ஜூலை மாதம் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றிருக்கிறது . 1983-ல் சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பற்கள் எ மது மக்கள் மீது பதிந்ததும், அது சிங்களத்தை எதிர்த்துப் போராடும் மன எழுச்சியினை எம் மக்களின் மத்தியில் தோற்றுவித்ததும் இம் மாதத்தில்தான்.
1987-ல் இந்திய-இலங்கை ஒப்ந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய-தமிழிழப் போருக்கு விதை தூவப்பட்டதும் இம் மாதத்திலேதான். 1995-ல் சமாதானத்திற்கான மபுத்தம் எனக்கூறி சிங்கவளம் நடத்திய யாழ் குடாநாட்டினைக் கைப்பற்றுவதற்கான முன்னேறிப் பாய்தல் (யூலை மாதத்தின் முக்கியத்துவம் குறித்து எரிமலை இதழில் வெளிவந்த ஆக்கத்தை தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் இணைகிறோம் )இராணுவ நடவடிக்கையும், நவாலி தேவாலயம் மீதான சிங்காத்தின் குண்டுவீச்சுத் தாக்குதலும், சிங்களத்தின் படை நகர்வை முறியடித்த “புலிப்பாய்ச்சல்’ நிகழ்ந்ததும் இம் மாதத்திலேதான்.

1996-ல் விடுதலைப் புலிகள் வீழ்ந்தார்கள் எனச் சிங்களம் கொக்கரித்துக் கொண்டிருந்த போது சிங்களத்தையும் அனைத்ததுலகினையும் அதிரவைக்கும் வகையில் புலிகள் ஓயாத அலை களாகி முல்லைத்தீவினுள் பாய்ந்தததும் இம் மாதத்தில்தான் .

எமது போராட்டத்தின் தடை அகற்றறும் தேசத்தின் புயல்களாக வீசும் கரும்புலிகளில், முதற் கரும்புலியா கப்டன் மில்லர் காற்றோடு காற்றாகக் கலந்தததும் அவர் வீரச்சாவடைந்த நாளாக ஜூலை 5-ம் திகதி கரும்புலிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நினைவு கூரப்படுவதும் இம்மாதத்திலேதான்.
இதனால் ஜூலை மாதம் என்றவுடன் சிங்களாம் பெரும் படத்திற்குள்ளாகிவிடுகிறது. சிங்களத்தின் அரசியல் தலைமை முதல் படைத் தலைமை வரை தம்மைப் பாதுகாப்பிற்கு விஷேட திட்டங்களைத் தீட்டிக்கொள்கின்றன.
உண்மையில் ஆக்கிரமிப்பாளர்கள் எவருமே தமது சொந்த மண்ணில் கூட நிம்மதியாக வாழுநதத இலலை – இது உலக வரலாற்றறுப் பாடம் .

-வெளியீடு :எரிமலை இதழ் (1999 )
மீள் வெளியீடு :வேர்கள் இணையம் (2018)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”