இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home slider தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!

தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்….!!!

புனலிலும் அனலாய் கனன்றிடும்
புனித மேனியர்…!!!
புயலாய் காற்றிலும் சுழன்றிடும்
புதுக்காவிய நாயகர்கள்…!!!

தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து -தமிழீழ
தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்….!!!

வெஞ்சின கரு வேங்கைகளே…!!!
வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே…

வீழ்ச்சி கண்ட எம் தமிழின மானத்தை
எழுச்சி கொள்ள வைத்திட…
வீரத்தலைவனின் வழிகாட்டலில் – நெருப்பாய்
எழுந்திட்ட எம் உயிர் அம்புகள்…!!!

காலம் வைத்து விட்டு சென்ற பணியினைத்தொடர
காலனுக்கே சவால் விட்டு  – தம் மரணத்திற்கு தாமே
கால நேர இடம் குறித்து,,,
காவியம் படைக்கும் சரித்திர நாயகர்கள்…!!!

அழுத்த மனதுடனும்,,
அமுக்க உடலோடும்,,
அன்பாய் கதை பேசி
அரவணைத்து – எம்மை
அழ வைத்து அலை அலையாய்
அணி திரண்டு செல்லும் கரு முத்துக்கள்…!!!

புன்னகைத்து கையசைத்து சாவினைத்தேடிப்போகும்
புதிய இலக்கண வீர மறவர்கள்…!!!

நெருப்பின் வயிற்றிலே கருத்தரித்து,,
நெருப்பாகி…காற்றோடு கலந்திடும் புது மனிதர்கள்..!!!

காவிய நாயகர்களே….!!!
காற்றிலே உயிராய் கலந்திருக்கும் உங்கள் மூச்சுக்கள் மீதும்
காலம் மீதும் சத்தியம் – நாம் ””தமிழீழம்””
காண்போம் உறுதி….!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

புலிகளின் குரல் வானொலி.!

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...

கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...

பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.!

பூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.! சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...

Recent Comments