இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்கள நாயகர்கள் பிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள்.!

பிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள்.!

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி கோபித் அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களுடைய  கள நினைவை  பதிவு செய்துள்ளார்   குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (20.05.2018) மீள்வெளியீடு   செய்கின்றோம்  .!
“எனக்கு பால்ராஜ் அண்ணையை 1991-ம் ஆண்டு ஆகாய கடல் வெளிச் சண்டையின் போதுதான்
தெரிந்து இருந்தது. அப்போது நான் அவரை ஒரு போராளியாக இருந்து ஒரு பெரும் படைத்தளபதியாக தூரத்தில் இருந்து பார்த்திருக்கின்றேன். பால்ராஜ் அண்ணையை பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு இருந்து நீண்டகாலம் காத்திருந்து ஆசையோடு பார்த்திருக்கிறேன். 1995-ம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு பின்னர், நான் சாள்ஸ் அன்ரனி படைக்கு
உள்வாங்கப்பட்டபோது நேரடியாக அவரோடு சந்தித்து கதைத்து உறவாடக்கூடிய சந்தர்ப்பம்
எனக்கு இருந்தது. சிறிது காலம் அவரோடு நான், அவரது நேரடி வேலைத் திட்டத்துக்காக
பணியாற்றியும் இருந்தேன். அவ்வப்போது அவருடைய உடள்ளத்திலிருந்து வெளிப்படும்
அந்த இரானுவ ஆற்றல்களை, இரானுவ மதிநுட்பங்களை அவர் விடுதலைக்காக
செய்யத்துடிக்கும் போராட்டப் பணிகளையும் பக்கத்தில் இருந்து பார்க்கக்கூடிய
சந்தர்ப்பம் எனக்கு நிறையவே கிடைத்திருந்தது. அதில் நான் பாங்கெடுத்தும்
இருக்கின்றேன். எனக்கு அவர் சொல்லித்தந்த அந்த இரானுவ நுட்பங்கள் என்பது
அடுத்தடுத்த காலகட்டங்களில் எனக்கு நன்றாகவே உதவி இருந்தது
“சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவை பொறுத்தவரையிலே, பால்ராஜ் அண்ணை  அண்ணைக்கு பக்கத்தில் நின்று அதாவது, அவர் அந்தப் படைப்பிரிவை உருவாக்கி இராணுவத் துணைத்தளபதியாக சென்ற பின்னர் அண்ணைக்கு நெருக்கமாக நின்று சண்டைபிடித்து பாரிய இராணுவ வெற்றிகளை ஈட்டி இருந்த வரலாறுகளை நான் படித்திருக்கிறேன் . எமது படையணியானது இந்த விடுதலைப் போராட்டத்திற்காக பல சண்டைக்களங்களில் பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்திருக்கின்றது. அதற்குபிரிகேடியர் பால்ராஜ் அண்ணன் அவர்கள்  ஏற்படுத்திக்கொடுத்த அடித்தளம், அதாவது அவர் போட்டிருந்த படைக் கட்டுமானம், அவர் வெளிப்படுத்திய அந்தக் கட்டளை, அவரால் உருவாக்கப்பட்ட அந்த
அனித்தலைவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தமையினால், தொடர்ந்தும்  செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றமையிால், இன்னும் இன்னும் பல களங்களில் வெற்றிகளை பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையின் நினைவோடு நாங்கள் பெறுவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் எங்களுக்கு இல்லை.
இந்த சண்டைக் களத்தில வந்து நாங்கள் அங்க ஒவ்வொரு நேரங்களிலும் சண்டைநடக்கும் போது ஒரு அணி அதாவதுவந்து எங்களுடைய தாக்குதல் அணிகள் ஒன்று காயமடைந்து வீரச்சாவடைந்து   இழப்புக்கள் ஊடாக நிரப்பப்படாமல் இருந்து இருக்கும் . அது வந்து வெவ்வேறு இராணுவ உபகரணங்கள் அந்த இடத்தில் உடனடியாக கிடைக்கப்படாமல் இருந்திருக்கும். எல்லாத்துக்கும் பொதுவாக அந்த பலவீனங்களை அடைக்கக்கூடிய இல்லாட்டி அந்த பலவீனங்களை நிரப்பக்கூடிய, ஒரு கட்டளை தரக்கூடிய வல்லமையோட பிரிகேடியர் பால்ராஜ் அண்ணை அங்க வந்து இருந்தவர். அந்த பொருட் குறைபாடோ இராணுவ உபகரணக் குறைபாடோ போராளிகள் பற்றாக்குறையோ எங்களுக்கு தெரியவில்லை. ஏனெனில் ஆட்கள் குறையும்போது அதற்கு ஏற்றவாறு ஒரு திட்டத்தை போடுவார்
ஆட்கள் கூடும்போது அதற்கு மாதிரி ஒரு திட்டத்தை போடுவார். அப்படியாக பல்வேறு பார்வைக்குள்ளாக அதாவதுவந்து பல்வேறு கோணங்களில் இருந்து அவரை பார்க்கின்ற போது ஒரு இராணுவ  அதாவதுவந்து, நான் என்னை பொறுத்தவரையில் நான் அறிந்த மட்டத்தில் நான் பார்த்தமட்டத்தில எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு இரானுவ விற்பன்னராக ஒரு இராணுவ முன்னனி வல்லவனாக திகழ்ந்த ஒரு தளபதியாக இருக்குமானால் அது பால்ராஜ் அண்ணையாகவே இருக்கும் .
தீச்சுவாலைச்சண்டைக்குரிய திட்டத்தை வகுத்து- விடிய மூவ் பண்ணப்போறம், அதற்கு முதல் அணித்தலைவரைக் கூப்பிட்டு கதைக்கேக்க பால்ராஜ் அண்ணை வந்து ஒரு விடயத்தை எங்களுக்கு சொல்கின்றார், ஒன்பது ஒப்பரேசன்களை அதாவது “கிரி கிரண  ஒன்று தொடக்கம் ஒன்பது ஒப்பரேசை முடித்திருக்கிறம். இதிலவந்து நாங்கள் இவ்வளவு இழப்புக்களை சந்தித்திருக்கிறம், இப்பவந்து சரியா
முறையில திட்டமிடப்பட்ட தலைவரின் ஒரு புதிய தந்திரோபாயத்துக்குள்ளால இந்த பாதுகாப்பு லைனை  நாங்கள் அடிச்சிருக்கிறம். அப்ப இதிலவந்து இந்த சண்டையை மாற்றக்கூடிய வல்லமை எங்களிடம் இருக்கு. அதில நீங்கள் நம்பிக்கையோடஇருங்கள் நூற்றுக்கு நூறுவீதம் நாங்கள் வெல்லுவம். நீங்கள் 72 மணித்தியாலங்கள் மூர்க்கமாக சண்டையை பிடியுங்கோ என்று. அப்ப நாங்கள் அதை வந்து ஒரு நகைச்சுவையாக இல்லாட்டி வியக்கத்தக்க விடயமாக பார்க்கிறம் . சண்டை முடியுது. 72 மனித்தியாலங்கள் சண்டையை பிடிக்கிறம். அப்ப நாங்கள் நகைச்சுவையாகக் கதைப்போம்.”என்னடா பால்ராஜ் அண்ணை ஆமிக் கொமாண்டர் மாதிரி 72 மணித்தியாலம்தான் தீச்சுவாலை செய்யப்போற ஆள் மாதிரி சொல்கிறார். 72 மணித்தியாலம் சொல்கிறார். அப்படியே நடக்குது. என்நெண்டு  இந்தாளுக்கு தெரியும் அது” என்று. ஆனால், நாங்கள் பிறகு பார்க்கிறம் , அவர் அதைத்தான் மதிநுட்பமாக   திட்டமிட்டிருக்கிறார் என்பதை . எப்படி என்று சொன்னால், மூவ் பண்ணைப்போற எதிரிப் படையின்
தொகை, எங்களிட்ட இருக்கிற ஆயுத – ஆளனி பலம், இவ்வளவையும் வைத்துக்கொண்டு நாங்கள்  கட்டம் கட்டமாக இந்த ஒப்பரேசனை முறியடிக்கின்றது என்று சொன்னால் எங்களுக்கு 72 மத்தியாலம் தேவை என்பதைத்தான் மதுக்குள்ள அவர் பதிந்து வைத்திருந்த ஒரு  யுக்தியாக
நாங்கள் அந்த சண்டைமுடிய அதை பார்த்தம். அப்பவும் சொல்கிறார் இந்தச் சண்டைக்குள்ளால பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம். இதிலவந்து சந்திரிக்காவா அல்லது பிரபாகரானா  என்றதை எல்லோரும் மனதில நிறுத்திக் கொள்ளுங்கோ . நாங்கள் தலைவருக்கு வந்து ஒரு வெற்றிச் செய்தியை அனுப்ப வேனும். அதோட சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவப் படுதோல்வியை ஏற்படுத்தி பேரிடிக்குள்ள தள்ளவேணும் என்ற வசனத்தை சொன்னவர். அந்த வசனங்கள் அல்லாது போனால் அப்படியே சொல்லப்பட்ட அந்த யுக்திகள் அல்லாது போனால் அப்படியாக உற்சாகப்படுத்தக்கூடியஊக்கப்படுத்தக்கூடிய சொற்கள் சண்டைக்களத்தில  எங்களை மூர்க்கமாக சண்டையிடவைத்திருக்கிறது.
இப்ப, தொடர்ந்தும் இந்த படைப்பிரிவு, அதாவது சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு தொடர்ந்தும் சண்டைக்களங்களில் வந்து சண்டை பிடித்துக்கொண்டு இருக்கும் என்றால் அது அவரின் நீண்ட துர பார்வைக்குள், அதாவது தலைவரின் திட்டத்துக்கு அமைவாக அந்த படையணி உருவாக்கப்பட்டது அதற்குச் சரியாக நியமிக்கப்பட்ட பால்ராஜ் அண்ணையின் பணி – அந்தப் படையணிக்கு அவர் காட்டிய வழி – அல்லாவிடின் அன்று அவர் ஏற்படுத்திய போரியல் தந்திரோபாயமான கட்டமைப்பு எல்லாம் ஒருங்கிணைந்து தொடர்ந்தும் இந்த விடுதலைப் போராட்டத்திற்கு இந்த படையணி பாரிய இராணுவ வெற்றியை ஈட்டி ஒரு பெருமையை சேர்க்கும் அல்லது விடுதலையை வென்றெடுக்கும் வரை உறுதியாக உழைக்கும் என  பால்ராஜ் அண்ணையின் நினைவை  நெஞ்சிலே நிறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்
நினைவுப்பகிர்வு :  கோபித்
(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி )
வெளியீடு :சமர்கள நாயகன் நூல் (வெளியீட்டு பிரிவு ,அனைத்துலக தொடர்பகம் ,
தமிழீழ விடுதலை புலிகள் )
மீள் வெளியீடு மற்றும் இணைய தட்டச்சு © :வேர்கள் இணையம்  
 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments