இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தேசத்தின் குரல் தேசத்தின் குரல் பிரிவால் எழுந்த உணர்வுகள்…!

தேசத்தின் குரல் பிரிவால் எழுந்த உணர்வுகள்…!

தமிழிழ விடுதலைப் புலிகளில் தத்துவாசிரியரும், மதியுரைஞர், ஈழஞானி, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பிரிவால் எழுந்த உணர்வுகள்…!

குரல் கொடுத்த தேசத்தின் குரலின்று
குரல் இழந்த்ததோ….!
கூற்றவனின் சூழ்ச்சியினால்
ஈழப் பூ உலர்ந்ததோ …….!
கட்டியம் சொன்ன பெருமகனை
காலன் எம்முன் கயிரிடை திணிப்பதா?
காலத்தின் உயிர் துடிப்பினை கரிகாலன்
காதில் உரைப்பவனை…..

வெறும் நாணல் நீ..!
எங்கள் வேங்கையை சரிப்பதா?
சத்தியத்திற்காய் வாழ்ந்த மகன்.
அரசியல் சாதனை மடியில் தவழும் புகழ்.
சாவுகொள் கொடுநோய் சூழ்ந்தும் கூட‌
காவிய நாயகன் கரம் பற்றி
சாவினை சாய்க்க எழுந்த அரண்.

மட்டு மண்டூர் பெற்றுத்தந்த பாலா மாமா..!
தமிழ் மாந்தர் விழியில் ஒளி
காணத்துடித்தாய் நீ மாசிகக்கண்ணா…!
பல்நெறியாளுகையில் வல்ல பரந்தாமா..!
ஈழப் பார்த்தீபனின் இரதம் அசைத்தாய் மதிவண்ணா!

உலகு முழுதும் ஓர் குரலாய்
உண்மைகளை உருவமைத்த கரம்…
ஊண் முழு பிணி புகுந்தும்
தமிழ் உறவுக்காய் வாழ்ந்த வரம்…
ஈழதேசம் முழுவடிவம் பெறவே
உயிர்பிரியும் வரை விடிவை நினைத்தீர்…!
தமிழர் தேசம் எதிரில் தெரிகையில்
எம்மை பிரிந்த்து போனது எங்கே..?

பாலசிங்கம் ஐயா…! ஐயா…!
பாலசிங்கம் ஐயா…! அன்பால்
நீங்கள் பாலநெஞ்சன் ஐயா…!
இராஜதந்திரங்களை ஆழும் மந்திரியின் ஐயா…!

அண்ணனுக்கு அண்ணனாய்
அவதாரபுருசனாய் அன்னை மண்
காக்க வேண்டி அன்ரி அடேலுடன் வந்தவர்…
திம்பு முதல் ஜெனிவா வரை மேசைதோறும்
பகை பேச்சு மூச்சைக்குழைத்தவர்…

மானமுள்ள புலத்தமிழர் யாவரையும்
ஒர் முகமாய் இணைத்தவர்…
ஆறாத தமிழர் தமிழர் சோகத்தால்
அகிம்சை வழியை துறந்தவர்…
அண்ணனின் போர் அசைவுக்காய்
ஆரூடம் சொன்னவர்…

இனி பேச்சில்லை என்றவுடன்
நீங்கள் மூச்சிழந்து தூங்குவதேன்…?
உங்கள் பேச்சின் ஓசை கேட்ட எமக்கு
தாயக மூச்சின் வேகம் குறையாது…
வேலு மைந்தன் உள்ள வரையில்
தமிழர் தாகம் என்றும் ஓயாது…
விடிவு எங்கள் எதிரில் தெரிய‌
நீங்கள் விழிகள் மூடக்கூடாது.
ஈழதாகம் வெகு தொலைவில் இல்லை
இமைகள் திறந்து பாருங்கள்.
இது ஈழஞானி தூங்கும் நேரம்
எங்கள் விழிகள் கசியக்கூடாது..
புலி குகைக்குள் வாழும் செருக்கில்
நாங்கள் துவக்கை எடுத்து களம் புகுவோம்.
இனி வெடிக்கும் திசையில் விடிவு முளைக்கும்
பெரும் விருட்ச்சம் போல உருமாறும்.
விதை குழிக்குள் உறங்கும் மண்ணின் சிசுக்கள்
விழிக்கப் போவதைப்பாருங்கள்.

பாலதேவன் எங்கள் ராஜகுரு நினைவு
நிஜமாகும் பொறுத்திருங்கள்.
பகை சாய்க்க புலியாய் எழுவோம்…
புயலாய் போர்க்களம் புகுவோம்…
இது உறுதி…

 கவியாக்கம்:ஈழக்கவிஞன் இணுவை பகீர்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments