
பாடி நினைத்திடுவோம்
பாரினில் அவர் மேன்மை போற்றி
பாடி நினைத்திடுவோம்.!
வாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க
தம்மைத் தந்து சென்றவரை
பாடி நினைத்திடுவோம்.!
பள்ளி அருகிருந்தும் படிக்குமாற்றால் மிக இருந்தும்
பிள்ளைப் பருவத்தில் தரணியில் தமிழினம் தழைக்க
தம்மை தந்து சென்றவரை
பாடி நினைத்திடுவோம்
இரவும் பகலும் விழிப்பாக இருந்தும்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
தமிழீழ விடுதலைக்கு தம்மைத் தந்து சென்றவரை
பாடி நினைத்திடுவோம்

வெளியீடு :சூரியப்புதல்வர்கள்
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
இணைய தட்டச்சு :வேர்கள் இணையம்
\