இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home விடுதலையின் அணையாத தீபங்கள் தமிழின விடுதலை நசுக்க முனையும் எதிரியின் சதிச்செயலை இனம் காண்போம் .!

தமிழின விடுதலை நசுக்க முனையும் எதிரியின் சதிச்செயலை இனம் காண்போம் .!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சர்வதேசப் பரிமாணத்தை
குலைத்துவிடும் சிறீலங்கா அரசின் நோக்கம், மனிதப் படுகொலைவடிவம்
எடுக்கத் தொடங்கிவிட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான
வகையில், அனைத்துலக ரீதியாக மேற்கொன்னப்பட்டு வரும் ஆதரவுச்
செயற்பாடுகளை மடக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பரத முயற்சிகளை எடுத்து
வரும் இன்றைய காலகட்டத்தில், பாரிஸ் நகரில் , 26.10.96அன்று மாலை .
மணியளவில், எமது இரு முக்கிய செயற்பாட்டாளர்கன் இனம்தெரியாதோரால்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடுவதற்கு
வகுக்கப்ட்டுள்ள நாசகாரத்திட்டத்தி ஒர் அம்சமாகவே இச்சம்பவத்தையும்
நாம் நோக்க முடியும்.

சிறீலங்கா அரசின் பின்னணியுடனேயே மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய இப்
படுகொலைகள் இரு முக்கிய செயற்பாட்டா ளர்களை நோக்கி குறிவைத்ததாக
இருக்கின்றன. இவ் இலக்குகள் மிகவும் திட்டமிட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்
பட்டவையாகவும் இருக்கின்றன. எமது இயக்கத்தின் சர்வதேச நிதிப்
பொறுப்பாளராக திரு. கந்தையா பேரின்பநாதன் (நாதன்) ஈழமுரகப் பத்திரிகை
ஆசிரியர் திரு.கந்தையா கஜேந்திரன் (கஜன்)ஆகியோரே திட்டமிட்ட முறையில்
படுகொலைசெய்யப்பட்டவ ர்,
எமது இயக்கத்தின் சர்வதேசச் செயற்பாடுகளில் 1984ம் ஆண்டு முதல் முழுநேர
உறுப்பினராக இருந்து இயங்கிவந்த திரு. கந்தையா பேரின்பதாத (நாதன்,
சர்வதேச வேலைகளில் சில முக்கிய பொறுப்புக்களைச் சுமத்து நின்றவர். பல்வேறு
காலகட்டங்களில் இயக்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட காலங்களில்
எல்லாம் உற்சாகத்துடன் இயக்கப்பணிகளில் ஈடுபட்டவர். பல்வேறு நாடுகளின்
முடுக்குகளெல்லாம் அலைந்து திரிந்து, எமது மக்கள் விடுதலை அடைய
வேண்டும் என்ற அவாவுடன் அரும்பனிையாற்றியவர். இவரது செயற்பாடுகள்
எமது தாயகபூமியிலே எமது போராளிகளும் மகளும் பல வெற்றிகளுக்குப்
ஆண்ட பெரிதும் உறுதுணையாக இருந்து வந்தது.

திரு. சுந்தையா கஜேந்திரன் (கஜன் ) விடுதலைப் புவிகளின் பிரெஞ்சுக்
கிளையின் முக்கிய செயற்பாட்டாளராக நீண்டகாலமாக இயங்கி வந்தவர். கலை,
இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். தமிழ் மக்கள் மத்தியிலான
அரசியல் வேலைகளிலும் கலை இலக்கிய முயற்சிகளிலும் உற்சாகமாக இயங்கி
வந்தவர், 1995ம் ஆண்டு தை மாதம்”ஈழமுரசு’ என்னும் பத்திரிகையை ஆரம்பித்து
அதன் ஆசிரியராகவும் இருந்து பத்திரிகையின் வளர்ச்சிக்கு அயராது கூழைத்து
வந்தவர்

இப் படுகொலைகளின் பின்னால் என்ன நோக்கம் இருந்திருக்கக்கூடும்?
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை நசுக்கி விடுவதற்கு, போராட்டத்திற்கு
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் நிதிப்
பங்களிப்பினைத் தடைசெய்வது அவசியம் என்பது எதிரியின் முக்கிய அவதானிப்பாக் இருந்து வந்துள்ளது :

இராணுவ ஆக்கிரமிப்பினை முறியடிப்பதற்கு அவசியமான தமிழர் படையணியின் பலத்தினை அதிகரிப்பதற்கு அவசியமானதாகவும் இருந்து வருகின்றது. போராட்டத்திற்கு இத்தகைய நிதிப்பலம் சென்றடைவதற்கு சர்வதேச நிதிப்பொறுப்பாளராக இயங்கி வந்த நாதனின் பணி முதுகெலும்பு போன்றதுஇந் நிதி போராட்டத்தினைச் சென்றடைவதைத் தடுப்பதற்காக மக்கள் போராட்டத்தின்
வெற்றிக்காக மனமுவந்து அளிக்கும் பங்களிப்பீணை, பயமுறுத்திச் சேகரிக்கப்படும் நிதியாகச் சித்தரிப்பதற்கு சிறீலங்கா அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இம் முயற்சிகள் வெற்றியளிக்காத சூழலில், போராட்டத்திற்குச் சென்றடையக் கூடிய நிதியினைத் தடுப்பதற்கு சர்வதேச நிதிப்பொறுப்பாளரான
நாதன் மீது குறிவைக்கப்பட்டதாக நாம் உணரமுடியும் .
ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்த திரு. கஜன் புலம்பெயர்ந்த
நாடுகளிலுள்ள பல்வேறு தமிழ் எழுத்தாளர்கள்கலைஞர்கள்
, மத்தியில் இருக்கக்கூடிய சில கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மூலம் வெற்றிகொண்டு: ஈழமுரசு பத்திரிகையினூடாக அவர்களையும் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து வந்தவர். பாலம் என்னும் சஞ்சிகையின் மூலம் மக்கள்  பிரச்சனையை  இ ணைந்து நின்றவர். வெளிநாடுகளில் வாழுகின்றதமிழ் மக்களைப் போராட்டத்தோடும், தாயக  நினைவுகளோடும் இணைத்து வைப்பதற்கு இவர் ஆற்றி வந்த பங்கு அளப்பரியது. இவை போதாதா எதிரி இவர் மீதும் குறி வைப்பதற்கு?

இவர்களைக் கொன்றொழித்துவிடுவதன் மூலம் இவர்கள் ஆற்றி வந்த
பணிகளை முடங்கச் செய்வது மட்டுமன்றி தமிழீழ விடுதலைக்கு ஆதரவு வழங்கி
வரும் தமிழீழ மக்கள் மத்தியில் பதட்டத்தினையும் பயப்பீதியினையும்
குழப்பத்தினையும் உண்டுபண்வி, போராட்டத்தின் சர்வதேச செயற்பாடுகளை
பாதிப்புறச் செய்யும் சதித்திட்டம் இச்சம்பவத்தின் பின்னால் உன்ளது
விடுதவப் போராட்டத்தின் சர்வதேச பரிமாணம் முடக்கப்படுமானால்
போராட்த்தின் இலகு என்ற இதனையுடன் செயற்பட்டு வந்த
நசுக்கிவிடுவது அரசு, இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக இருக்கும் என்பது இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு . விடயமேமற்றும் எமது தாயக பூமியிலே சிறிலங்கா  அரசு   அதன் நடவடிக்கைகளால் எமது மக்கள் படும் சொல்லொணாத் துயரங்களை, சர்வேதேச மயப்படுத்துவதற்க்காக சரவதேச தமிழ் சம்மேனத்தால்
30.10.1995 முதல் 05. 11.1996 வரையிலான காலப்பகுதிக்குப் பிரகடனப்படுத்தப்பட்ட
“அனைத்துலகக் கவஈர்ப்பு வாரத்திற்கான முன்னேற்பாடுகள் உற்சாககரமாக
நடைபெற்று வந்த இந் நேரத்திலேயே இப்படுகொலைகளும் இடம்பெற்றுள்ளன.
என்பதுவும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இப்படுகொலைகளை வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் ஒரு சவாலாகவே
எடுத்துக்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தினால் உணர்ச்சிவசப்பட்டு தேவையற்ற
விதத்தில் கொதித்து எழுவதோ அல்லது ஒருவித பய உணர்வுடன் ஒதுங்கிக்
கொள்வதோ இப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடாத்தியவர்களின் நோக்கித்திற்குத் துணைபுரிவதாக அமைந்துவிடும். இதனால் எமது மக்கள் நிதானமாகவும் அதேநேரம் மிகவும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும், எத்தகைய அழுத்தங்களையும் எதிர்கொண்டு முன்னேறும் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின் சர்வதேசச் செயற்பாடுகளுக்கு எதிரி போட முனையும் அனைத்துத் தடைகளையும் உடைத்து, எமது மக்களுக்கான சர்வதேச பலத்தினையும் நாம் அளிப்போம் என்பதில் உறுதிகொள்ள வேண்டும் .
எமது அன்புக்குரிய இருவரையும் இழந்த சோகம் எம் நெஞ்சில் ஆழமாகப்
பொதிந்திருப்பினும், வாடிநின்று வேதனையாகத் துவண்டு விடுவதால் பயன் ஏதும்
வரப்போவதில்லை. இவ் இருவரும் எந்த இலட்சியத்திற்காக அயராது உழைத்
தார்களோ, எந்நோக்கத்திற்காக தமது உயிர்களை அர்ப்பணித்தார்களோ அதற்காக தளராத உறுதியுடன் உழைப்பதே இவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கமுடியும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

 

அனைத்துலக செயலகம்  ,

தமிழீழ  விடுதலைப்புலிகள்.!

வெளியீடு :தொலைதூர விடுதலை சுவுடுகள் நூல் 

மீள்வெளியீடு :வேர்கள் இணையம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments