1994 செப்டெம்பர் 13ம் நாள் இலண்டன் பி.பி.சியின் தமிழ் சேவையின் சார்பில் திருமதி.ஆனந்தி என்ற நிருபர் தமிழீழத் தேசியத்தலைவரைப் பேட்டி கண்டபோது தேசியத் தலைவர் கூறியதை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம்
“பேச்சுவார்த்தைகள் ஒரு சுமூகமான சூழ்நிலையில், ஒரு சமாதானமான சூழ்நிலையில் நடைபெறுவதையே விரும்புகிறோம்.
ஒருசுமூகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசுதான் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். இந்தத் தேர்தல் முடிவுகளும் அதனையே நிரூபித்துக் காட்டுகின்றன.
நாமும் சமாதானத்தையே விரும்புகிறோம். ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிம்மயாக வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம் . இன்று சமாதானத்த்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது போர். எனவே போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். யார் இந்தப் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தார்களோ அவர்களே இந்தப் போருக்கு முடிவுகட்ட முன்வரவேண்டும்.
போர்மூலம் இராணுவ அடக்குமுறைமூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதன் மூலமே இன்றைய இனநெருக்கடிக்குத் தீர்வுகாணலாம் சமாதான வழிமூலமே இதனைச் சாதிக்கலாம். இதனை சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்கும் இராணுவவாதிகளுக்கும் சிங்கள மக்களே உணர்த்தவேண்டும் . நாம் சிங்கள மக்களை நேசிக்கிறோம். நாம் சிங்கள மக்களுக்கு விரோதமானவர்கள் அல்ல.
சிங்கள தமிழ் மக்களுக்கு மத்தியில் எழுந்த முரண்பாடுகளுக்கும் பகைமைக்ககும இனவாத சக்திகளே காரணம். இந்த இனவாத சக்திகளைச் சிங்களமக்கள் இனம் கண்டு ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும்” என்று கூறியிருக்கிறார்
வெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை? மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை? வெறும் மையா இதனை எழுதுவது? வெள்ளைத் தாளில்,...
சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.! எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன்....
நாம் ஒன்றை மட்டும் தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகின்றோம். எந்தச் சூழ்நிலையிலும் நாம் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது. போராட்டத்திலிருந்து ஒதுங்கி காலம் கனியும் என்று காத்திருக்கவும் முடியாது. நாம் தொடர்ந்து போராடியே தீருவோம்....
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...