இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மாவீரர்கள் மாமனிதர் திரு அரியநாயகம் சந்திரநேரு

திரு அரியநாயகம் சந்திரநேரு

தமிழீழத் தேசியத்  தலைவர் அவர்களால் மாமனிதர்  என்று மதிப்பளிக்கப்பட்ட 
 மாமனிதர் திரு அரியநாயகம் சந்திரநேரு .!
தலைமை செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
09.02.2005
தமிழ் மக்களின் விடிவையும் தமிழீழ மன்னனின் விடுதலையையும் தனது வாழ்வின்
அதியுன்னத  இலட்சியமாக வரித்து அந்த உயரிய இலட்சியத்திற்காக அயராது
உன்னத மனிதரை தமிழர் தேசம் இன்று இழந்துவிட்டது தமிழ் மக்களது உரிமைக்காகவும்
நீதிக்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று
மிருகத்தனமான தாக்குதலுக்கு ஒரு தமிழினப்  பற்றாளர் பலியாகிவிட்டார் .
திரு அரியநாயகம் சந்திரநேரு   அவர்கள் தன்னலம்  அகன்ற மனிதநேயமிக்க ஒருபொது நல வாதி . தமிழீழ மண்  தந்த  தலைசிறந்த ஒரு மனிதஉரிமை ஆவலர். புரட்சிகரமான
அரசியல்வாதி. அனைவரது  உள்ளங்களையும் கவர்ந்துகொண்ட ஒரு உயரிய பணியாளர்.
இவரது சாவு தமிழர் தேசத்திற்கு ஒரு ஈடுசெய்யமுடியத பேரிழப்பு
அம்பாறை மண்ணோடும் அந்த மண்ணின் மக்களோடும் ஒன்றியதாகவே அவரது
வாழ்விருந்தது சிங்களப் படைகளில் தமிழின அழிப்புப் போர் உச்சம்பெற்றிருந்த நாட்களிலும்
போர்ஒய்வு நிலவுகின்ற இன்றைய நாட்களிலும் அந்த மணோடும் அந்த மக்களோடும்
இணைந்துநின்று அனைத்துக்கும் முகம்கொடுத்தார். சிங்களப் படைகள் அம்பாறை மண்ணில்
புரிந்த அழிவுகளையும் அட்டுழியங்களையும்  நெஞ்சுறுதியுடனும் நேர்மைத்திறனுடனும்
உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். சிங்களைப் படைகளின் இடைவிடாத அச்சுறுத்தல்களுக்கு
மத்தியில், ஆபத்துக்கள் குழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சுடனும் அபாரமான
துணிைச்சலுடனும் அநீதியை  எதிர்த்துப் போரிட்டார்  வடக்குகிழக்கு மனிதஉரிமைகள்
நிறுவளர்களில் ஒருவராக இருந்து தமிழ் மக்களது  உரிமைகளுக்காக ஓயாது  உழைத்தார் .
தமிழ் மக்களது போராட்ட நியாயங்களையும் நியாயப்பாடுகளையும்
தெட்டதெளிவாக உலக அரங்குகளில் ஏடுத்துக்கூறினார். இவரது அரும்பணி என்றும்  பாராட்டற்குரியது .
திரு அரியநாயகம் சந்திரநேரு அவர்களின்  இணைப்பற்றிற்கும், விடுதலைப்பற்றிற்கும்
மதிப்பளித்து அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு  வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.
உன்னத  இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச்  சாவு  அழித்துவிடுவதில்லை
எமது தேசத்தின் ஆன்மவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.
“புலிகளின் தாகம்  தமிழீழ த்தாயகம”
(வே பிரபாகரன்)
தலைவர் 
தமிழீழ விடுதலைப் புலிகள்.

விடுதலைப்புலிகள் இதழிலிருந்து  வேர்கள்.!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments