இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மாவீரர்கள் மாமனிதர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.!

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.!

ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாகசர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகின்றன.

பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான்உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே! நித்திலம் நிலவும்வரை அவர்கள் வாழ்வு நிஜம்.

அப்படியான ஒருவர் தான் காலத்தை வென்று வாழும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள்.

மார்கழித் திங்கள் 25 ஆம் நாள் உலகப்பெருநாள். அந்த உன்னதத் திருநாளன்று தான் இந்த உத்தமன் தன்னினத்திற்காக உயிர்நீத்து தியாகியாகினார். புனிதனை நினைந்து உருகிய வேளையில் புனிதம் நிறைந்த இடத்தில் தன் இன்னுயிரை ஈகம் செய்து ஜோசப் பரராஜசிங்கம் மாமனிதரானார்.

தன் வாழ்வு துறந்து பிறர்க்கென வாழும் பெருந்தகைகளால் வாழும் இவ்வுலகென்பார்கள். எத்தனை அழிவுகளைச் சந்தித்தபோதும் இந்த மண்வாழ்கிறதென்றால் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் போன்ற மாமனிதர்களது தியாகத்தாலேதான் என்றால் மிகையாகாது.

தமக்கென முயலா தோன்தான்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே!

மேற்படி கூற்றுக்கு இப் புறநாநூற்றுப் பாடல் சான்று பகிர்கின்றது.

அவரோர் அரச ஊழியர். சினிமாத் துறை வாணிபத்தில் சிறப்புற்று விளங்கியவர். இவ்வளவோடு நின்றிருந்தால் கோடீஸ்வரராக வாழ்ந்திருப்பார்.

 

கொள்கை கோட்பாடுகள் நிறைந்த இலட்சியம் கொண்டது தமிழ்த் தேசிய அரசியல். இது மலர்ப்படுக்கை அரசியல் அல்ல. மாறாக இது வோர் முட்படுக்கை. முட்படுக்கை அரசியலை முழுமனதோடு ஏற்றுக்கொண்டே நெருப்பாற்றைக் கடக்கமுன்வந்தவர்.

1934 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26 ஆம்நாள் இந்த மண்ணில் தோற்றம் பெற்றவர் 1952 களில் தன்னுடைய 18 ஆவது அகவையில் தந்தைசெல்வாவின் அரசியல் பாசறையில் இணைந்துகொண்டார்.

தனிச் சிங்களமொழிச் சட்டத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு தந்தையவர்கள் தமிழ்த் தேசம் தழுவிய மிகப்பெரிய அறவழிப்போரை ஆரம்பித்தார். அன்றைய நாள் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருமண தினமாக விருந்தபோதும் அந்த அறப்போரில் களமாடி மகிழ்ந்தாரென்றால் அவர் கொண்டிருந்த இனப்பற்றை என்னவென்று சொல்வது.

அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பாரிய சவால்களை இவ்வரசியல் வாழ்வில் எதிர்கொண்டார்.

1972 ஆம் ஆண்டு இலங்கையைக் குடியரசாக்கியது ஈழத்தமிழினத்தை அரசியல் அனாதையாக்கியது. அறப்போர் தீவிரமடைந்தது. அறப்போரின் வெக்கை தாங்கமுடியாது அப்போதிருந்த சிறிமாவோ அவர்களின் அரசாங்கத்தின் மட்டக்களப்பு அரசியல் அதிகாரி ஜோசப் அவர்களை நுவரெலியா மாவட்டத்திற்குத் தூக்கியெறிந்தார். ஆனால் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோ அரசாங்கப் பதவியை உதறித் தள்ளி முழுநேர அரசியலுக்குள்காலூன்றினார்.

இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்தகாலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார் என்ற காரணத்திற்காக ஜோசப்பரராஜசிங்கம் அவர்களை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றனர்.

தங்களது தவறுக்காக வருந்தி அவரை விடுவித்தனர்.அப்போது சொந்தங்களெல்லாம் “வேண்டாம் இந்த விபரீத அரசியல்அதிலிருந்து ஒதுங்குங்கள்” என்று அவரை வற்புறுத்தினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையெல்லாம் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அணியினர் தங்கள் பகுதிக்கு அழைத்தனர்.

“வடகிழக்கென்ற தமிழ்த்தேசிய அரசியல் இனி எமக்கு வேண்டாம். மட்டக்களப்பென்ற அளவோடு இனி அரசியல் அமைய வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

“இயக்கங்கள் உருவாகும் முன்பே தந்தை செல்வாவின் தலைமையையேற்று அரசியலுக்குள் வந்தவன். வடகிழக்கு என்ற தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து இம்மியளவும் என்னால் விலக முடியாது” என்று ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் பதிலுரைத்தார். அன்றிலிருந்து பாரிய கொலை அச்சுறுத்தல்களுக்குஆளானார். இதற்கெல்லாம் சற்றும் மசியாதவராகத் தேர்தலில் போட்டியிட்டார்.

தங்கத்தை உரசித் தரம் பார்ப்பதுபோல் அவரது இலட்சிய வேட்கைக்கு ஏற்பட்ட சோதனைகள் இவையாகும்.

இவை எதற்குமே அஞ்சாத நெஞ்சினனாக அரசியல் புனிதம் காத்தார். தானேற்ற இலட்சியத்திற்கும் தலைமைக்கும் விசுவாசமாக வாழ்ந்ததனால் தந்தை செல்வாவால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமை அணியான தமிழர் விடுதலைக் கூட்டணியின்  தலைவரானார். தான் மட்டுமல்லாது தனது மனைவி சகிதம் அறப்போர் அரசியல் கண்டபொருமைக்குரியவர்.

சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளோடு நெருக்கமான உறவுகளைப்பேணி அவ்வப்போது நடைபெற்ற மனிதவுரிமை மீறல்களையெல்லாம் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். பல படுகொலை அத்தியாயங்களைக்கண்டது தமிழர் விடுதலைப்போராட்ட வரலாறு. அத்தனை படுகொலைகளையும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளில் பதிவு செய்தவர் அவர்.

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் நடந்தபோது அவர் ஓயாது சற்றும் தளராது மேற்கொண்ட அழுத்தத்தினால் அப்போதிருந்த பிரேமதாச அரசாங்கம் அந்தப் படுகொலைகளை விசாரிக்க விசாரணைக்குழுவை அமைத்தது.

தமிழினம் சந்தித்த அனர்த்தங்களிலிருந்து மக்களுக்குச்சற்று ஆறுதலளிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை வரவழைத்தவர். அவ்வமைப்பின் முதலாவதுகூட்டம் அவரது இல்லத்திலேயே நடைபெற்றது.

மத்தியமுகாம் பகுதியிலே கோணேஸ்வரி என்ற தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவரது பெண்ணுறுப்பிலே குண்டு வைத்துத் சிதைக்கப்பட்ட கொடூரமறிந்து சீற்றம் கொண்டவர் உலகரங்கிலே மட்டுமல்லாது இங்கும் மிகவும் காரசாரமாகக் கண்டித்துக்குரலெழுப்பிக் கொண்டிருந்தார். அதன் நிமித்தம் அந்த விசாரணை நடைபெற்ற கல்முனை நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் மண்ணுக்கு விடை கொடுக்கும்வரை ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்என்பது குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

ஐ.நா.ச.இன் மனிதவுரிமை ஆணைக்குழு ஈழத்தில் போர்க்குற்ற விசாரணைவேண்டி நிற்கும் இந்தக்காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலன் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் இல்லாதிருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெரும் கவலையாகும்.

பாராளுமன்றப்பிரவேசம்

1989 இல் நடைபெற்றபொதுத் தேர்தலில் தோல்வியடைந்தபோதும் இடையிலே ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தினால் அவர் பாராளுமன்றப் பிரதிநிதியானார்.

அவர் ஆற்றிய அளப்பரிய சேவையினால் 1994 ஆம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 48000 வாக்குகளுக்கு மேல் பெற்றுமட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியாக அவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

மூன்று மொழிகளிலும் விற்பன்னர். மொழி ஆளுமைமிக்கவர். பாராளுமன்றத்தில் அவரது கட்சியின் பிரதம கொறடாவாகப் பணியாற்றினார். அவரது பேச்சுக்கள் அனைத்தும் மக்களது வரவேற்பைப்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றல்லாமல் அமைச்சர்கள் பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரதும் நல்லெண்ணத்தைப் பெற்றவர். அவரது இறுதி நிகழ்வில் பங்குகொண்ட அனைவரும் அவரை அவ்வாறே புகழ்ந்துரைத்தார்கள்.

 

 

இயல்பாகவே தன்னிடமிருந்த எழுத்து வல்லமையோடுபத்திரிகைத் துறையினுள்ளும் தன்னைச் சேர்த்துக்கொண்டு இதழியல் சேவையைத் தொடர்ந்தார். “சுகுணம் ஜோசப்” என்ற பெயரில் அப்போது பிரபல்யமாக விளங்கிய தினபதி சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் பத்திகள்புனையத் தொடங்கினார். ஆய்வுகள் நிறைந்த பத்திகள் வாசகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றிருந்தன.

எழுதுவதோடு விட்டுவிடாமல் கிழக்கிலங்கைப்பத்திரிகையாளர் சங்கம் கண்டு அதன் தலைவராகப் பணிபுரிந்து இதழியல் சேவையின் உயர்வுகண்டவர் 71 ஆண்டுகள் இம்மண்ணிலே தமிழர்க்காக வாழ்ந்து தமிழ் மண்ணிலே வித்தாகிய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் பல்லாளுமை கொண்ட மக்கள் தலைவன். இப்பேற்பட்ட விசுவாசம்மிக்க தலைமையைப் பறிகொடுத்த தேனாடு அப்படியொரு தலைவன் வருகைக்காகக் காத்திருக்கிறது!.

நினைவுப்பகிர்வு:- வே.தவராஜா. (25.12.2015)

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments