ஒரு கரும்புலிவிரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கு அப்பால் நிக்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்; துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன்.
முதன் முதலாக கடற்கரும்புலிகள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினமான 10.07.1990 லிருந்து 19.04.1998 வரை கடலிலே காவியமான கடற்கரும்புலி மாவீரர்கள் நினைவு சுமந்து வெளியீடு செய்யப்பட்டவை நெருப்பு மனிதர்கள் நூல் .
குறித்த நூலினை 2018 ம் ஆண்டு கரும்புலிகள் நாளில் இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்ட கரும்புலி மறவர்களை நெஞ்சில் சுமக்கும் நோக்கில் மின்னூல் வடிவில் வேர்கள் இணையத்தில் இணைகின்றோம்
நெருப்பு மனிதர்கள் மின்னூல் வடிவில் :-
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”