அன்றையதமிழர் இராச்சியம் வீழ்ச்சியடைந்து, பலநூறு ஆண்டுகள் அந்நியருக்கும், அயலவருக்கும், அடிமைப்பட்டு வாழ்ந்ததமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று எமதுதாயகத்தின் பெருநிலப்பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது
ஒரு நீண்ட, துயரமான, கொடுரமான வரலாற்று இடைவெளியின்பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர்மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும்வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள்
என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்

போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணிவகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்தியஇலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்தவிலை ஒப்பற்றது.

தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை .
அது எமது இனத்தின் வீரவிடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
சாதி, மதம் , வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒருவிடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கிழ் ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள். வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த
விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மககளை எழுச்சியூட்டி , உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன

வெளியீடு : வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”