‘பிரபா கரன்’ என்னும் பிள்ளை வேங்கை
உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து
திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்:
பெருமானத் தமிழன்! பெறலரும் வீரன்-அவன்
உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம்!
ஒங்குகவன் புகழென்றே
ஒலிப்பாயே முரசம்!
இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி!
கொந்திய நெஞ்சாங் குலையினிை லிருந்து, அவன்
சிந்திய அரத்தத்தால் சிவந்தது தமிழீழம்:
பிந்திய தமிழ்மறம் பேணிப்புரந் தான்!-அவன்
வந்தலர்ந்த நாள் மகிழ்ந்து பாடுகவே வாழ்த்தும்
வளர்க அவன் புகழென்றே
மீட்டுகவே யாழும்!
மறந்த தமிழினத்தின் மறஞ்சொன்ன வேந்தன்!
இறந்த இனப்புகழை ஏற்றிவைத்த வீரன்:
திறந்த மார்பொடு பகையினைத் தீர்த்த
சிறந்த இராவணற்கும் சிறப்பளித்த தமிழன்-அவன்
பிறந்தொளிர்ந்த நாள்நினைந்து பேரிகையே
பெற்றான்காண் பெரும்புகழும்! (முழங்கு:
பிளிறுகவே வேழம்

கவியாக்கம்-பெருஞ்சிந்திரனார்
(1989 ம் ஆண்டு தமிழீழ தேசித் தலைவர் அகவை நாளுக்கு எழுதிய கட்டுரை )
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”