இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்கள நாயகர்கள் பிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.!

பிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.!

சமராக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோ. செ. யோகி -அவர்கள் 
பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களுடைய  கள நினைவை  பதிவு செய்துள்ளார்   குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2019) மீள்வெளியீடு   செய்கின்றோம்  .!

 

முல்லை மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகக்கொண்ட கந்தையா பாலசேகரம் எனும் இயற்பெயரைக்கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் 20.05.2008  அன்று மாரடைப்பால் சாவடைந்தார் என்ற செய்தி கேட்டு தமிழ்பேசும் மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
1984-இல் இருந்து ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் போராட்டமே வாழ்வு என வாழ்ந்த ஒரு வீரனே பிரிகேடியர் பால்ராஜ்.
இன்று களமுனைத் தளபதிகளாக இருக்கும் பானு, தீபன், சொர்ணம், வேலவன், கீர்த்தி,
வசந்தன், ராம், யாழினி, துர்க்கா என யாரைக் கேட்டாலும் பால்ராஜ் அவரைப் போன்ற
ஒரு வீரனைச் சந்திப்பது அரிதிலும் அரிதே எனக் கூறுவர்
ஒரு வீரன் கண்கள் சிவந்து யானைப்பிணைத்தின் நடுவே தன் கையில் வேலை ஊன்றி
பகைவர் வெள்ளம் போல் வரவும் அசையாது நின்றான் என ஒரு வீரனின் வீரத்தைப்
புறப்பொருள் வெண்பாமாலை பேசும். அத்தகைய வீரத்தை எருமை மறம் என்று
அழைப்பர். இத்தகைய எருமை மறத் தன்மையை மேஜர் பசீலன் கொண்டிருந்தார் என மேஜர்
பசீலனை நினைவுகூர்வோர் சொல்வதுண்டு . ஒரு முறை மூத்த உறுப்பிரான  குட்டியோடு பசீலன் குறித்துப் பேசியபோது பசீலன் என்றால் பால்ராஜ் இருவரையும் அந்த விடயத்தில் பிரித்துப் பார்க்க முடியாது எனக் கூறினார்
கொக்குத்தொடுவாயிலிருந்து சிங்களவனின் வன்பற்றிப்பால் 1990-களில் இடம்பெயர்ந்த பல
குடும்பாங்களில் பால்ராஜுவின் குடும்பமும் ஒன்றாகும். 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில்
லெப்காண்டீபனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பால்ராஜ் போராளிகளுக்கு உணவு எடுத்துத்தரல் போக்குவரத்து ஒழுங்கு செய்தல் போன்ற பனிகளை சபா, சசி போன்றோருடன் இணைந்து செய்து வந்தார். 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தன்னை  ஒரு போராளியாக இணைத்துக்கொண்டார்
தமிழ் விவசாயிகள், ஊர்மக்களிடமிருந்த சொட்கண்களை (Shotgun) அரசு திரும்பப்பெற
முயன்றபோது காண்டீபனின் கட்டளைக்கமைய பால்ராஜூம் ஏனையோரும் அவற்றைப் பறித்து எடுத்தனர்
24.12.1984 அன்று ஒரு உழுபொறியில் புதிய போராளிகளோடு 50 சொட்கண்களை ஏற்றிப்
புதுக்குடியிருப்பிலிருந்து முழங்காவிலிற்கு அவற்றை நகர்த்தும் பணியைக் காண்டீபனுடன் இணைந்து வெள்ளை , இடிஅமீன் , பால்ராஜ் ஆகியோர் மேற்கொண்டனர். உழுபொறி ஒதியமலை வழியே சென்றபோது சிங்களப் படையின் பதுங்கித் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலின்போது பால்ராஜ் விழுப்புண்ணடைந்தார். காசனும் இன்னுமொருவரும் உயிர் தப்பினர். விழுப்புண்டைந்த பால்ராஜ் சிகிச்சைக்காகத் தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் 9 ஆவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார் பயிற்சி முடிந்து இங்கு வந்த பால்ராஜ் இங்கிருந்த போராளிகள் அனியொன்றுக்குச் சமையல் செய்து உணவுவழங்கும்பனியை மேற்கொண்டார். அவ்வப்போது உணவுக்காக நெருப்புக்குச்சி மருந்தைப் பயன்படுத்தி காட்டிரஜ் கட்டி வேட்டையாடியும் வந்தார். இவரது நல்ல பணியைப் பார்த்து லெப்.கேணல்
அப்பையா அப்போது அவரிடமிருந்த வெடிபொருட்கள் காக்கும் பனியை இவரிடம் ஒப்படைத்தார் அங்கு குவிந்திருந்த காட்டிரஜ்களை கண்ட பால்ராஜ் அவ்வப்போது அவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடினார். நெருப்புக்குச்சிகளைக் கேட்காமல் இவன் எப்படி வேட்டையாடுகிறான் எனக் குழம்பிய அப்பையா அண்ணர் உண்மையைக் கண்டறிந்ததும் கடுங்கோபமடைந்து தனக்குக் கடுமையான தண்டனை தரவேண்டும் எனக் கூறியதாகப் பின்னாளில் பால்ராஜ் அவர்கள் அந்த நிகழ்ச்சியை அவருக்கே உரிய சிரிப்புடன் கூறுவதுண்டு
இந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் தலைவரின் மெய்க்காவல் அணியிலிருந்த பசீலன் இங்கு வந்து சேர்ந்தார். அவர் பால்ராஜை அடையாளங்கண்டு தன்னோடு தனது மெய்காவலர் போன்று வைத்துக்கொண்டார். சமைத்துக் கொண்டிருந்த தன்னோடு பேசிய பின்பு ஏறு உந்துருளியில் எனத்  தன்னை அழைத்துக்கொண்டு கிளிநொச்சிக்குச் சென்ற பசீலன் அங்கிருந்த சிங்களப்
பாசறையின்வேலி அருகே சென்று நின்று மிகுந்த துணிைச்சலுடன் வேவுபார்த்த நிகழ்ச்சியை
பசீலனின் துணிச்சல்குறித்துப் பேசும்போது பால்ராஜ் நினைவுகூர்வதுண்டு
பசீலனிைன் தலைமையில் முந்திரிகைக்குளத்தில் சிங்களக் குடியேற்ற முயற்சியில்
ஈடுபட்ட சிங்களப் படையினர் மீது நடத்தப்பட்டதாக்குதல் அந்தக் காலத்தில் இடம்பெற்ற
மிகப் பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். இந்தத் தாக்குதலின்போது 13 ஏ. கே
சுடுகலனகள்  கைப்பற்றப்பட்டன. இதன்போது ஒரு படையினர் மட்டும் ஒரு பள்ளத்தில்
நிலையெடுத்து குனிவதும் நிமிர்வதுமாகச் சுட்டுக் கொண்டிருந்தான். அவனைச் சுடு
எனப் பசீலன் கட்டளையிட அந்தப் படையினன் குனிந்து நிமிரும் விநாடிக்குள் பாய்ந்து சென்று பால்ராஜ் அவனைச் சுட்டுக் கொன்றார் காடும் காடு சார்ந்த வாழ்வும் வேட்டையாடும் இயல்பும் சிங்களவரின் கொடுமையால் ஏற்பட்ட வன்மமும், முதலில் பசீலனிைதும் பின்னர் தேசியத் தலைவரிதும் நேரடி வழிகாட்டலும் பால்ராஜை ஒரு மாபெரும் வீராக்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இக்கட்டான சூழ்நிலைகளில் அந்த சூழலை மாற்றி அமைத்த அணிகளின் தளபதியாக அவர் இருந்தார் இந்தியப் படையின் வருகையின் பின்பு மணலாற்றில் தலைவர் நிலைகொண்டிருந்த போது பால்ராஜக்கும் தலைவருக்குமான  அறிமுகம் ஏற்பட்டது. பால்ராஜின் ஆற்றலைத் தலைவர் அடையாளங்கண்டு முதலில் அவரை முல்லை மாவட்டத்தின் தளபதியாக்கினார். பின்னர் வன்னி மாவட்டத் தளபதியாக்கினார்.
1200  பேர் கொண்ட தாக்குதல், 300   பேர் கொண்ட கனவகைப் படைக்கல அணி ஆகியவற்றை
உள்ளடக்கி10.04.1991 -இல் உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப் படையணியான சாள்ஸ்
அன்ரனிப் படைப்பிரிவின்  தளபதியானார் 
வன்னிவிக்கிரம 02 எதிர் நடவடிக்கை , வன்னி விக்கிரம 03, ஆ.க.வெ சமர், பலகேய 03, மின்னல்
யாழ்தேவி, ஜெயசிக்குறு. ஓயாத அலைகள் 01, 02,03 என அவர் கலந்துகொண்ட பெருஞ்சமர்கள் பல உண்டு
கரந்தடி படைவீரானாக அவர் பாங்குகொண்ட தாக்குதலகளை பலவாகும். இந்தியப் படை
இங்கிருந்தவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கூடுதலாக ஏறத்தாழ 400 படைக்கலாங்கள் இந்தியப் படையிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட
பிரிகேடியர் பால்ராஜின் ஆற்றலை வெளிச்சம் போட்டுக் காட்டிய சமர் இத்தாவில் பெட்டிச் சமராகும் ராசசிங்கம், கோபித். பல்லவன், யாழினி, துர்க்கா , றோய், இளங்கீரன், நேசன் போன்ற தளபதிகள் உள்ளேயும் சூசை, பானு, ராஜு, தீபன், அக்பர் போன்ற தளபதிகள் வெளியேயும் இருந்து ஆதரவு தர நடத்தப்பட்ட இந்தச் சமரின் அச்சானியாக இருந்தவர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களே
இந்தப் பணி இவனால் தான் முடியும் எனத் தீர்மானித்து தலைவர் அவர்களால் இத்தாவில் பெட்டிச் சமரை வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் தரப்பட்டது
02.0.3.2008  அன்று சிங்களப்படை கண்டல் பகுதியால் ராங்கிகளோடு உள்ளே நுழைந்த போது
பிரிகேடியர் பால்ராஜை உயிரோடு பிடிப்போம் அல்லது சவமாக எடுப்போம் எனக் கொக்கரித்தது. அவர் தலைமையில் நின்ற அணியின் வீரமிகு போராலும் பின்புலத்திலிருந்த ஆட்டிலறி மோட்டார்களின் சூட்டாதரவாலும் சிங்களப்படைநிலைகுலைய அவரை ராாங்கியில் தேடிவந்த சிங்களப்படை அவரருகே 20 ,30  மீற்றரில் நின்று கொண்டு எப்படித்தப்பிச்செல்வது எனத் தெரியாது சிதைவுண்டு. அழிவுண்டு தப்பியோடியதை யாரும் மறக்க முடியாது .
 
எதிரியின் பெரிய அளவிலா மோட்டார் ஆட்டிலறித் தாக்குதல்களுக்கு இடையே ராங்கிகள்
உள்நுழைந்து அவருக்கு அருகே நின்ற குழுவில் விழுப்புண்ணடைந்தோரைத் தூக்க உதவிய
வண்ணம், கட்டளையைத் தளர்வின்றி வழங்கிய வண்ணம் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” எனக் குரலெழுப்பி வீரர்களுக்கு உற்சாகமூட்டி அசையாது, குலையாது அதாவது இடுக்கணழியாது வெற்றி அல்லது வீரச்சாவு என ஓர்மத்துடன் பிரிகேடியர் பால்ராஜ் நின்றார்
இதன்பின் 10.04.2003 அன்று53 டிவிசனின் முழுப் பிரிகேட்டும் (450 பேர்) ஏ-9 வீதியைத் திறக்க
ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சியும் இவர் தலைமையிலான அனிையால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இவ்வாறு வீரத்திற்குக் குறியீடாக வாழ்ந்த அடங்காப்பற்றின் மைந்தனை, தமிழீழ விடுதலைப் புலியை நினைவுகூரும் இந்நாளில் தமிழீழத்தை வென்றெடுத்து அந்த வீரன் பிறந்த கொக்குத்தொடுவாயில் அவனுக்கு நினைவுக்கல் எடுப்போமென உறுதியெடுப்போம்
நினைவுப்பகிர்வு :  யோ. செ. யோகி
(சமராக்கப் பிரிவுப் பொறுப்பாளர்)
வெளியீடு :சமர்கள நாயகன் நூல் (வெளியீட்டு பிரிவு ,அனைத்துலக தொடர்பகம் ,தமிழீழ விடுதலை புலிகள் )
மீள் வெளியீடு மற்றும் இணைய தட்டச்சு © :வேர்கள் இணையம்  

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி லெப். கேணல் பூட்டோ.!

இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி...

10.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் விக்கீஸ்வரன் சதாசிவம் சதானந்தன் வவுனியா வீரச்சாவு: 10.08.2008   2ம் லெப்டினன்ட் இன்பப்புலவன் ஜெயக்குமார் ஜதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008   கடற்புலி 2ம் லெப்டினன்ட் கலையழகன் கிருஸ்ணதாஸ் விசோதரன் 200 வீட்டுத்திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வீரச்சாவு: 10.08.2008   2ம் லெப்டினன்ட் கவியருவி செபஸ்ரியான் தீபசுதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008   2ம் லெப்டினன்ட் சீலன் (குன்றமனம் விஸ்வலிங்கம்...

லெப் கேணல் விக்கீஸ்வரன்.!

10.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.   ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன்.   இவர்...

09.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் சந்தனச்சேந்தன் ஜேசுதாசன் பிரதாப் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.08.2008   2ம் லெப்டினன்ட் பவளச்சுடர் (யோகா) கணேசன் புஸ்பகீதா முல்லைத்தீவு வீரச்சாவு: 09.08.2008   கப்டன் தென்னவன் முருகேசு கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.08.2008   கப்டன் நிதன் கிருபராசா லோகதாஸ் அம்பாறை வீரச்சாவு: 09.08.2008   கப்டன் புகழரசன் தம்பாப்பிள்ளை ரூபகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.08.2008   கப்டன் புலிநெஞ்சன் பாஸ்கரன் சபேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.08.2008   லெப்டினன்ட் சுதந்திரன் லோகிதராசா சுதாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு:...

Recent Comments