இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

நெஞ்சமெல்லாம் நிறைந்தவரே….!

கார்த்திகைத் திங்கள்
கார்மழை மேகம் சூழ்ந்திருக்கும்
மாலைநேரம் எங்கள் தாயகத்தில்
ஊர்முழுதும் திரண்டு வந்து – உம்
அருகில் அணிவகுத்து நின்று,
நெய்விளக்கேற்றி உமை
நினைத்து நிற்க்கும் அந்த
நினைவழியா நாட்கள்,
நேற்றுப்போல் இருக்கிறதே
எங்கிருந்தோ வந்தவெதிரி
எங்கள் ஊர் புகுந்தவேளை
போட்டது போட்டபடி
எல்லாமும் இடிந்து
எங்கள் உறவுகளோடு
உயிரை மட்டும் இறுகப்பற்றி வந்தோம்.
ஏதிலியாய் வாழ்க்கை…
எவரிடமும் கையேந்தவில்லை நாம்
எதற்கும் கூட கலங்கவில்லை.
ஆனால்….?
உங்கள் கல்லறைகள் மட்டும்
எதிரியவன் காலடியில்
விட்டு வந்த காரணத்தால்
வருந்தினோம், வாய்விட்டழுதோம்
பெருகியது துயரத்துடன் கண்ணீரும் தான்.
வருடா வருடம் வருகின்ற
உம் திருநாளில் அருகிருக்க,
எம் நெஞ்சமெல்லாம் ஏங்கி
நெஞ்சுருகிப் போகிறதே.
தனிமையிலே உம்மை விட்டுவந்த
துயர் நினைந்து
நெஞ்சுருகிப் போகிறதே நெஞ்சமேல்லாம்.
1995ம் ஆண்டு வருடத்தில் வந்த
அந்த ஒக்டோபர் திங்கள் 30ஆம் நாள்,
தமிழர் தம் இதயமெல்லாம்
துயரத்தில் தோய்ந்த நாள்.
எதிரி ஊர் புகுந்த சேதி
எங்கள் காதினிலே வந்ததனால்
புறப்பட்டோம் ஊர் பிரிந்த.
கண்டி வீதி வழியாக செம்மநிதான் கடந்து,
கால்போன போக்கினிலே
நடைபிணங்கள் போல
நாம் நடந்த காட்சி
சொல்லில் வடித்திடத்தான் முடிந்திடுமா?
குஞ்சென்றும் மூப்பென்றும்
கூனென்றும் குருடென்றும்
பேதங்கள் ஏதுமின்றி,
துயர் சுமந்தோம் அந்நாளினிலே,
ஊரிழந்து வந்தவர் நாம்
திசைக் கொன்றாய்ப் பிரிந்தோம்.
வன்னியிலும் வளங்கொழிக்கும்
பிறநாடுகளிலும்
எங்குதான் இருந்தாலும்
எம் நினைவு தாயகத்தின் காவலர்கள்
உம்முடனே……..
எங்கிருக்கின்றோம்? என்பதல்ல
என்ன செய்கின்றோம்? என்பதுதான்
தமிழர் தம் கடப்பாடு.
தமிழர் தம் தலை நிமிர,
தாயகமும் கைசேர,
கரம் கொடுப்போம் நாமொன்றாய்,
மாவீரர் உம நினைவுடனே,
உமக்கென்று எதுவும் வேண்டாது
எமக்கென்று உம்முயிர் தந்தவரே
மறப்போமா உம்முகவரிகள்?
எங்கிருக்கின்றோம் என்பதல்ல
என்ன செய்கின்றோம் என்பதனை
நன்றாக உணர்ந்தவர்கள் நாம்
உறுதியாய் எமக்கொன்று தெரிகிறது.
ஊர்பிரிந்த உறவுகள் – நாம் ஊர் திரும்பும் நாள்
தூரத்தில் இல்லை.

-கவியாக்கம் : இரா.திருமாறன்.

வெளியீடு :எரிமலை இதழ் 

 மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 

மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments