2008 செப்ரெம்பர் 14 ஆம் நாள் அது. பகல் 11.00 மணிப்பொழுது. பரந்தன் சந்தியில் இருந்து முல்லைத்தீவை நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு ரைக்ரர். அந்த ரைக்ரரில் 10அடிக்கு மேலான உயரத்தில் வீட்டுப்பொருட்கள், அல்ல ஒரு வீடே பயணித்துக் கொண்டிருந்தது. சீற்றுகள், மரத்தடிகள், தளபாடங்கள், கோழிக்கூடு. பூங்கன்றுச் சாடிகள் என்பவற்றோடு சாங்கிலியிற் பிணைக்கப்பட்ட பொமரேனியன் நாய். ஒரு வயதான பெண், ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் சிறுவர்கள் பார்ப்பவர்கள் மலைத்துத்தான் போவார்கள். அந்த பரந்தன் – முல்லை சாலையில் இது போன்ற எத்தனையோரைக்ரர்கள், கன்டர்கள், லொறிகள், லான்ட் மாஸ்ரர்கள், மாட்டு வண்டில்கள், ஓட்டோக்கள் ஒவ்வொன்றிலும் வீடு அல்லது அலுவலகம் அல்லது நிறுவனம் அல்லது கடை என்று நகர்ந்து கொண்டிருக்கிறது.


இந்த நிலையிற்தான் மக்கள் தமது உயிர்களைத் தற்காத்துக் கொள்ளவும். தாயக விடுதலைப் போரை தொடர்ந்து முன்னெடுக்கவும் ஏதுவாக இடம்பெயர்கின்றனர் மரங்கள், வயல்வெளிகள், உறவினரின் வீடுகள் எனப் பல்வேறு இடங்களில் மக்கள் தாங்கியிருக்கின்றார்கள். மக்களுக்கு உதவி செய்யக்கூடிய தொண்டர் அமைப்புக்கள் சிறிலங்கா அரசால் வெளியேற்றப்பட்டுவிட்டன. மாரிமழை பொழிகின்றது மக்களின் அவலமோ வார்த்தைகளுக்த அப்பாற்பட்டது.

தங்கரத்தினம் கண்மனி 68வயது மூதாட்டி மிகவும் துயரப்பட்டு அவர் கூறிய வார்த்தைகள் இவை. “ஒரு காலமும் நாங்கள் படாத அவலத்தை இப்பபடுறம். நாங்கள் எவ்வளவு கஷ்டத்தைப் பட்டாலும் பறவாயில்லை. உந்தச் சிங்களவனிட்டையிருந்து எங்கடநாடு மீண்டிடவேணும். இப்படித்தான் எத்தனையோ துயரங்களுக்கும், துன்பாங்க ளுக்கும் மத்தியில் மக்கள் உறுதியோடும். நம்பிக்கை யோடும் வாழ்கிறார்கள்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான இளங்குடும்பஸ்தர் அலெக்ஸ் “நாங்கள் நான்காவது தடவையாக இடம்பெயர்ந்திருக்கிறம். இப்படி எவ்வளவு காலத்துக்கு ஓடுறது. இந்தத்தடவை எப்படியாவது சண்டை யை வென்றிட வேணும் அதுக்காக நாங்களும் சேர்ந்து பாடுபடவேணும் என்றதை உணர்ந்திட்டம் . எங்கடபிள்ளை யளின்ர காலத்திலயாவது அதுகள் நிம்மதியா வாழவேணும்” என்று கூறுகிறார் அலெக்ஸ் இவருக்கு முப்பத்தி நான்கு வயது. இருப்பிடம் இழந்தவர்களாய் . குடியிருந்த வீடுகளைக் கம்பும் தடியுமாய்க் கழற்றிக்கொண்டு அலையும் அவல முறும் நிலையில்தான் மக்களின் வாழ்வு நகர்கிறது . சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய கூரைவிரிப்பின் கீழ் (தரப்பாள்) மாரிமழைக்கும், நுளம்புக்கடிக்கும் ஈடு கொடுத்தபடி பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். எவ்வளவுதான் துயரங்கள் அழுத்திலும் இந்த மக்கள் படையினரின் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் அடியெடுத்து வைக்கவில்லை. மாறாக அவல வாழ்விலும் ஓர் அர்த்தத்தை உணர்கின்றனர். பாடசாலைகள், இடநெருக்கடிகள் மத்தியில் காலை, மாலை என இரு வேளைகளும் இயங்குகின்ற கூட்டுறவுச் சங்கங்கள் விடுமுறை நாட்களிலும் சுயநல மற்று மக்களுக்குப் பொருட்களை வழங்குகின்றன. கிரவல் தெருவில் இருபுறமும் கடைகள் கண்ணைப் பறிக்கின்றன . மக்களின் அன்றாட வாழ்வில் சில இடையூறுகள் ஏற்பட்டா லும் மக்கள் தம்மை இவ் வாழ்வுககு தகவமைத்துக் கொள்கின்றனர்.
ஆக்கம் :ஆதிலட்சுமி சிவகுமார்
வெளியீடு :எரிமலை
மீள்வெளியீடு : வேர்கள் இணையம்
இணைய தட்டச்சு © :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”