கடற்கரும்புலி
கப்டன்
அறிவரசன் (அறிவு)
முத்துலிங்கம் ஜெகன்
வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 07.09.1978
வீரச்சாவு: 30.12.1999
யாழ்ப்பாணம் கிளாலி கடற்பரப்பில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகினை மூழ்கடித்து வீரச்சாவு
தக்க நேரத்தில்… அறிவரசன் !
ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப ; 7 – 8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன.
இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகின்றது.
”அந்த இடத்திற்கு தான் விரைவாகச் செல்ல வேண்டும்” அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை. தனிமனிதனாக நின்ற அவன் உடல் நிலையோ படுமோசம். வயிற்றில் விழுப்புண்பட்டு சரியாக நிமிர்ந்து நடக்க முடியாத நிலை. வயிற்றில் விழுப்புண்பட்டதால். சோறோ, பிட்டோ கடினமான உணவை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் அவனால் சாப்பிடவும் முடியாது. இப்படியான நிலையில் இருந்த அவன்.

