இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தாயக கவிதைகள் புதுயுகத்தின் போர்ப் பிழம்பு.!

புதுயுகத்தின் போர்ப் பிழம்பு.!

நினைவலைகள் எப்போதும்

உங்களையே நினைத்திருக்கும்

பனைக்கீடாய் உழைக்கும்

தம்பிகை பரபரக்கும் குறிபார்க்கும்.

பள்ளத்துள் வீழ்ந்த தாக!

யார் சொன்னது? காட்டு!

பள்ளத் துள்பதுங் குவது

பைந் தமிழ் இனம் மீட்கவே!

வெல்ல முடியாதது எது? உனக்கு!

நீ ஒரு சுபாஸ் சந்திரபோசு.

அள்ளக் குறையாத அறிவுக்

களஞ்சியம்; நீ ஒரு செண்பகம்.

தென்னன் புகழ்பாட வந்த நல்

தேர் பாகன்: தம்பி மறவன்!

என்னென் பேன் அவன் ஆற்றல்

போற்று தலுக்குரிய புதுயுகம்.

மரித்து விடவர்கள்: மீண்டும்

உதித்து விடுவார்கள்! காலை!

எரிந்து விட்டவர்கள் ஈழ

மறவர்கள் குதித்து! வருவார்….. நாளை!

தமிழீழம் மலர்க!

தயாகமாகுக!

(1997 வரையப்பட்ட கவிதை)

– கவிஞர் கு.கோ. இராசன்

தமிழகம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

Recent Comments