இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home இனப்படுகொலைகள் செட்டிக்குளம் படுகொலை

செட்டிக்குளம் படுகொலை

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக வவுனியா-மன்னார் வீதியில் வவுனியா நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் செட்டிக்குளம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், கூலித்தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் வாழ்கின்றார்கள்.

1984.12.02 அன்று இராணுவத்தினரால் செட்டிகுளப் பகுதி எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இராணுவத்தினர் செட்டிக்குளம் கிராமத்தினை காலை 5.30 மணியளவில் சுற்றிவளைக்கத் தொடங்கினார்கள். கிராம மக்களில் கூடுதலானவர்கள் உறக்கத்தில் இருந்தனர். செட்டிகுள கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் கிராம மக்களில் ஆண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். இவர்களில் ஐம்பத்திரண்டு பேரைச் செட்டிகுளச் சந்தியில் வைத்து இராணுவ வாகனங்களில் ஏற்றி மதவாச்சிக்குக் கொண்டு சென்றனர்.

இதன்பின் இவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் இவர்கள் மதவாச்சியிலுள்ள ஓர் சிங்களக் கிராமத்தில் வைத்து இராணுவத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனரென்றும் குற்றுயிராக இருந்தவர்கள் மீது டோசரை ஏற்றிக் கொன்றனரென்றும் செட்டக்குள மக்கள் கூறுகின்றனர்.

செட்டிக்குளம் மகா வித்தியாலய ஆசிரியரான தி.யேசுதாசன் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில்…

“ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து விட்டு வந்த இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஐம்பத்திரண்டு ஆண்களைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் எனது தம்பியும் எனது அக்காவின் கணவரும் உயிரிழந்தனர். அத்துடன் எனது வீட்டில் வேலை செய்த இருவரும் கைது செய்யப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்பு அவ்வூர் மக்கள் வன்னி, மடு, இந்தியா போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.”

02.12.1984 அன்று செட்டிக்குளப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் விபரம்:

01. சூசைப்பிள்ளை கிறிஸ்துராசா (வயது 32 – கமம்)
02. இராசையா.
03. இராமசாமி பொன்னுத்துரை (வயது 45 – கமம்)
04. ஊர்கனசாமி (வயது 23 – கமம்)
05. கந்தையா
06. கந்தையா கெங்காரட்ணம்
07. குமார் மோகன்
08. குமார் வரதராசா (வயது 19 – வியாபாரம்)
09. குருகுலசாமி (வயது 23 – கமம்)
10. குலசேகரம்பிள்ளை யூஜின் (வயது 18 – கமம்)
11. பாண்டியன் பெரியரசு
12. பி.அருள்பிரகாசம் (வயது 30 – கமம்)
13. பிலிப்பையா அருள்பிரகாசம் (வயது 38 – கமம்)
14. பரமலிங்கம் பரமநாதன்
15. ஐயம்பிள்ளை பரமநாதன் (வயது 33 – விவசாயம்)
16. துரையப்பா நாதன்
17. முத்துசாமி கோணார் கோபால்
18. முருகேசு சங்கரப்பிள்ளை (வயது 38 – தொழிலாளி)
19. அப்பாப்பிள்ளை வெற்றிவேற்பிள்ளை (கமம்)
20. அல்பின் றொபின்சன் (வயது 26 – கமம்)
21. அல்வின் அந்தோனிஸ்ரி வின்சன (வயது 24 – தச்சுத் தொழில்)
22. அல்வின் அலைக்சாண்டர் (வயது 21 – தச்சுத் தொழில்)
23. அல்வின் அன்ரன்
24. பொன்னுத்துரை கிறிஸ்துராசா
25. பொன்னுத்துரை தனநாயகம்
26. டொண்பொஸ்கோ றொமன்
27. சௌந்தரராசன் புஸ்பராசன் (வயது 27 – மரவேலை)
28. செல்லையா யூட்
29. செல்லையா கேதீஸ்வரன் (வயது 28 – கமம்)
30. செல்லர் மூர்த்தி
31. செல்லர் மகேந்திரன்
32. வேதநாயகம் செபமாலை(வயது 31 – கமம்)
33. வேலுப்பிள்ளை சிவபாலசிங்கம் (வயது 35 – விவசாயம்)
34. சந்தணப்பிள்ளை இருதையராசா (வயது 25 – கமம்)
35. சின்னக்குட்டி கந்தசாமி
36. சிவகணேசன்
37. சங்கரப்பிள்ளை பாலேந்திரன் (வயது 29 – கமம்)
38. வடிவேல் அசோக்குமார்
39. விநாயகமூர்த்தி யோகநாதன் (வயது 24 – கமம்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

-தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008   கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008   மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008   லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008   கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008   வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002   வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...

19.09.1994 அன்று சாகரவர்த்தனா போர்க்கப்பல் கதையை முடித்த கரும்புலி தாக்குதலின் சிறப்பு காணொளி

வட  தமிழீழம் , மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி...

கடற்கரும்புலி மேஜர் மங்கை

கடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...

கடற்கரும்புலி கப்டன் வாமன்.!

கடற்கரும்புலி கப்டன் வாமன்(தூயமணி) கந்தசாமி ரவிநாயகம் கோயில்போரதீவு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:22.08.1971 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு   நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. வாமன்! அவனொரு நல்ல மனிதன்....

Recent Comments