இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home போராளியின் அகத்திலிருந்து மேஜர் குமரனின் நாட்குறிப்பிலிருந்து......!

மேஜர் குமரனின் நாட்குறிப்பிலிருந்து……!

ஈகத்தின் ஊற்று
மேஜர் குமரன் தாயகத்தின் விடியலுக்காய் தளர்வறியா மனத்திண்மையாய் காலமதில் சுழன்றடித்த இளைய வீரன். ஈழத்தின் இராசதந்திரியாய் தரணியெங்கும் வலம் வருவான் என அவனது தாய்ப் பறவையும் சகோதரக்குஞ்சுகளும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த வேளையில் வல்லாதிக்க சத்திகளின் அருப கரங்களின் துரோகத்தனத்தாலும் பேரினவாதப் படைகளின் இடைமறிப்பாலும் பாக்கு நீரிணை யில் 08.02.1998 இல் அவனை இழந்தது தாயகம்.
அவர்  விட்டுச் சென்ற நாளேட்டின் பக்கங்களில் அவன் பொறித்திருந்தவற்றில் சில இங்கே விரிகின்றன. இக்கருத்துக்களில் சில உங்களில் பலருக்குஎங்கோ  கேட்டவையாக இருக்கலாம். ஆனால் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப் புறப்பட்ட வேங்கைளில் ஒருவனின் பண்பட்ட மனிதத்தின் பாங்கும், பாழ்படா தாயகப்பற்றும் இவ்வரிகள் எங்கும் விரவி நிற்பதை இதனை வாசிக்கின்ற ஒவவொரு மானிடத்தாலும் உணரக் கூடியதாக இருக்கும்
உண்மை.!
நல்ல மனிதனாக இருப்பது நல்லது
ஆனால்
நல்ல பெயருக்காக உண்மையில்
இருந்து விலகுவது
தற்கொலைக்கு ஓப்பானது!
விடுதலை விழி!
எனது கண் இருக்கும் வரை
எனது கைகள் எனது தன்னுணர்வு
இருக்கும் வரை தமிழீழ
விடுதலைக்கான போரை
எதிரியின் எதிரில்
நான்பிரகடனம் செய்வேன்
போர் வீரன்.!
ஒவ்வொரு நிமிடத்திலும்
புதிய யுக்தி
தானாகக் கண்டுபிடித்து
எதிரியை வியப்படையச் செய்கிறான்.
தொடர்ச்சி.!
விடிவை நோக்கிய எம் தமிழீழப் பயணத்தில்
மாவீரர்களின் தியாகத்தால்
விடிவை நோக்கிய பயணம் தொடர்கிறது
இவர்களின் இலட்சியப் பாதையில்
நாமும் பின் தொடர்வோம்
மாவீரர்களின் இலட்சியம்
மகத்தானது எனவே
அவர்கள் விட்டுச் சென்ற
இலட்சியத்தை பின்தொடர்வோம்
அதை பின்தொடராமல்
இருப்போமாயின் எமது தமிழ்த்
தலைமுறை அழிவதற்கு சமனாகும்
வீரத்தில் தாயகம் காண்!
வீரமில்லையேல்
வாழ்வு இல்லையாம்
விவேதம் இல்லையேல்
உயர்வு இல்லையாம்
தீரமில்லையேல்
தியாகமில்லையேல்
நாடு இல்லையாம் 
பிறப்பும் இறப்பும்!
பிறப்பவன் ஒருநாள் இறப்பது நியதி
ஆனால் வாழும் நாட்களில்
மானம் இழந்து வாழ்வதா
அடிமையாக வாழவதா 
அதை மாற்றி அமைப்போம்
மானைத்துடன் வாழ்வோம்
எழுந்து வா தமிழா
தமிழீழம் பெறப்போராடுவோம்
தமிழீழம் கிடைத்ததும் – எமது
வாழ்வை சந்தோசமாக கூடிக் கழிக்கலாம்.
காதல் !
நான் காதலிப்பது
எங்கள் தாய் நாட்டை
எனவே எந்த நேரத்திலும்
எனது உயிரை அர்ப்பணிக்க
தயாராக உள்ளேன்.
வெளியீடு :எரிமலை இதழ் 2004
மீள் வெளியீடு மற்றும் இணைய தட்டச்சு :வேர்கள்  இணையம் 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

Recent Comments