பிரதான யாழ் கண்டி வீதி (ஏ.9) திறப்பு, உணர்வு பூர்வமான நிகழ்வு: ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப்படை யினரால் மூடப்பட்டுக் கிடந்த ஏ.9 எனப்படும் பிரதான யாழ் -கண்டி வீதி அதிகாரபூர்வமாக 08.04.2002 அன்று திறந்து வைக்கப்பட்டது. இப்பாதை திறந்து வைக்கப்பட்ட அதே வேளை யாழ் குடாநாட்டில். அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கெனச் சென்ற 15 விடுதலைப் புலிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாங்களுடன் துாக்கி அழைத்துச் சென்றனர்.
மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட இவ்வுணர்வு பூர்வமான நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய இராணுவத் தளபதிகள் கேணல் பானு, கேணல் தீபன் ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களும், நோர்வேயின் போர்நிறுத்தக் குழுவின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட காண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் மற்றும் யாழ் குடாநாட்டுக்கான சிறீலங்கா இராணுவத்தாளபதி மேஜர் ஜெனரல் சிசிர விஜயசூரியாவும் மேலும் இரு இராணுவ உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இது தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் வெற்றி ஆகும் இந்நாளில் சிறப்பு பதிவாக 2002ஆண்டு எரிமலை இதழில் வெளிவந்த கவிதையை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையம் தட்டச்சு செய்து இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றது
அலையாய் விரித்தெழுந்த அளகபாரமே
எத்தனை அழகாயிருந்தாய்,
வரிசையிட்ட வனவிருட்சங்களிடையே
உரிமை கொண்டோடிய நெடியவளே!
நிலா நாளெனில் உன் நிர்மல அழகே தனியானது.
உலா வருவோரிடையே
ஒலியற்ற மொழியில் உரையாடுவாய்.
அந்த உணர்வின் இசைகேட்பது சுகம்,
அடித்துப் போட்ட கரும்பாம்பாய்
கிடந்தாலும்
எத்தனை அழகிருந்தது உன்னில்.
இரவெனில் உன்னெழில் இலங்கும்.
தேவமகளென வானிருந்திறங்கிய
சொர்ப்பன மகள் நீ.
தெருவென உன்னை எவர் நினைத்தார்?
தாயென இருந்தாய் எம் நெஞ்சில்.
பனிதுாவும் இரவில் பார்க்கும் போது
மஞ்சள் குளித்துவரும்
தங்கையரைப்போல
விழிமலர்த்தி விட்டு
பேசாமற் கிடப்பாய் போக்கிரி.
ஏதேனும் பேசவேண்டும் போலத்
துடிக்கும்
கள்ளி கதைக்கவே மாட்டாய்
உள்ளிழுத்த ஆசையுடன்
உட்கார்ந்திருப்பாய்
வனத்திடை ஓடிய உன்காலிடை
வசமிழந்திருந்தோம் ஒருகாலம்.
ஆனையிறவுக்கு இப்பால் வரும்
ஒவ்வொரு முறையும்
உன் அழகில் கிறங்கிப் போவோம்.
முறிகண்டியிலிருந்து உன் மேனியழகு
கோடிபெறக் கொலுவிருப்பாய்.
புழுதியடித்த பிச்சைக்காரனைப் போல
வெளியீடு:எரிமலை இதழ்
இணைய வெளியீடு :வேர்கள் இணையம்