இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்கள நாயகர்கள் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர் பிரிகேடியர் பால்ராஜ்

தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர் பிரிகேடியர் பால்ராஜ்

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் 
பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் ஆற்றிய உரை  குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2018) மீள்வெளியீடு   செய்கின்றோம்  .!
பிரிகேடியர் பால்ராஜ் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ தேசத்திற்காக, தமிழீழ
மக்களுக்காக, தமிழீழத் தேசியத் தலைவருக்காக இந்தப் போராட்டத்தின் பெரிய அரணாக,
பாதுகாப்பாக, அத்திவாரமாக இருந்து பெரிய அர்ப்பணிப்போடு செயற்பட்டு தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர்
தமிழீழத்தின் இதய பூமியை தனது தாய்நிலமாகக் கொண்டவன். சிறுவயதில் சிங்கள
பேரினவாதத்தின், சிங்கள பயங்கரவாதத்தின் அடக்கு முறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் முகம்கொடுத்தும் அவற்றைக்கண்ணால் கண்டவன். இதயபூமி பிரதேசத்தில்
தமிழ்மக்கள் இரவோடு இரவாக சிங்கள அரசபடைகளினால் கலைக்கப்பட்டபோதும், சிங்கள
அரச படைகளினால் தமிழ்மக்கள் மீது கொலைகள் ஏவிவிடப்பட்ட போதும், அரசபயங்கரவாதம் தமிழீழ தாயகப் பிரதேசத்தில் தலைவிரித்தாடிய போதும் அதை நேரிற்கண்டு. அதனுடாக விடுதலை உணர்வு சிறுவயதிலேயே உந்தப்பெற்று தன்னை இந்த விடுதலைப் போராட் டத்தில் இணைத்துக் கொண்ட மாவீரன்
இவர் தன்னை  ஒரு முழுநேரப் போராளியாக இணைத்து இந்தியாவில் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் அவரை முதன் முதலாக அவரது பயிற்சி முகாமில் சந்தித்தேன். அதன்போது அவர் இராணுவ விஞ்ஞானத்தில் மட்டுமல்லாது அரசியலில் விஞ்ஞாத்தில் கூட மிக ஆழமான அறிவுள்ளவராக இருந்தார். அவரது பயிற்சிக் காலத்தின்போதும் சிறந்த ஒருவல்லுனராக  காணப்பட்டார்
பயிற்சியை முடித்துக் கொண்டு இங்கு வந்த காலப்பகுதியில் உலகத்தின் மிகப்பெரிய வல்லரசான இந்திய இராணுவம் தமிழீழ தாயகப் பிரதேசத்தில் தன்னை அமைதிப்படை என்றரீதியில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இந்திய இராணுவத்துடன் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது எங்களுடைய மூத்த தளபதிகள் பலர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்
அதாவது குமரப்பா, புலேந்திரன், இம்ரான், பாண்டியன், சந்தோசம் மாஸ்டர் உட்பட பல மூத்த தளபதிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நேரம், இந்திய இராணுவத்துடன் எமது இயக்கம் மூர்க்கமாக மோதிக்கொண்ட நேரம் . எமது தலைவரைப் பாதுகாக்கின்ற ஒரு பெரிய பொறுப்பு எங்களுடைய போராளிகளுக்கும் அப்போது இருந்த தளபதிகளுக்கும் பாரிய பொறுப்பாக இருந்தது. அந்தப் பொறுப்பை சுமந்தவர்களில் பால்ராஜ் முக்கியமானவர். எமது தலைவர் அவர்கள் பாதுகாப்பாக வன்னிப்பிரதேசத்திற்கு வந்து மணலாற்றுக் காட்டில் இருந்த போது தலைவரின் பாதுகாப்பு வியூகாங்களை வகுப்பதிலும் தலைவரை நோக்கி இந்திய இராணுவம் நகர்ந்து செல்லாது வெளியிலிருந்து தடுப்பதிலும் பிரிகேடியர் பால்ராஜின் பாங்கு அளப்பரியது. அது வாயால் வர்ணிக்க முடியாதது அதேநேரம் அன்றைய நாட்களில் இந்திய இராணுவத்துடன் மோதிக்கொண்டிருந்தபோது எமது போராளிகள், தலைவரிடம் இருந்த ஏனைய போராளி அணிகள் எல்லோருக்கும் வெளியிலிருந்துஉணவுகள் செல்வதென்றாலும், அல்லது காயப்பட்ட போராளிகளை வெளியே கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பதென்றாலும், அல்லது போராளிகளை வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்று அவர்களுக்கு உரிய பணிகளை ஒப்படைப்பதில் அவர்களுக்கு உதவி செய்வதென்றாலும் பிரிகேடியர்
பால்ராஜின் அர்ப்பணிப்பாது உண்மையிலேயே மறக்க முடியாததாக உள்ளது
இந்திய இராணுவம் இங்கு ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் பிரிகேடியர் பால்ராஜினுடைய ஒவ்வொருசெயற்பாடும் ஒவ்வொரு இந்திய இராணுவத் தளபதிகளிலிருந்து ஒவ்வொரு இந்திய இராணுவசிப்பாய்க்கும் தெரியும். அது மட்டுமல்ல இங்குள்ள மக்கள் குறிப்பாக எங்களுடைய தாயகப் பிரதேசத்தில் வன்னிப்பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும், அவரது கால்படாத இடம்இல்லை . இந்திய இராணுவக் காலப்பகுதியில் மலைாற்றுக காடென்றாலும் சரி அல்லது எந்தப் பிரதேசத்திலுள்ள காடென்றாலும் சரி நடந்து சென்று தனக்கு இடப்பட்ட பனியை குறிப்பாக இந்திய இராணுவத்தின் மீதான தாக்குதல் என்றாலும் சரி அல்லது விடுதலைப்பணி சார்ந்த வேறு பணி என்றாலும் சரி அவர் பெரும் பனி ஆற்றிார்
ஆகையினால்தான் அவர் எல்லாப்போராளிகள் மட்டுமல்ல எமது தேசியத்தலைவருடைய பாசத்திற்கும் அன்பிற்கும் ஆட்பட்டவர்.
தேசியத்தலைவர் மட்டுமல்ல தற்போது எமது இயக்கத்தில் இருக்கின்ற
தளபதிகள் கூட அவரை அன்பாக , பண்பாக மிகவும் ஆழமாக அன்று தொட்டு இன்றுவவுரை
நேசித்துக்கொண்டிருக்கிறார்கள் . காரணம் எவ்வாறான இடையூறுகள் வந்தாலும், பெரிய
வல்லாதிக்கத்தின் இராணுவம் ஆக்கிரமித்திருந்த வேளையிலும்கூட , அவற்றை எல்லாம் மிக
இலகுவாக மிகச் சுலபமாக மிகவும் ஒரு சின்ன விடயமாக போராளிகளுக்கு எடுத்துக்காட்டி
போராளிகளுடைய மனோதிடத்தை வளர்ப்பதில் இந்திய இரானுவக் காலத்தில் பிரிகேடியர் பால்ராஜ்ஆற்றிய பணி என்பது அவர்களுடன் இருந்தவர்களுக்கும் அன்றைய காலத்தில் அவருடன் ஒன்றாகப் பணிசெய்த தளபதிகளுக்கும் தெரியும். இன்று கூட பல போராளிகள் உயிர்வாழ்கின்றார்கள் என்றால் பல தளபதிகள் இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து தப்பியிருக்கின்றார்கள் என்றால் அன்றைக்கு சண்டைக்களங்களில் அவரது அர்ப்பளிப்பும், சண்டைகளில் அவரது சாதனையும்தான் இந்திய இரானுவம் அவரை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஒவ்வொரு இடங்களிலும் இந்திய இராணுவம் அஞ்சுமளவிற்கு, உலக வல்லாதிக்கத்தின் பெரிய இரானுவம் பயந்து செல்லும் அளவிற்கு பால்ராஜின் இராணுவ வளர்ச்சிமட்டுமல்ல அந்த இராணுவத்தின் மீதான தாக்குதல்
வியூகங்கள் வரவர நுட்பமாகவும் பலமாகவும் அதிகரித்துக் கொண்டு போதுை. இந்திய இராணுவம் போகின்ற கடைசிக்காலத்தில் பல இராணுவத்தை அழிக்கக்கூடிய முறையில் பால்ராஜினுடைய போராற்றல், போர்வீரம் அந்தக் காலத்திலேயே அவருக்கு வேகமாக வளர்ந்திருந்தது. இதனால்தான்தலைவர் அவர்கள் இந்திய இராணுவம் சென்றதும் எங்களுடைய  இயக்கத்தினுடைய போரியல் வரலாற்றில் அது ஒரு இராணுவ படைமுகாம் தகர்ப்பு என்றாலும் சரி அல்லது ஒரு முறியடிப்புச் சமர் என்றாலும் சரி பால்ராஜ்தான் அதில் முதல் முதலாக பங்குகொண்ட வரலாறு இருக்கின்றது. தாக்குதல்
சம்பவாங்களில் இவ்வாறு பல சாதனைகளைப் படைத்த பிரிகேடியர் பால்ராஜ் குறுகிய காலத்தினுள் ஒரு பெரிய மரபுவழிப் படையணியை வ ழி நடத்தி சிங்கள இராணுவத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்திருக்கின்றார்.
சிங்கள இராணுவத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தவர் தமிழர்சேனைக்கு, தமிழர்படைக்கு பலம் சேர்த்தது மட்டுமல்ல. பெருமை சேர்த்தது மட்டுமல்ல. முழு தமிழ்த் தேசிய இனத்தையே தலைநிமிரச் செய்கின்ற பாரிய இராணுவ நடவடிக்கைக்கும் அவரே தலைமை தாங்கியதுதான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போரியல் வரலாறு. இவ்வாறு ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம் அதுமட்டுமல்ல, போகின்ற பிரதேசங்களில் போராளிகளுடன் மட்டுமல்லாது அங்கு இருக்கின்ற மக்களுடன் உறவாடி அந்த மக்களையும் அந்த இரானுவ நடவடிக்கையில் அந்தப் போர்முனையில் போராட்டத்தில் பங்காளிகளாக மாற்றுகின்ற ஒரு ஆற்றல் பிரிகேடியர் பால்ராஜிற்கு இருக்கின்றது அந்த ஆற்றலானது செல்லுமிடமெல்லாம் வயது வேறுபாடில்லாமல் மக்களுடன் உறவாடி இராணுவத் தாக்குதல்கள், இராணுவ வியூகங்களுக்கு மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் பிரிகேடியர் பால்ராஜ் மிகுந்த மதிநுட்பமான சிறந்த ஒரு தளபதியாக அவரைப் பார்க்கின்றேன்
நினைவுப்பகிர்வு : பா. நடேசன்
(தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்)
வெளியீடு :சமர்கள நாயகன் நூல் (வெளியீட்டு பிரிவு ,அனைத்துலக தொடர்பகம் ,தமிழீழ விடுதலை புலிகள் )
மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments