சின்னச் சின்னப் பிள்ளைகள் நாம்-ஈழ
மண்ணின் வித்துக்கள் நாம்
அகிலம் எங்கு விழுந்தாலும் – தமிழர்
பண்பால் தழைத்தோம் நாம்
இரவும் பகலும் உழைத்திட்டார்- தம்
கண்ணைப் போலே காத்திட்டார்
மாம் உள்ள எம் பெற்றோர்- மதிப்பாய்
வாழப் பழக்கி விட்டார்
எண்ணும் எழுத்தும் படிக்கின்றோம் -தமிழை
நன்றாய்க் கதைக்கின்றோம்
ஈழ விடுதலைப் போர் பற்றி -முற்றும்
முழுதாய் சொல்லிடுவோம்
மண்ணில் அழியாத் தியாகிகள்-இவர்
விண்ணை மிஞ்சும் வீரர்கள்
நுண்மதி படைதத தலைவராக
எங்களின் இடையே வாழ்கின்றார்
மானமுள்ளதமிழ் மக்கள் -எம்
ஈழ மண்ணில் இருக்கின்றார்
எண்ணில் அடங்கா அழிவுகளை
தாங்கி வாழும் தகைமையுடன்
அந்நிய நாட்டில் வளர்ந்தாலும் – தமிழ்தன்
மேன்மை போற்றிடுவோம்
வந்திடும் ஈழநாட்டிேைய- விழுதுகள்
போலத் தாங்கிடுவோம்
“எங்கள் மண்ணில் நிற்கின்றோம்- நம்
முன்னோர் உரிமையை எடுக்கின்றோம்
சொன்னவர் எங்கள் பெரும் தலைவர்- அவர்
நல்கிய வழியைப் பற்றிடுவோம்
-கவியாக்கம் : பரஞானம் சதாசிசம்
வாசிங்டன் -அமேரிக்கா
வெளியீடு :எரிமலை இதழ்
இணையத்தில் மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”