1981 மே 31 இரவு ஆரம்பமாகி தொடர்ந்த தமிழின அடையாள அழிப்பின் ஆவணவமாக இந் நூல் யூலை 1981 இல் வெளி வந்தது.
யாழ் நூலகம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடெரிப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம், நாச்சிமார் கோயில், வீடுகள், கடைகள், ஈழநாடு அலுவலகம், பொதுச் சந்தை எரிப்பு, கொலைகள் கொள்ளைகள் என அந்தநாளின் அழிப்பின் பல விடயங்களை இந்நூல் படங்களோடு ஆவணப்படுத்தியுள்ளது.
இந்நூலை “24 மணிநேரம்” ஆசிரியர் நீலவண்ணன் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே 1977 கலவரத்தின் ஆவணப்பதிப்பொன்றினையும் இவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழப் போராட்ட வரலாற்றில் இந்நூல் மிக முக்கியமானதொரு ஆவணமாகும்.
மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது மின்னூல் வடிவம்