பாடல் தந்த சிட்டு
இன்று பாட்டில் வாழும்
பண்ணாகி போனான்
தாளம் போட்ட எம்மை
தவிக்க விட்டு சென்றான்…..
பாடல் என்ற சொல்லால்
இவனை அளந்திட முடியாது
ராகங்கள் பல சொல்லி
அலசவும் முடியாது
ரசனைக்காரன் நல்ல பேச்சுக்காரன்….
பாரே போற்றும்
பெரும் சேனைதனில்
இவனோ பாட்டுக்காரன்
பாடினான் பாடினான்
எம்துயர்தனை பாடினான்….
பகை தரும் இடர்தனை சாடினான்
எத்தனை பாட்டுக்கள்
இதில் எதை நான் ..குறித்து சொல்ல
இல்லையென்றால் எதை நான் குறை சொல்ல
அத்தனை பாட்டும் உயிர் தொடும்….
விடும் மூச்சே பாட்டான
விந்தைகாரன் இவன்
கந்தகம் சுமந்த மேனியரை
பாடியே இவன் புகழ் உயர்வானது
இவன் பாட்டை
முணு முணுமுக்கா
வாய் ஏது எனக்கு
இன்னும் சொல்ல போனால்
இவன் பாட்டை கேளா பொழுதேது….?
நாதம் ஒன்றை
தொலைத்து விட்டோமே
வந்த குண்டு
வீழ்ந்ததால் வந்த வினை
வாய் விட்டு அழுதாலும்
போகல துயர் இன்றும்
இல்லை என்றாகி
போய்விட்டான் பாடகன் சிட்டு ..
ஆதவன் . 01.08.2013
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”