இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home இனப்படுகொலைகள் தமிழினப்படுகொலை மகிந்தரின் கொலைக்களம்.!

தமிழினப்படுகொலை மகிந்தரின் கொலைக்களம்.!

தான் யார் என்பதை மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தி வருகின்றார். இதுவரையான சிங்கள ஆட்சியாளர்களில் மிகவும் கொடூரமான
கொலை வெறித்தாகம் கொண்ட ஆட்சித்தலை வராக மகிந்த ராஜபக்ச காணப்படுகின்றார். பேச்சில் மென்மையும் – செயலில்
கொலைவெறியும் கொண்ட பிரேமதாசாவை விடவும் குரூரமான சனாதிபதியாக மகிந்த ராஜபக்ச அடையாளம் காணப்பட்டுள்ளார்.தலை வேறு – உடல் வேறாகத் தமிழர்களைப் படுகொலை செய்வித்து ஆற்றிலும் – வயல்களிலும் – வீதியோரங்களிலும் வீசி எறிவது பிரேமதாசாவின் காலத்து வழமையாக இருந்தது. பிரேமதாசாவின் பிரதான கொலைக்
களங்களாகக் கொழும்பு மாவட்டம் – கிழக்கு மாகாணமும் விளங்கியிருந்தன. பிரேமதாசாவின் தலை அறுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மகிந்தரும் பின் பற்றத் தொடங்கிவிட்டார். அண்மையில் கொழும்பு – அவிசாவளையில் தலைகள்
துண்டிக்கப்பட்ட தமிழர்களின் ஜந்து உடல்கள் வீசியெறியப்பட்டுக் கிடந்தன.

மகிந்தரின் கொலைக்களமோ பிரேமதாசாவையும் விஞ்சும் அளவுக்கு விரிந்து – பரந்து கிடக்கின்றது. வடக்கு – கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகம் என்று சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள்
அனைத்திலும் மகிந்தரின் பயங்கரவாதச்துச்செயற்பாடுகள் தாண்டவமாடுகின்றன.

பிரேமதாசாவின் கொலைக்கரங்களாகப் பெரும்பாலும், விசேட அதிரடிப்படையும்- சிங்கள இராணுவமும் செயற்பட்டிருந்தன.
ஆனால், மகிந்தரின் கொலையாளி களாகச் சிங்களத்தின் அனைத்துவகைப் படைகளும் செயற்படுகின்றன. ஒட்டுக்
குழுக்களும் கொலைச் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுகின்றன.
தமிழர்களைக் கொன்று அழிப்பதுதான் தமிழரின் இனப்பிரச்சினைக்
கான தீர்வு என்று பிரேமதாசா நினைத்துச் செயற்பட்டார். அவரின் வழியைப் பின்பற்றியுள்ள மகிந்த ராஜபக்ச கொடூர இனக்கொலையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழர்களைக்கொன்றழிப்பதில் பெயர் பெற்றிருந்த சிங்களப் பிரமுகர்களை மகிந்தர் அரவணைத்துக்
கொலைப் பொறுப்புக்களை வழங்கிவருகின்றார்.

முன்னால் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவிற்குக் “கொழும்பைப் பாதுகாக்கும் பொறுப்பு” வழங்கப்பட்டுள்ளதாகச்
செய்திகள் தெரிவிக்கின்றன.

முப்படைகள் மற்றும் காடையர்களுடன் இணைந்து இப்போது மூவாயிரம் சிங்களவர்களைக்கொண்ட ஒரு மேலதிக கொலைப்
படையும் கொழும்புவாழ் தமிழர்களை வேட்டையாடத் தயாராகின்றது. இந்த மூவாயிரம் பேருக்கு ரத்வத்த பொறுப்பாக இருப்பாராம்.
இதேபோன்றுதான் முன்னாள்கொலைஞன் கொட்டகதெனியாவிடம் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவொன்றை மகிந்த ராஜபக்சவழங்கியுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களைக் கொன்றழிக்கும் பொறுப்பு கொட்டகதெனியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜந்து தமிழ் மாணவர்களைக் கொன்று அந்தத் தொழிலைக் கொட்டகதெனியா ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களை இனக்கொலை செய்யும் பொறுப்பு இராணுவப் புலனாய்வுப்
பிரிவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் பிரதான வேட்டைநாயாகக் கருணாகுழுசெயற்படுகின்றது.

யாழ் குடாநாட்டில் சிங்கள இராணு
வமும் சிங்களக் கடற்படையும் இந்தக்கொலைத்தொழிலைப் பொறுபேற்றுள்ளன. ஈ.பி.டி.பி தேச விரோதிகள் இவர்களுக்குத்
துணைபுரிந்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்புக்குள் உள்ள தமிழர் தாயகப்பகுதிகளில் ஒவ்வொருநாளும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். பல சம்பவங்களில் குடும்பம் குடும்பமாகக் கொன்று குவிக்கப்பட்டு இனப்படுகொலையை மகிந்த ராஜபக்ச அரங்கேற்றி வருகின்றார். கொலையாளிகளை அவர்
பாதுகாத்து வருகின்றார்.

அதிதீவிர இனவாதம் பேசிய ஜே.வி.பி. கட்சியினரே திகைப்படைந்து –
மௌனம் காக்கும் அளவுக்கு தமிழர்களைக் கொன்றழிக்கும் மகிந்தரின் தீவிர “செயல்வீரம்”தொடர்ந்தபடியுள்ளது. சிங்களப் பத்திரிகை
உலகமும் மகிந்தரின் கொலை அரசியலை நியாயப்படுத்தி வருகின்றன.

போர்நிறுத்த காலத்திலேயே சர்வ தேச சமூகத்தின் முன்னிலையிலேயே அப்பாவித் தமிழ் மக்கள்மீது வான் தாக்குதல் களையும், கடல்வழிப் பீரங்கித்தாக்குதல் களையும், ஆட்டிலறித் தாக்குதல்களையும்
பெருமெடுப்பில் நடாத்துமளவிற்கு மகிந்த ராஜபக்சவிடம் கொலைவெறி நிறைந்து காணப்படுகின்றது. கொலைகளுக்கு எதிரான சர்வதேச அபிப்பிராயங்களையும் அவர் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
கொலைகளை நிறுத்தும்படி அரசைக்கோரித் தமிழ் மக்கள் நடாத்தும் சாத்வீகவழிப்போராட்டங்களுக்கும் மகிந்த ராஜபக்ச செவி
சாய்க்கவில்லை. மகிந்தரின் கொலைவெறியை மொத்
தத்தில் சர்வதேச சமூகத்தினாலும் நிறுத்த முடியவில்லை – தமிழரின் சனநாயகவழிப் போராட்டங்களாலும் நிறுத்த முடியவில்லை
தமிழ் மக்கள் மீது மகிந்த அரசு ஒரு போரைத் திணித்தபடி உள்ளது. பொருளா தாரத் தடையையும் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது. மீன்பிடித் தடையையும் மீண்டும் அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது.
போர் ஆரம்பமானால் அதைச்சாட்டாக வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களை அழிக்கவும் மகிந்த அரசு
ஆயத்தமாக உள்ளது. அந்த மக்கள் அழிவை புலிகள் இயக்கம் மீது சுமத்திப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஒரு சர்வதேச அபிப்பிராயத்தைத் திரட்டவும் திட்டமிட்டடுள்ளது. அதற்கான முன் தயாரிப்பாகவே கொலைகாரத் தளபதிகளைத் தனது போர் இயந்
திரத்தின் தலைமைப் பொறுப்புகளில் நியமித்துள்ளது.

முழு அளவிலான போரைத் தமிழ் மக்கள் மீது ஏவிப் போரைப் பிரகடனப்படுத்தினால் சிங்கள அரசுக்கான சர்வதேச உதவிகள் தடைப்பட்டுவிடுமோ! என்றும் மகிந்த அரசு எண்ணுகின்றது. அதனாலேயே புலிகள் போரைப் பிரகடனப்படுத்தட்டும் என்று
கருதிப் புலிகளைச் சீண்டும் விதத்தில் தமிழர் படுகொலைகளைப் பரவலாகக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மகிந்த அரசின் கொலைவெறி அரசியலால் புலிகள் இயக்கம் பொறுமையின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளது. சமாதான சூழலையும் மகிந்த அரசு முழுமையாகக

தமிழ் மக்கள் பொறுமை இழந்துவிட்டனர். கொலைகாரச் சிங்களப் படைகள் மீது பதிலடித் தாக்குதலைத் தொடுத்து தமிழ் மக்களைப் பாதுகாக்க முனையும்படி புலிகளின் தலைமைக்குத் தமிழ் மக்கள் அழுத்தம் கொடுத்தபடி உள்ளனர். எல்லைப் புறங்களில் வசிக்கும்
சிங்களக் கிராமவாசிகளுக்கு மகிந்த அரசு ஆயுதங்களை (வேர்கள் இணையம் காலத்தின் தேவை கருதி தட்டச்சு செய்து வெளியீடு செய்கிறது )  வழங்கிவருகின்றது. தமிழ்மக்களும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்
தற்காப்புப் பயிற்ச்சிகளைப் பெறத்தொடங்கி விட்டனர். மகிந்த அரசு சிங்கள மக்களுக்குப் போராயுதங்களைக் கொடுப்பதுபோல தமக்கும்
ஆயுதங்களை வழங்கப் புலிகள் இயக்கம் முன்வரவேண்டும் என்று தமிழ்மக்கள் கோரிக் கைகள் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கைத்தீவில் போர் மேகம் கருக்கொள்ளத் தொடங்கிவிட்டது. தமிழர்
தாயகத்தில் இருந்து சிங்களப் படைகளை விரட்டியடித்து எமது மண்ணையும் – மக்களையும் முழுமையாக விடுவிக்கும் முயற்சியில்
தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகவே களமிறங்க வேண்டிய வரலாற்றுத் தேவையும் எழுந்து விட்டது. இந்த வரலாற்று நிர்பந்தத்தைத் தமிழ் மக்கள் உணர்ந்துகொண்டு சிங்கள அரசு திணித்துவரும் போரை எதிர்கொள்ள முழு அளவில் எங்களைத் தயார்படுத்திக் கொள்வதே தமிழ் மக்கள் முன்னாலுள்ள இன்றைய அவசரக் கடமையாகும்.

ஆக்கம் -எல்லாளன் 

இதழ் வெளியீடு  :விடுதலை புலிகள் குரல் இதழ் 2006

இணைய வெளியீடு :வேர்கள் தமிழ்த் தேசிய ஆவணக்காப்பகம் 

தட்டச்சு :நிலராசன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments