இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள் அந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.!

அந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.!

1992 ம் ஆண்டு தாயகத்தாய் அன்னை பூபதி  அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த செய்தியை  இன்று வேர்கள் இணையத்தில்  வெளியீடு செய்கின்றோம் ..!

மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத, எவருமே சாதித்திராத, மகத்தானை மனித அர்ப்பணிப்புக்களைக் கொண்டதாக எமது விடுதலைப் போராட்டம் புகழீட்டி நிற்கிறது.இந்த அற்புதமான தியாக வரலாற்றில் அன்னைபூபதி ஒரு உன்னதமான , தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.
சத்தியத்திற்காகச் சாகத் துனிந்துவிட்டால் ஒரு சாதாரன மனிதப் பிறவியும் சரித்திரத்தை படைக்க முடியும்.இதற்கு அன்னைபூபதியின் தியாகம் ஒருசிறப்பான எடுத்துக்காட்டு. சத்தியத்திற்காக, தர்மத்திற்காக அவர் சாவை அரவனைத்துக் கொண்டார். இந்த ஒப்பற்ற ஈகையால் ஒரு சாதாரண தாயான அவர், அசாதாரண சாதனையைப் புரிந்து தேசியத்தாய் என்ற
அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
அறப்போரிலும் சரி, ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப்போர் உலகசாதனைகளைப்படைத்துவருகின்றது, மனித சிகரத்தை எட்டியிருக்கிறது.
அகிம்சையின் அறத்தையும், ஆன்மீக தர்மத்தையும் போதித்துவந்த பாரதநாடு ஆக்கிரமிப்புப் பூதமாக அன்றொருநாள் எம்மண்மீது கால் மிதித்தது. அப்பொழுது எமது போராளி ஒருவன் பாரதத்தின் ஆன்மீக மரபில் அறப்போரைத் தொடுத்தான்.
காந்தி அடிகளின் சாத்வீக தத்துவத்தை பாரத நாட்டிற்குப் புகட்டிக்காட்ட விரும்பினான். ஆன்மீக உறுதிப்பாட்டில் அவனது உயிர்த்தியாகம் காந்தியின் அறக்கோட்பாட்டிற்கு ஒரு மகோன்னதமான செயற்பாட்டுவடிவம் கொடுத்தது.
பாரதத்தின்மடிந்துபோனஆன்மீகம் தமிழீழத்தில் புதுப்பொலிவுடன் புரட்சி வடிவத்தில் மறுபிறப்பு எடுத்தது.
திலீபனின் தியாகம் இந்திய மாயையைக் கலைத்தது. தமிழீழ தேசிய உணர்வைத் தட்டி எழுப்பியது. இந்த தேசிய எழுச்சியின்வெகுசன வடிவமாக அன்னையின் அறப்போர் அமைந்தது.
அந்த வயோதிபத் தாய் நீதியின் நெருப்பில் தன்னை எரித்துக் கொண்டாள். அந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபமாக எரிந்துகொண்டு இருக்கிறது.
 – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்கள்
இணைய  வெளியீடு    ; வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments