இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தமிழீழ போராட்ட வரலாறு தர்மமும், உண்மையும் எமது பக்கம் சார்ந்திருக்கின்றது.!

தர்மமும், உண்மையும் எமது பக்கம் சார்ந்திருக்கின்றது.!

திம்புப் பேச்சு வார்த்தையின்  போது 1985 ஆண்டு செப்டெம்பர்  மாதம் வெளியிட்ட அறிக்கை காலத்தின் தேவைக்கருதி  வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம் .!
ஏமது தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு உள்நாட்டுநெருக்கடியாகத் தோன்றிய எமது பிரச்சினை இன்று உலகத்தைஈர்க்கும் ஒரு
சர்வதேச நெருக்கடியாக விஸ்வரூபம் கொண்டுள்ளது.
சிங்கள அரசானது எம் முடன் தனித்து நின்று போராடவில்லை.ஏகாதிபத்திய நாசகார சகதிகள் அனைத்தையும் தனக்குப் பக்கபலமாக அனிைத்திரட்டி  எமது மக்களுக்கு எதிராக ஒரு இன
அழிப்பு யுத்தத்தை நடத்தி வருகிறது
எமது கோரிக்கை என்ன ?
எமது அரசி யல் இலட்சியம் என்ன என்பதில் நாம்
மெளனமாக இருந்துவிடவில்லை . எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிய திட்டம் ஒன்றை நாம் முன்வைத்தோம். நாம் ஒரு
தேசிய இனம் என்ற ரீதியிலும், வரலாற்று ரீதியாக அமைந்த எமது  பரம்பரை தாயக  பூமி எமது சொத்துடமை என்பதாலும் எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை எமக் குண்டு. இந்த சுயநிர்ணய உரிமையின்
அடிப்படையிலேயே எமது தனியரசுப் போராட்டம் அமைந்திருப்பதால் எமது போராட்டம் நியாயமானது என்பதைவிளக்கியிருந்தோம்.
தேசிய சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டம் நீண்ட வரலாற்றையுடையது. பல வடிவப் போராட்டங்களால் பரிணாமம் பெற்றது. காந்தியப்பாதையில் அமைதிவழிப் பாதையில்
மொழிஉரிமை கோரி, சமஉரிமை கோரிசமஸ்டி கோரி நடைபெற்ற அகிம்சை வடிவப் போராட்டங்கள்அனைத்துமே எதிரியின்இராணுவ  ஒடுக்குமுறையால்அடக்கியொடுக்கப்பட்டன.
இறுதியில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான
தனியரசுக் கோரிக்கை பிறந்து, அது புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவம் பெற்றது.
இப்படியாக தமிழரின் அரசியல் போராட்ட வரலாறறின்  உசசககLமாகவே தமிழீழக் கோரிக்கையும் அதனை அடையும்மார்க்கமாக ஆயுதப்போராட்டமும் பரிணமித்தது என்பதை விளக்கியிருந்தோம்.
தமிழீழ மக்களின் தேசியத்திற்கும், தாயகத்திற்கும். தேசியசுயநிர்ணய உரிமைக்கும் உத்தர
வாதமளிக்கப்படாத எந்த ஒரு தீர்வையும் நாம் அங்கீகரிக்கப்போவதில்லை என்பதே நமது
உறுதியான நிலைப்பாடாக இருந்ததுஆனால், சிங்கள அரசு எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை
சிங்கள இனவாத ஆட்சியாளர் ஒரு இராணுவத் தீர்வையே விரும்புகிறார்கள் என்பது
அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெட்டத் தெளிவாகியுள்ளது. எமது தேசிய சுதந்திரப்
போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் பூதாகரமாகத்   திரித்துக்காட்டி  சுதந்திரப் போராளி
களை வன்முறைப்பித்தர்களாகச் சித்ரித்துக்காட்டி . இராணுவரீதியாக எம்மை
ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.
இந்த இலக்கில் அவர்கள் முழுச்சிங்கள தேசத்தையுமே இராணுவமயமாக்கி வருகிறார்கள். பெரியதொரு   இனயுத்தத்திற்கு   ஆயத்தங்கள் செய்து வருகின்றன .
தர்மமும் உண்மையும் எமது பக்கம் சார்ந்திருக்கின்றது. அதுவே எமது பலம் .
அதர்மமும், பொய்மையும் எதிரியின் பக்கம் சார்ந்திருக்கின்றது. அதுவே அவனின்
பலவீனம்.
ஈற்றில் வெற்றி கொள்வதுநாம். ஏனெனில் என்றும் அழியாத தர்மம்
எமக்குப் பக்கபலமாக இருக்கின்றது
-தமிழீழ தேசியத் தலைவர் மேதகு .வே .பிரபாகரன் அவர்கள் 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments