ஈழம் காக்க ஈகம் செய்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்கம்.!
2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது. அவருக்கு வயது 26 சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கொழுவைநல்லூர். சென்னை அருகே கொளத்தூரில் அவரது சகோதரி தமிழரசியின் வீட்டில் தங்கிப் பணி செய்தார்
முத்துக்குமார் அவர்களின் நீளும் நினைவுகள்:
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”