ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது. – புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு அவர்கள்.!
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு அவர்கள் நிகழ்த்திய உரை:
தமிழர்களுடைய விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவேமாட்டாது. அவர் எங்கள் எல்லோருடனும் வாழ்வார். தமிழீழ விடுதலை வரலாறு ஒரு வெற்றிகரமான போரியல் நாயகனை உருவாக்கி இருந்தது என்று பெருமைப்படலாம்
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடைய பிரிவு அல்லது இழப்பு தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மிகப் பெரிய இழப்பாக இருக்கும். ஆனாலும் அந்த வரலாற்று வெற்றிடம் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காகவே அவர் தனது இரு தசாப்தகால போராட்ட வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார். அதாவது இந்த விடுதலைப் போராட்டம் ஒரு இராணுவ ரீதியான வடிவம் பெற்றதில் இன்று அதிகாரிகளாக அல்லது படைத்தளபதிகளாக தமிழீழ விடுதலை வரலாற்றை முன்நகர்த்திக்கொண்டிருக்கும் போரியல் தளபதிகளை உருவாக்குவதில் அவர் தனது இருபது வருடகாலத்துக்கு மேற்பட்ட போராட்ட வாழ்க்கையில் முழுமையாக உழைத்தார்.
இங்கு முன்னர் உரையாற்றிய ஒரு மாணவன் கூறினார், பால்ராஜ் அவர்கள் போராட்டத்தில் இணைந்ததற்கு நான்கு வருடங்களுக்குப் பின்னர்தான் தான் பூமியில் பிறந்ததாக, ஒரு நீண்டகாலப் போரியல் வரலாற்றில் ஒரு அடையாளமாக அந்தச்சொல்லை நான் பார்க்கிறேன். அவருடைய கூற்றை நான் பார்க்கிறேன்
அவருக்காக இருக்கட்டும், அவருடைய சந்ததிக்காக இருக்கட்டும் அல்லது எமது நாளைய சந்ததிகளுக்காக இருக்கட்டும் தமிழர்களின் வீரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக எழுச்சிச் சின்னமாக பால்ராஜ் அவர்கள் இருப்பார்.
எல்லாத் தளபதிகளும் இருந்தார்கள். இந்த விடுதலைப்போராட்டத்தில் எவ்வளவோ மாவீரர்கள்வந்தார்கள். இன்று இருபதினாயிரம் மாவீரர்களைக் கடந்தும் இந்த விடுதலைப் போராட்டம் நடக்கின்றது. அந்த இருபதினைாயிரம் பேரை விட, பால்ராஜ் எதுவாக மாறி நிற்கின்றார். எதனால்வித்தியாசப்படுகின்றார் என்ற கேள்வி எழும்.
பால்ராஜ் ஒரு சிறந்த போர்த் தளபதியாக விளங்கினார். போர்த்தளபதிகள் இந்தப் போராட்டத்தில் வரவில்லையா, இன்றும் போர்த்தளபதிகள் பூமியில் இல்லையா அல்லது எமது விடுதலைப்போராட்டத்தில் இல்லையா என்ற கேள்வி வரும். அவர்கள் எல்லாரையும் விட பால்ராஜ் எதனால் வித்தியாசப்பட்டார். என்ற கேள்வி வரும். இங்கு நாம் ஒன்றை எண்ணவேண்டும், எமது விடுதலைஇராணுவமானது எமது விடுதலை இயக்கமானது படையணியாக இருந்தாலும் கூடநாம் ஓர் மரபுவழிப்படையணிக்குரிய வளங்களைக் கொண்டவர்கள் அல்ல. ஆளணி ரீதியாகவும் சரி, ஆயுதரீதியாகவும் சரி பலவீனமான ஒரு இனத்தின் பிரதிநிதிகள், அவர்களுக்கு இருக்கக் கூடியது மன உறுதி என்ற பலம் தந்திரோபாயம் என்ற பலம்; சிறந்த வழிநடத்தல் என்ற பலம். தலைவர் அவர்களினால் ஊட்டப்பட்ட,அந்த சிறந்த வழிநடத்தலை, போர்க்களத்திலே போராளிகள் மத்தியிலே ஊட்டி அவர்களைப்போர்க்களத்தை நோக்கி நகர்த்துகின்ற ஒரு சிறந்த தளபதியாக பால்ராஜ் இருந்தார்.
சமர்க்களங்களில் எமது எதிரிகளுடன் ஒப்பிடும்போது எது எதை எமது பலவீனங்களான அம்சங்களாகக்கண்டோமோ அதை எல்லாவற்றையும் சமப்படுத்துகின்றதாக, சமப்படுத்துகின்றதாக என்பதற்கு மேலாக மேவி நிற்கக்கூடியதா ஒரு பலமாக பால்ராஜ் என்கின்ற தனிமனிதனின் ஆளுநமைத்திறன். போரியல் திறன், அவருடைய வீரம் அங்கே நின்றது.
எதிரியால் எவ்வளவு பெரிய கனரக ஆயுதாங்களால் சுற்றிவளைக்கப்பட்டாலும் – அங்கு டாங்கிகள்நிற்கலாம், எண்ணுக்கணக்கில் ஆயிரக்கணக்கான படைகள் சூழ்ந்து நிற்கலாம் – அங்கு நிற்கும் போராளிகள் சில பேராக இருக்கலாம். ஆனால் அந்த எதிரியின் பலத்தை – எதிரியின் எண்ணிக்கைப்பலமாக இருக்கலாம் அல்லது ஆயுத பலமாக இருக்கலாம்-அந்தப் பலத்தை மேவிச்சமப்படுத்துகின்ற.
ஒரு தனிமனித ஆளுமையைாக அங்கே பால்ராஜ் நிற்பார் அந்த ஆளுமைதான் பால்ராஜின் பலம். அதுதான் இன்று தமிழினத்தின் ஒரு தலைசிறந்த போர்த்தளபதியாக எம்முன் அவரை அடையாளம் காட்டி நிற்கின்றது. பால்ராஜ் அவர்கள் நோயினால்
வீழ்ந்தார். இயற்கை நோய் ஒன்று அவரைக் கொன்றது என்பது ஒரு சோகச் செய்திதான். சிலர்
கூறுவார்கள் அவருக்கு ஒரு வீரச்சாவு வாய்க்கவில்லையே என்று. அவர் சாவை எந்த வேளையிலும் சந்திக்கக் கூடிய, களங்களில்தான் நின்றார். சாவை அவர் தினமும் சந்தித்தார். அவருடைய போர்க்கள வாழ்வு மீண்டும், மீண்டும் சாவுடனான யுத்தமாக அவருக்கு இருந்தது. போர்க்களத்திலே அவர் ஆற்றிய சாதனைகள் ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையிலேயே உலகம் முழுமைக்குமான ஒரு எடுத்துக்காட்டாக, ஒப்புவமையற்ற ஒரு போரியல் வரலாறாக இருக்கின்றது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் – எல்லோரனும் இங்கு பல தடவைகள் கூறப்பட்ட ஆனையிறவு வெற்றியும், குடாரப்புத் தரையிறக்கமும். ஆனையிறவு வெற்றிக்குக் காரணமாக அமைந்தவை ஏராளமானவை. வேர்கள்.கொம் தலைவர் அவர்கள் ஒரு போரியல் தந்திரத்தை வகுத்தார். போராளிகள் தாங்களை அர்ப்பணித்தார்கள். தளபதிகள் அங்கு நின்றார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் மேவி அந்தவெற்றியை-உலகத் தமிழர் முழுவதுமே பெருமைப்படக் கூடியதும், உலக வல்லரசுகள் அனைவரும்
வியந்து பார்த்ததுமான அந்த வெற்றியைப் பெற்றுத் தந்த நேரடிக்காரனி பால்ராஜ் தான் என்பதை நாம் எங்கும் கூறலாம். ஆனால் அந்த வெற்றியின் நாயகன் தான்தான் இந்த வெற்றியைப் பெற்றேன் என்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கர்வம்கொண்டது கிடையாது. அந்த வெற்றியானது ஆயிரம் வரையான போராளிகளுடன் தன்னைத் தாண்டி, தன்னுயிரால் அந்தப் போராளிகள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டி, தன்னுயிரால் அந்த போர்க்களத்தில் உள்ள எதிரிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது – அவர்களுடைய விநியோக வழியை தடுத்ததுதான் ஆனையிறவின் வெற்றியாக அமைந்தது. அதுதான் இன்றைய வரலாற்றில் தமிழர்களின் ஒரு பெரும் எழிச்சிக்குரிய வெற்றியாகவும் கனிந்தது
பால்ராஜ் அவர்கள் தனிமனிதாக ஒரு மிகச்சிறந்த போரியல் ஆசானாக திகழ்ந்தார். மனலாற்றுக்காட்டிலே அவரின் வெற்றிக்குரிய அறிகுறிகளைத் தலைவர் கண்டார். வேர்கள்.கொம்தலைவர் அவர்கள்
மலாற்றுக்காட்டிலே சுற்றிவளைக்கப்பட்டிருந்த போது, தலைவர் அவர்களுக்கான விநியோகங்கள் மற்றும் பாதுகாப்புப் பனிகளை, மலாற்றுக் காட்டின் ஒரு புறத்தே மேற்கொள்ளும் பாதுகாப்பு அணி ஒன்றின் பொறுப்பாளராக பால்ராஜ் இருந்தார். தலைவர் அவர்களை அந்தக் காட்டிறகுள் பாதுகாப்பதற்குப் பொறுப்பெடுத்திருந்த பால்ராஜின் பொறுப்பாளராக இருந்த பசீலன் அவர்கள் வீரச்சாவடைந்ததைத் தொடர்ந்து பால்ராஜ் அவர்கள் அங்கு சில பொறுப்புக்களை ஏற்றிருந்தார்.
அப்போ அவர் பிரபல்யம் மிக்க ஒரு பொறுப்பாளராக அடையாளம் காணப்பட்டு இருக்கவும் இல்லை .அந்த வேளையிலே பால்ராஜ் அவர்களுக்கு குறிவைத்து, அல்லது தலைவர் அவர்களின் விநியோகஅணி மீது குறிவைத்து இந்திய பராத்துருப்பினரால் ஒரு வழிமறிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அந்த பராத்துருப்பினரின் பூழிமறிப்புத் தாக்குதலில் , அவர்களால் அமைக்கப்பட்ட அந்த கொலைவலையம் என்று கூறப்படுகின்ற அந்த சூட்டுப்பலத்துக்குள்ளே பால்ராஜூம் அவரது அணியினரிரும் அகப்பட்டுவிட்டனர். அந்த வேளையில் அவர் உடனடியாக ஒருமுறியடிப்புத்தாக்குதலை மேற்கொண்டார். இவர்களைக் குறிவைத்து அந்த இடத்திலே நிலைபெற்றிருந்தபராத்துருப்பினர் அந்த இடத்திலேயே அழித்தொழிக்கப்பட்டனர். உண்மையிலே ஒரு கொலை வலையத்துக்குள் அகப்பட்டு விட்ட ஒரு அணியானது அந்தப் பதுங்கித் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வது அரிதான விடயம்.
ஆனால் இங்கு அவர்தான் தப்பிக்கொண்டதுமட்டும் அல்லாமல் அந்த அணியிரை தாங்களைக் கொல்ல வந்த அந்தப் பராத்துருப்பிரை – முறியடிப்புத் தாக்குதலில் அழித்தொழித்தார். ஒரு பெரிய வெற்றிகரமான வரலாறாக அது இருந்தது. தலைவர் அவர்களின் கவனத்தையும் அந்தச் சம்பவம்தான் ஈர்த்தது. அதிலிருந்துதான் தலைவர் அவர்கள் பால்ராஜை அடையாளம் கண்டார் .
தமிழர்களுடைய விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது. அவர் எங்கள் எல்லோருடனும் வாழ்வார். தமிழீழ விடுதலை வரலாறு ஒரு வெற்றிகரமான போரியல் வெற்றி நாயகனை உருவாக்கி இருந்தது என்று பெருமைப்படலாம். உலகத்தின் அதிசயிக்கத்தக்க வெற்றிகளை எட்டியுள்ளோம்.
ஓயாத அலைகள் மூன்றாக இருக்கட்டும், அல்லது அதற்கு முன்னர் ஒவ்வொரு இரானுவமுகாம்களாக – வன்னியிலிருந்த ஒவ்வொரு இராணுவ முகாமாக அடித்துவிரட்டி ஒரு பெரிய நிலப்பரப்பை எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக இருக்கட்டும் எல்லாமே பால்ராஜின் தலைமைத்துவத்தாலும் அவருடைய துணிச்சலாலும் விளைந்தவைதான் அவருடைய கடைசி நேரத்தில், மலைாற்றுக்கு அண்மித்த போர்க்களங்களிலேபோராளிகளுக்கு ஆலோசனை வழங்குகின்ற , போராளிகளுக்கு பயிற்சி
வழங்குகின்ற, போர்த்தந்திரோபாயாங்களை வழங்குகின்ற பனியிலே அவர் ஈடுபட்டிருந்தார்
நான் முன் குறிப்பிட்டது போல் இயற்கை வெற்றிடங்களை விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். பால்ராஜினுடைய இழப்பு இந்த தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க இழப்பாகப் பதிவுபெறும். அவருடைய அந்த வீரத்தினால் அந்தப்
பதிவைப் பெறும். ஆனால் அது வெற்றிடமாக மாறாது, ஏனெனில் அந்த வெற்றிடம் உருவாகக் கூடாது என்பதற்காக அவர் இருபது வருடம் உழைத்துள்ளார் ஒரு வீரத்தின் குறியீடாக, தமிழர்களின் இராணுவ பலத்தின், வடிவத்தின் குறியீடாக
கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...
வவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும்,...
நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.! ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...