இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தாயக கவிதைகள் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை .!

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை .!

1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை வேர்கள்  இணையத்தில் மீள் பதிவு செய்கின்றோம்

நாம் அணிவகுத்துள்ளோம்…
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்…
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமதுஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்…ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்…
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்…
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன…

எமது படையணி விரைகிறது…
எம தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்…
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்…!

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

ஆக்கம் :திரு. வே.பிரபாகரன்
பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

-கரும்புலிகள் நாள் 2018 சிறப்பு  பதிவுகள் 

  “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ஒளிரும் ஓவியம் கடற்கரும்புலி மேஜர் சிறி.!

அந்தச் செய்தியைக் கேட்டதும் என்னுள் இனம்புரியாத ஒரு அதிர்வு. சண்டைக் களங்களில் இப்படி நடப்பது வழமைதான். ஆனால் அவனுக்கு ஏற்பட்டதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவனது கண்கள் காட்சிகளை உள்வாங்க, எண்ணங்கள் எழுச்சியூற,...

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் இன்றாகும்.! திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்...

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்...

நெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.!

அவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள். சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா...

Recent Comments