது எப்படிக்கூறுவது என நினைத்து பின் ஒருவாறு தயங்கித் தயங்கி சகோதரியின் இழப்பை தோழி கூறுகிறாள் இவளின் குரல் மிகவும் உறுதியுடன் பின் வருமாறு ஒலிக்கின்றது. “என்ரை காயத்தை வேளைக்கு மாத்தி விடுங்கோ என்ரை அக்காவை சுட்டவனோடை நான்போய் சண்டை பிடிச்சு, சுடுவன்” என்று பின் இவளின் காயம் மாறினாலும் கை ஒன்று இயலாமல் போனது இவளது திறமையைப் பார்த்த மருத்துவப் பொறுப்பாளர் “றத்தி நீங்க மருத்துவப் பிரிவில கொஞ்ச நாளைக்கு நிதி வேலை செய்யுங்கோ” என்று கூறினார் அதற்கு அவள் “நான் மாட்டன் எனக்கு கை ஏலும் என்னை சண்டைக்கு விடுங்கோ” எனக் கேட்டு சண்டைபிடித்தாள் பின் எல்லோரின் வற்புறுத்தலினாலும் கொஞ்சக் காலம் செய்யிறன் என்று தனது கடமையைத் தொடர்கிறாள் இவளின் மனமோ மிகவும் இளகிய மனம் மற்றவர்கள் துன்புறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலை இவளுக்கு இல்லை அத்துடன் மிகவும் நகைச்சுவையாக கதைகள் கூறி எல்லோரையும் சிரிக்க வைப்பாள் இவளுக்கு கையுடன் வாயிலும் காயம் ஏற்பட்டு அதற்கு தையல் போடப்பட்டு இருந்தது.

நோயாளர் தங்களுக்கு என்ன விருப்பமான உணவு கேட்டாலும் உடன் எங்கு சென்றாவது வாங்கி வந்து கொடுப்பாள். இவளின் பணி மருத்துவப்பிரிவில் தொடர்கையில் எமது தளபதியால் புதிய போராளிகளுக்கு பயிற்சிவ ளங்க என பயிற்சி ஆசிரியராக இவள் நியமிக்கப்படுகின்றாள். புதிய போராளிகளை மிகவும் சிறந்த போராளிகளாகவும் உறுதியுடையவர்களாகவும் மிகவும் கண்டிப்புடன் வளர்த்தாள். பின் தான் சண்டைக்கு போக வேண்டும் என்று கேட்டு பல சண்டைகளில் பங்கு பற்றுகிறாள். இப்படியாக முல்லைச்சமரிலும் தனது குழுவுடன் இவளும் மிகவும் ஆவேசத்துடன் முன்னேறுகின்றாள். இறுதி மட்டும் இவள் சண்டை செய்கிறாள் இடையில் எமது விசேட தளபதி வோக்கித் தொடர்பு கொண்டு உன்ரை பக்கம் என்ன மாதிரி றத்தி என்று கேட்க “அக்கா நான் ஆமியை முன்னேற விடமாட்டன் அவன் அப்படி முன்னேறி வாற தென்டா எனரை உடலை தாண்டித்தான் வருவான் என்று மிகவும் உறுதியுடன் கூறுகிறாள்.

முல்லைச்சமரில் இவள் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தினாள். இவளின் திறமைகளையும் வழிநடத்தும் ஆற்றலையும் கண்ட விசேட தளபதி இவளை துணைத்தளபதியாய் நியமிக்கிறார். இவளின் திறமைகள் மென் மேலும் வளர்ச்சியடைந்த வண்ணம் இருந்தன, “ஜயசிக்குறுய்” படையெடுப்புத் துருப்புக்கள் மீதும் நெடுங்கேணிப்பகுதியில் 15.05.1997 அன்று இவளின் அணி மிகவுமு; உக்கிரமாக சண்டை செய்கிறது. இவள் ஓடி ஓடி சகல நிலைகளுக்கும் சென்று எல்லாவற்றையும் நேரடியாகக் கவனித்து சண்டை செய்கிறாள். மகிவும் ஆவேசத்துடனும் வேகத்துடனும் முன்னேறியவளின் உடலை எதிரியின் குண்டுகள் பதம் பார்த்தன. “என்னை ஒருவரும் தூக்க வேண்டாம் ஆமி வாறான் ஆடியுங்கோ” என்று கூறியவாறு தாயகப்பற்றுடன் குருதி சிந்த தாய் மண்ணில் தலைசாய்த்து முத்தமிடுகிறாள்.

 

நினைவுப்பகிர்வு: போராளி அ.பூரணி.
நன்றி – களத்தில் இதழ் (22.04.1999).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

21.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அன்பனா கோணேசமூர்த்தி சத்தியா வவுனியா வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் இசைமாறன் தவராசா குகதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் எழில்வாணன் ஜோன்பப்ரிஸ் எமில்ஸ்ரான்லி கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் கதிர் சண்முகசுந்தரம் பிரசாந் வவுனியா வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் சீரழகன் பேரம்பலம் இலம்போதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் பொன்னழகன் அமிர்தலிங்கம் திலீபன் கிளிநொச்சி வீரச்சாவு:...

20.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா) மகேந்திரன் சர்மிளா வவுனியா வீரச்சாவு: 20.09.2008   2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை போல் ஸ்ராலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   கப்டன் அருங்கவி (அருந்ததி) கிட்ணன் தேவகாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008   கப்டன் அருளழகன் கணேசன் வதனமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   மேஜர் கோதைநெஞ்சன் (அருள்) செல்வரத்தினம் மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   லெப்டினன்ட் அருள்மறவன் றொபேட்நேசநாயகம் கில்காந் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008   லெப்டினன்ட்...

கடற்கரும்புலி மேஜர் அன்பு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம்  மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல்...

கடற்கரும்புலி மேஜர் அன்பு.!

‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற...

Recent Comments