மெளனம் கலைத்து
வெடித்தது துப்பாக்கி.
வெடித்த துப்பாக்கியின்
கந்தகப் புகை எழுதிச்
சென்ற
செய்தி அடிமையாய்
அற்பத்தனமாய்
சிங்கள பௌத்த
பேரினவாத அரசின் திட்டமிட்ட அராஜகச்
செயலுக்குப் பலியாகிப் போனவர்கள் எங்கள்
நாதனும் கஜனும்
நீண்ட சிறீலங்கா அரசின் படுகொலைக்
பிரான்ஸ் தேசத்தின் லாசப்பல் தெரு இத்தத்தால்
சிவந்துபோனது. இரத்தச் சிவப்பில் வீழ்ந்து
கிடந்தவர்கள்
மனித நேசத்தின் மகத்தானை முத்திரைகள் இரண்டு
எமது தேசத்தின் முழுமையான விடுதலைக்காக
முட்களிடையே மலர்ந்த ரோஜாக்கள் இவர்கள்
வசதிகளையும் வாய்ப்புக்களையும் தேடி ஓடாது,
வாழ்க்கையை
அர்த்தமாக்கிய உன்னத வீரர்கள் இவர்கள் .
எம் நேசத்திற்குரியவர்களே,
நினைத்துப் பார்க்கிறோம்; ஒவ்வொரு கணமும்
மக்களின் விடிவை மனதில் நிறுத்தி நீங்கள் பதித்த
சுவடுகள் எங்கள் கண்முன்னே நிற்க எங்களின்
இதயம் கனக்கிறது. கனத்த இதயத்துடன் உங்கள்
நினைவுகளை நெஞ்சினிைல் நிறுத்தி, ஆழச்
செல்வோம்
உங்களின்
முன்மாதிரிகளை
பதாகைகளாகச் சுமந்து
தொடர்ந்தம் செல்வோம்
இதுவே, நாங்கள்
உங்களுக்குச்
செலுத்தும்
வீரவணக்கங்களாகும்.
எமது அன்பார்ந்த
மக்களே.
நேற்றைய தினத்தினை திரும்பிப் பாருங்கள்
எதிரி எம் தோளில் ஏறி நின்று எக்களமிடுகிறான்
எங்கள் முன்னோர்களின் எலும்புகளைக் காட்டி .
அடிமைகளின்
எலும்புகள்” எனக் கூக்குரலிடுகிறான்
இவைகளை எதிரித்து “நாங்களும் இந்தப்
பூகோளத்தின்
சுதந்திரப் பிரஜைகள்” என ஓயாது குரல் கொடுத்த
நாதனும் கஜனும் மரணித்த செய்தி உங்கள்
நெஞ்சங்களை உலுப்பியிருக்குமே
உரிமை வேண்டி, உயிரை ஈர்ந்தவர்
சொல்லிச் சென்ற செய்திதான் என்ன?
ஒன்றை மட்டும் நினைவிற் கொள்வோம்
அடிமையாய் வாழ்வதைவிட அற்பத்தனமானது
வேறெதுவுமில்லை. அடிமை வாழ்வைக் களையும்
வரையும்
அனைத்தும் எமக்கு இரவல்தான்.
உலகத் தமிழர்கள் எல்லாம்
விடுதலைக்காய் ஒன்றுபட்டார் என்ற செய்தி
கல்லறையில் தூங்கும் எம்மவர்க்குக் கேட்கட்டும்
வெளியீடு :-எரிமலை இதழ்
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”