இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home பொருண்மியம் பனம் பொருள் உற்பத்தி .!

பனம் பொருள் உற்பத்தி .!

தமிழீழத் தில் பனைமரங்கள் பரவலாகக காணப்படுகின்றன யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாகவும் ஏனைய தமிழ் மாவட்டங்களில் சற்று  குறைவாகவும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இவைகள் காட்டு மரங்கள் போன்றே அறிமுகமாகின. திட்டமிட்ட  முறையில்  நடப்பட்டிருக்கவில்லை . எனினும் தமிழர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தன .  உணவுத் தேவைக்கும் மருத்துவ  தேவைக்கும் பல்வேறு பாவனைப் பொருட்களாகவும் விட்டுத்தேவைகளுக்கும்  பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பனம் பொருள் உற்பத்தியின் நிறுவன ரீதியான மாற்றம் பற்றியும் தற்போதைய நிலையில் அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடுதல் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்
பன்டைக் காலம் தொட்டு  பணம்பொருள் சார்ந்த தொழில் குடிசைக் கைத்தொழிலாகவே இருந்துவந்துள்ளது.
ஐரோப்பியர் வருகையின் பின்பு குறிப்பாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அவர்களது இறக்கு மதிப் பொருட்கள் மீது நா ட்டம் செல்லவே உள்ளுர் உற்பத்திக்கு குறிப்பாக பனம் பொருள் உற்பத்திகளுக்கு போதிப ஊக்கம் அளி க்கப்படவில்லை  பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை ,  ரப்பர் , தெங்குப் பொருட்களுக்கு கொடுக்கப்பட்ட
அதே ஊக்கம் பணம்  பொருட்களுக்கும்  கொடுக்கப்பட்டிருப்பின்  தமிழீழத்தின் பெருந்தோட்ட உற்பத்தியாக பனம் பொருள் உற்பத்தியே  விருத்தியடைந்திருக்கும் கள் உற்பத்தி,பதனிர் உற்பத்திகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே ஈடுபட்டு வந்தனர். இவை மட்டுமன்றி பிரித்தானியர் வருகையின் பின்பு மக்களின் நுகர்வு முறை மேலைத்யே நாட்டு இறக்குமதிகளின் மீது செல்லத் தொடங்கியபின்பு பனம்பொருள் உற்பத்திகள் அதிலும் சிறப்பாக பனை சார் ந் த உணவுப்பொருட்களின் உற்பத்திச் செலவு குறைவு அல்லது இலவசப் பன்டமாக இருந்தமையால வருமானம் குறைந்த காலத்தில் நுகரப்படும் இழிவுப்பொருட்களாகவே காணப்பட்டது. மேலும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர் ஒரு வகுப்பினராகவும் அதனை உடமையாளர்கள் இன்னொரு  சாராராகவும் இருந்தமையும் பனம்பொருளின் முக்கியத்துவம்  உணரப்படாமையும், பின்தங்கிய  நிலைக்கு  பிரதான காரணங்களாகின 1970ம் ஆண்டுகளில் அரசாங்கம் போன்றவைகளை  கூட்டுறவுச் சங்கத்தின்  கீழ்  கொண்டுவந்து  உற்பத்தியாளர்களிட மிருந்து கள்ளை குறித்த விலைக்கு கொள்வனவு செய்து ஆங்காங்கே விற்பனை நிலையங்களை நிறுவி விற்பனை செய்து வந்தன. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு தங்கள் உற்பத்திகள் சிறந்தத சந்தைகக்கு வர வாய்ப்பு கிடைத்தது மட்டுமன்றி  உயர் விலையும் கிடைத்தது. இவை மட்டுமன்றி  இத்தகைய கொள்வனவு விற்பனை வாய்ப்புக் கிடைத்தது .
1977ம் ஆண்டு இப் பனம்பொருள் உற்பத்திகளை பரந்த அளவில் செய்யும் நோக்குடன் பனம்பொருள் அபிவிருத்திச்சபை என்ற பெயரில் கூட்டுத் தாபனத்தின் கழ் கொண் டுவரப்பட்டது. இக்கூட்டுதத் தாபனத்தின் கீழ் நிர்வாகப்பகுதி நிலப் பகுதி உற்பத்திப் பகுதி, சந்தைப்படுத்தல் பகுதி, ஆராய்ச்சிப் பகுதி எனப் பல் வேறு பிரவுகளாகச் செயற்பட்டு  வருகின்றன  கூட்டுத்தாபன அமைப்பின் கீழ் உள் ளுர் த தேவைகளுக்கு மட்டுமின்றி ஏற்றுமதி நோக்குடனும் பனங்கட்டி, பனைஞ்சீனி, பனந் தும்பு போன்ற பல்வேறு கைப்பணிப் பொருட்கள் எற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
பனம்பொருள்களின் உற்பத்தி குறித்து ஏற்பட்ட நிறுவன ரீதியான மற்றும் குறிப்பாக கூட்டுறவு,கூட்டுத்தாபனம் உற்பத்திகளின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்  எனலாம். அப்படி  இருந்தபோது நாடுதழுவிய ரீதியில்  ஒரு உந்துதலை அரசாங்கமோ அல்லது பொதுமக்களோ ஏற்படுத்தவில்லை அல்லது  பனம் பொருள் வளங்களை உச்சஅளவுக்குப்படுத்தவில்லை எனலாம் 
இத்தகைய  நிலைமையை உணர்ந்த தமிழீழ  பொருண்மிய மேம்பட்டு கழகம் 
கழகம் தெங்கு , காய்வெட்டி பனம் பொருள் சீவும் முறை  உற்பத்திகளை  மேம்படுத்தும் முகமாக பிரத்தியேகமாக தெங்கு பனம் பொருள் அபிவிருத்தி  ஒன்றியம் ஒன்றை நிறுவியது.
இவ் ஒன்றியம் வெகு சிறப்பாகச் செயற்பட்டு வருவதுகுறிப்படத்தக்கது போராட்டம் உக்கிரமடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் சிறிலங்கா அரசு தமிழீழத் தன் மது பொருளாதாரத தடைகளை விதித்துள்ளது இதனால் தமிழீழத்தில் குறிப்பாக மீட்கப்பட்ட பிரதேசத்தில் பொருட்களுக்குத தட்டுப்பாடு நிலவுவது இயல்பானதே. குறிப்பாக கரும்புச்சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அதனை பனை வெல்ல உற்பத்தி மூலம் பிரதியீடு செய்ய த.பொ.மே.க அயராது உழைத்து வருகிறது . இதன் விளைவாக உற்பதத்தியும் துரிதமாக அதிகரித்துள்ளமையை கிழ் வரும் அட்டவணை காட்டுகிறது .
.
பனை வெல்ல உற்பத்தி தமிழீழம் 1990 – 93
ஆண்டு    –   உற்பத்தி (கிலோ)
1990             –              3,565
1991             –              99,386
1992             –              100,847
1993             –               220,106
மூலம் : காப்பரண் – 1994
மேற்காட்டிய அட்டவணையின் படி 1990 ம் ஆண்டு 3,565 கிலோவாகாக்   காணப்பட்ட பனை வெலல உற்பத்தியானது 1991ம் ஆண்டு 99,386கிலோவாக (ஏறக் குறைய 30 மடங்காக) அதிகரித்துள்ளது.1992ம் ஆண்டு 100,847 கிலோவாக் காணப்பட்ட பனை வெலல உற்பத்தி ஓர் ஆண்டில் இரண்டு மடங்கிற்கு அதிகரிப்பைக் கொண்டு 20,106கிலோவாக உயர்ந்துள்ளது. இப்போராட்ட சூழ்நிலையில் விறகு மற்றும்  எரிபொருள், மின்சாரம் என்பனவற்றின் விலை மிகவும் உயர்வாகவே உள்ளது. இதனால் பனை வெல்லத்தின்  ஒரு கிலோவிற்கான உற்பத்திச் செலவு 100ரூபாவுக்கும் அதிகமாகவே காணப்படுகின்றது .
இருந்தபோதும் சுதேச உற்பத்தியைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் முகமாக உற்பத்தி செய்யப்படும்
பனைவெல்ல அளவிற்கு ஏற்ப த.பொ .மே.க மானியம் வழங்கி உற்பத்தியாளர்களை பாதுகாத்து வருகின்றது. குறிப்பாக 1994ம் ஆண்டு த.பொ.மே.க உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு கிலோ அளவிறற்கும் 55ருபா வீதம் மொத்தம் 21,423,664ருபாவை மானியமாக வழங்கியபுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள் சுதந்திரம்அடையவிருக்கும் நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகள் என குறிப்பிடலாம்.
மானியம் வழங்கியதன் மறு விளைவு நுகர்வோர் குறைந்த செலவில் பனை வெல்லத்தினை
நுகர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது உற்பத்திச் செலவு 100 ரூபாவுக்கு மோலாக இருந்தபோதும் சில்லறை விற்பனைவிலை 1994ம் ஆண்டு 50 ரூபாவாகவும் மொத்த விற்பனை விலை 47 ரூபாவாகவும் நிர்மாணிக்கப்பட்டு வசதி குறைந்த மக்களுக்கும்  நுகரும்  வகைபில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மானியம் வழங்குதல் மட்டுமின்றி பனம்பொருள் உற்பத்தி சார்ந்த தொழில் பயிற்சி நவீன தொழில் நுட்பம் இயந்திர மயப்படுத்துதல்,சந்தைப் படுத்துதல், புதிய உற்பத்திகள் அறிமுகம்,  ஏற்றுமதி ஊக்குவிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளும்  மேற்கொள்ளளப்பட்டு வருகின்றன.
தமிழீழத்திலுள்ள பெரும்பாலான பனை  மரங்கள்  முதிர்ச்சிக்காலங்களை நெருங்கி வருகின்றன. இவை மட்டுமின்றி நாளாந்தம் கணிசமான மரங்கள் தறிக்கப்பட்டு வருகின்றன.
இவை மட்டுமின்றி சிறீலங்கா அரசின்குண்டு வீச்சாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவைகளை 15 –20வருடங் ளின் பின்பாவது பிரதியீடு செய்யும் நோக்குடன்பனம் விதைகள் திட்டமிட்ட அடிப்படையில்  நாட்டப்பட்டு வருகின்றன. 1991ம் ஆண்டு 100,000  பனம் விதைகளும் 1992ம்
ஆண்டு  157,000 பனம் விதைகளும்1993ம் ஆண்டு 346,000 பனம் விதைகளும் நாட்டப்பட்டன.
இதன் மூலம் சுற்றாடல் பாதுகாப்பு, மழை விழ்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக இருக்கும். மொத்தத்தில் தமிழீழபொருண்மிய   மேம்பாட்டுக் கழகதத் தநினை இததகைய
ந டவடிக்கைகள் பனையைவளர்ப்போம் பயனைப் பெறுவோம் என்ற இலக்கிற்கு  உதாரணமாகஉள்ளதாக தெரிகிறது
வெளியீடு  :தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம் (கார்த்திகை 1994)

மீள் வெளியீடு    :வேர்கள் இணையம் 

முதல் இணைய தட்டச்சு உரிமை :வேர்கள் இணையம்

“புலிகளின் தாகம் தமிழீழத்  தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments