அங்கீகரிக்ப்படாத தேசத்தின் அங்கீகரிக்ப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரலே நீர் தான் தமிழீழத்தேரின் அரசியல்அச்சாணி
சமாதனம் ஒன்றை வைத்து பலவெற்றிகள் ஈட்டினாய் இன்னும் சில காலம் நீ வாழ்ந்திருந்தால் இராஜதந்திர முறையிலே ஈழம் பெற்று தந்திருப்பாய்
எதானால் இவரை அழைத்தாயோ
இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லையா எங்கள்
தேசக்குரலின் நினைவுகள் அழியா தெங்கள் நினவில் நிலைப்பார்
உமது இழப்பு வேர் வெம்பி விம்மும் ஒலி
காற்றேறி அலைகிறது.
ஈழத்தி நடாந்த போராட்டம் எல்லாம் தரணியரிய செய்தாய்
உலகில் எவரும் பாசத்தோடுஅருகில் சென்று அன்பாய் பேசும்
பாலா அண்ணா எங்கள் தமிழீழத்தின் கொள்கையாம்
தாயகம் தேசியம் தன்னாட்சி யென்றழகாய் வகுத்து அளித்தார் அவரை
சர்வேதேச அரசியலும் மறவோம்.
தேசியமே இவரின் தத்துவம்
எதிரியும் அறிவார் தேசத்தின் குரலின் தத்துவம்
நீர் தந்த ‘போரும் சமாதானமும்’ எம்மை வழிநடத்தும் தமிழீழ தேசத்திற்கே இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு தேசத்தின் குரலே
இனி என்று பிறக்குமோ ஒளி வீசும் தத்துவ விளக்கு!