இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று காலை 10.48 மணிக்கு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள்
இலட்சிய உறுதியின் உச்சக்கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை; காலத்தால் சாகாத வரலாற்றுப் புருஷனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.