இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள் என்ர மகன் நாட்டுக்காத்தானே செத்தவன் நினைக்க பெருமையாக இருக்கு.!

என்ர மகன் நாட்டுக்காத்தானே செத்தவன் நினைக்க பெருமையாக இருக்கு.!

“என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை.” – மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள்.
அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்…….” அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்… முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும்போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி” மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கிவிட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.

இப்படித்தான் இன்னும் ஒரு நாள்…….
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் ஷராங்கிற்குள் குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.
தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை.
காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்புபோல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்றுபோனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ‘ அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டீசு கொடுத்து கொண்டு நிக்கிறான்.”
அம்மாவுக்கு உள்ளாரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள்.

அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப் படுவாள். இது வழமையாகிப் போனது.
இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. ‘பயிற்சி முகாமில் நிக்கின்றான்” என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள்.
‘அது ஒபறேசன் லிபறேசன் காலம் அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்….” ‘திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது.
பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.
அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்….
முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்…. என்ர பிள்ளையும்…..
அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி… அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக்குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்…… பிறகு வருவினம்..”

ம்…..ம்….. என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்……..
‘அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு”

நினைவுப்பகிர்வு :கரும்புலி கப்டன் மில்லரின் தாய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments