வெண்காந்தள் செங்காந்தள் என்றும் வர்ணிப்பார்கள்…
தமிழீழ தேசிய தலைவர் அவர்களால் நான் போற்றப்பட்டேன்…
எனக்கென்று ஒரு நாடு உண்டு…
கொடி உண்டு …
தேசிய கீதம் உண்டு…
தலைவன் உண்டு…
மக்கள் உண்டு…
இப்படி என்று பல கெளரவிப்புகளுடன் தமிழீழத்தில் அவதரித்தேன்….
என்னை தமிழீழத்தின் தேசிய மலராக பிரகடணப் படுத்தப்பட்டது…
நான் தேசிய கொடியின் வர்ணங்களை ஒத்தே இருக்கின்றேன்…
நான் பூக்களில் காந்தள் பூவாக பிறந்ததிற்கு பெருமை கொள்கின்றேன்…
மாவீரர் செல்வங்களின் கல்லறைகளை பூஜிப்பதில் பெரும் பாக்கியம் அடைவேன்…