இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள் பாதையால் பிறக்கும் நாடு .!

பாதையால் பிறக்கும் நாடு .!

தமிழீழ  விடுதலைப் போரில் கரும்புலிகள் அணியின் செயற் பாடுகள் பற்றி பலர் பல்வேறு கோணங்களில் நோக்கினாலும்கூட,போரும் அதற்குப் பின்னணியாக உள்ள நடைமுறை உலகம் அடைந்து கொண்டிருக்கும் மாறுதலை உற்று நோக்குவோர் கரும்புலிகள் பற்றிய தமது பார்வையிலும் பல புதிய பெறுமானங்களை அவதானிக்க வேண்டியது தவிர்க்கமுடியாததாகி
றது. பதினொரு ஆண்டுகளின் முன் கப்டன் மில்லரின் தாக்குதலோடு தன்னை வெளிக்காட்டிக் கொண்ட கரும்புலிகள் அணி அதற்குப் பின்ஒருவர் பின் ஒருவராக வரும் நேர்கோட்டு வடிவில் தனது வளர்ச்சியை அமைத்துக்கொள்ளவில்லை . பெருகும் வீரர்களின் எண்ணிக்கையும், ஓர் “பிரமிட் “வடிவிலேயே விரிவடைந்து செல்லக் காண்கிறோம் எவ்வளவு நீரூற்றினாலும், பசைளையிட்டாலும் சில மரங்களால் பூக்கவோ காய்க்கவோ முடிவதில்லை ஆனால் நீரும் பசளையுமற்ற வரண்ட நிலங்களிலோ சில மரங்கள் பூத்துக் குலுங்குவதுண்டு   இந்த ஒப்புவமையை சிறீலங்கா இராணுவத்திற்கும்; விடுதலைப் புலிகளுக்குமாகப் பொருத்திப் பார்த்தால் எவ்வளவோ பண நீர் ஊற்றி, ஆயுதப் பசைளையிட்டாலும் போரின் வெற்றியை தீர்மானிக்கவல்ல கரும்புலிகள் போன்ற உறுதியான கொள்கையே உயிர்நாடியாகக் கொண்ட படையணியொன்றை தருவதற்குரிய தகுதியை சிறீலங்கா இராணுவம் அடையவில்லை. அதேவேளை பொருளாதார வசதிகளற்ற உயர்தர ஆயுத தளபாடங்களின் நன்றி வேர்கள் இணையம் பற்றாக்குறையோடு நின்று போராடும் விடுதலைப் புலிகள் அணியில் கரும்புலிகள் அணி உருவானது எப்படியென்பதே இன்றும்  உலகத்தின் கவனத்தைக் கவர்வதாயிருக்கிறது. தமக்குக் கிடைத்த உச்சக்கட்டப் பொருளாதார வளங்களால் வலலரசுகள்  உலகையே அழிக்கும் ஆயுதங்களைக் கண்டு பிடித்தனர். ஆனால் வல்லரசுகளே அதிசயப்படும்படியாக அவர்களால் உருவாக்கமுடியாத படையணியாக தமிழீழத்தில் விளைந்தது கரும்புலிகள் அணி.இந்த உவமைகளைப் பின்நிறுத்தி அனைவரும் ஓர் உண்மையை விளங்கி கொள்வது அவசியம் .இன்று சில நாடுகள் சிறீலங்கா அரசிற்கு ஆயுதங்களை வழங்கியும், நேரடியாகப் பயிற்சியுமளித்தும் வருகின்றன. இது அவர்களின் தீர்வுப் பொதியிலும் , சமாதானத்திற்கான போரிலும் மயங்கியல்ல அணுகுண்டை வைத்திருக்கும் நாடுகள் தாம் சரணடையும் நிலை வந்தால் தம்மிடமிருக்கும்  அணுகுண்டுகளைப் பாவனைப்படுத்தாது தோல்வியை ஒரு  போதும்  ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவேதான் ஹிட்லரை ப் போல ஒர் இறுதித் தோல்வியைத் தவிர்க்க முயலும் நாடுகள் அணுகுண்டைத் தயாரிக்க முயல்கின்றன. இதுவே மற்றவரிடம் இல்லாத அதிஉயர் பலத்தை தேடும் அறிவியலாகும். இதுபோல அணுகுண்டுகளற்ற நாடுகளின் போர்க்களங்களை அனுமானித்து அதில் பயன்படும் அதிஉயர் பலம் எது வென்று சீர்தூக்கினால் கரும்புலிகள் படையணியைத் தவிர்த்து வேறு ஓர் படைபலத்தை சுட்டிக் காட்டுவது இயலாத காரியம் . இது ஒர் உண்மை . இதை விளங்கிக் கொண்டமையால்தான் சிறீலங்கா இராணுவ தளபதிகளே யுத்தம் பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் . உள்ளபடி சிந்தித்தால எப்படியாவது இப்போரைநிறுத்த வேண்டும்; நியாயமான தீர்வைக்காணவேண்டும்; இது அரசியலுக்கும், இனவாதத்திற்கும் அப்பாற்பட்ட இன்னோர் காரியம் என்ற உண்மை தெரியவரும் . ஆனால் , இதை வெளியே கூறவோ, செயற்படுத்தவோ முடியாத நிலையில் உள்ள சிறீலங்கா அரசிற்கு இநத
உண்மை தொண்டைக் குழிக்குள் பெரும் விக்கலாக நிற்கிறது. ஜெயக்குறு படையணி தொண்டைக்குழிக்குள் தேங்கி நிற்பது மேற்சொன்ன விக்கலின் இன்னொரு நடைமுறை விளக்கமே இந்தத்தேக்கத்திற்காக தொடர்ந்து உயிராயுதத்தைப் பயன்படுத்தி வருபவர்கள் கரும்புலிகள்.
சிறீலங்காவின் பெரும் படைகளுக்கும்  கவச வகனங்களுக்கும்
யுத்தம் செய்ய  சமதரை வாய்ப்பானது. ஆனால், காடும் கடலும் இத்தகைய படையணிக்கு சாதகமாக அமையாது. எதிர்விளைவு அகளையே உண்டுபண்ணும். இது வரலாற்றின் அனுபவம் உலர்வலயக் காடுளையும் அவற்றின் குணாதிசயங்களையும கற்று, சிறு சிறு படைப்பிரிவுகளாகப் பிரிந்து போரிடும் புலிகளை தெற்கேயுள்ள ஈரவலயக் காடுகளில் பயிற்சிபெற்றிராத சிங்கள இராணுவம் எதிர்ப்பது சாதார பனியல்ல. ஏனெனில் உலகில் இதுவரை நடைபெற்ற நாடு பிடிக்கும் போர்களில் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் . அதேபோல
பாதை திறக்கும் போரில் ஈடுபட்டு முற்றாக அழிந்து போனதற்கும் உலகில் பல அரசு முன்னுதாரணமாக இருந்துள்ளன . உலகத்தின் பெரும்  பகுதியைத தனது  காலடிக்குள் கொண்டுவந்த ஹிட்லர் வரலாற்றில் அழிவைத் தேடிக் கொண்ட இடம்; போலந்திற்கூடாக ஓர் பாதையை திறக்க  முயன்றதிலிருந்துதான் என்பதை யாரும் மறந்துவிடல் முடியாது. பாதைகளைத தகர்த்தும்  பகைவர் வரும்போது பாலத்தை வெட்டியும் தேசங்களைக் காத்த வீரர் பலர். அத்தகைய வீரர்களால் உருவான நாடுகளும் பல பாதையிலிருந்து பிறந்த நாடுகளின் வரிசையில் தமிழீழமும் ஒன்றாகும் என்றளவிற்கு நிலைமைகள் கனிந்து வருகின்றன. அந்தப் பாதைப் போரில் முன்னணியில் நிற்கும் கரும்புலிகள் தமிழீழ வரலாற்றில் மேலும் ஒருதடவை புதிதாகப் பதிவு பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை .
ஆக்கம் :கி.செ. துரை.
வெளியீடு :எரிமலை இதழ் 
மீள் வெளியீடு மற்றும்   இணைய தட்டச்சு:வேர்கள் இணையம்
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments