கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்தில் நீரில் மூழ்கி மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களிலும், சுகவீனம் காரணமாகவும் வீரச் சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜசிங்கம் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…..!
26.06.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்தில் குளிக்கும்போது தவறுதலாக நீரில் மூழ்கி சாவினை அணைத்துக் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜன் / ராஜசிங்கம் ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
26.06.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். சேரமதி ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
26.06.2000 அன்று வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். புகழ்வேந்தன் ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
26.06.2000 அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் சுகவீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட வீரவேங்கை வெற்றிச்செல்வன் ஆகிய மாவீரரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”