இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home போராளிக் கலைஞர்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் மாவீரர் புரியும் சத்திய யுத்தம் .!

மாவீரர் புரியும் சத்திய யுத்தம் .!

மாவீரர் காண்பது கணவு அல்ல: அவரது பெருமண விரிவு:
ஆன்ம விசவம்: யதார்த்தத்தின் அகாலிப்பு: காலம்
சுடத்து நிற்கும் உண்மையின் விஸ்வரூபம். கடந்த காலத்தையும்,
எதிர்காலத்தையும், பழமையையும், புதுமையையும் இணைத்துதிற்கும்
மணப் பாலம், தமிழ்த் தேசியம் என்ற வரையறையான, எல்லைக்
கோட்ட நாம் வரைந்த போதிலும், “யாதும் அளரே யாவரும்
கேளிர்” என்ற பரந்த நாகரிகத் தளத்தில் எழுந்தது அவர்களின்
எண்ணம். இதனைத்தான் விடுதலை என்போம்.
 
காலம், இடம் கடத்து நிற்கும் மாவீரரது மனஎல்லைப் பரப்பின்
காரணமாக அவர்கள் வாழும் போது தன்னலப் பற்றற்று, சுயத்தை
வென்று வாழமுடிகிறது: போராட முடிகிறது. மரணமும் அவர்க
ளுக்கு இன்னொரு வாழ்வாக இருக்கிறது. அவர்களது வாழ்வும்,
மரணமும் காலப் பெருவெளியில் நிதர்சன நிகழ்வுகளாகவே நிலை
பெறுகின்றன. எனவேதான் அவர்கள் சிரித்துக்கொண்டு தீக்குளிக்
கிறார்கள். மரணம்  அவர்களைத் தீண்டுவதில்லை .
 
மக்கள் அவர்களைப்பற்றி பல்வேறு விதமாகப் பேசுவார்கள் .
காவல் தெய்வம் என்று வணங்குவார்கள். தம் முற்றத்தில் பூக்கும்
மலர்சுளென இயற்கை வழிபாடு செய்வார்கள். சூரியனென்றும்,
சத்திரென்றும், விடிவெள்ளி என்றும் பிரபஞ்ச முழுமைக்குள்
வைத்துப் பார்ப்பார்கள். தம் மண்ணின் அனைத்துப் பொருள்களிலும்
அவர்கள் நிறைந்திருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். மாவீரரை
நிலையான, அருவ, ரூப வடிடிவங்களில் பரவிப் போற்றுவார்கள்.
மாவீரர் நினைவு, உறுதியையும், சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி
முன்னேறிச் செல்வதற்கான உத்வேகத்தையும் தருவதால், மணங்
களில் ஒளியாக ஏற்றி வைத்திருப்பார்கள். தங்கள் சந்ததிகளும்
சிறப்புடன் வாழ மாவீரர் உரம் தருவர் என்ற நம்பிக்கையில்,
அவர்தம் நினைவைத் தொடர்ந்து வரும் பரம்பரைகளுக்கும்
மணவழி மாற்றுவார்கள். எனவே மாவீரர் நினைவு, சத்தியத்தின்
இருப்பாக நிலைத்து விடுகிறது.
 
 
தமிழீழத் தேசியக் களரியில் இது நடைபெற்ற போதும்,
விடுதலை என்ற நிலையான உண்மையை அடைவதற்கான
மாவீரரது தர்ம யுத்தமாக இப் போராட்டம் அமைகிறது. எனவே
எமது விடுதலைப் போராட்டத்துக்குத் தோல்வி என்பதே இல்லை.
இதில் ஈடுபடும் எமக்கும் வெற்றியே தவிர வேறில்லை.!
 நினைவுப்பகிர்வு :- திலகர்
சூரியப்புதல்வர்கள் 

மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments