இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தாயக கவிதைகள் நெஞ்சில் சுடரும் நினைவுகள்.!

நெஞ்சில் சுடரும் நினைவுகள்.!

நாற் சுவரே உலகமென
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்பிக்கச் செய்தவளே.

பாரம் சுமக்கவல்ல
படைத்தது. பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி.

“ஈழம்” தவிர்ந்தெந்த
இன்பமும் யாம்
வேண்டாமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்,
பூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே – நீ
காட்டிச் சென்ற தெவ்வழி
கடைசி வரை நாமும் அவ்வழி!

– சூரியப்புதல்வர்கள் 2003 நூலில்லிருந்து வேர்கள்….!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments