இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தியாக தீபம் திலீபன் சந்ததி காணாத நிம்மதி.!

சந்ததி காணாத நிம்மதி.!

ஏ(A) 5 என்று குறியீட்டுப் பெயரையுடைய செங்கலடி – பதுளை பிரதான வீதியில் இலுப்படிச்சேனை சந்தியிலிருந்து நண்பகலை அண்மித்த பொழுதொன்றில் எங்கள் பயணம் தொடங்கியது.
 
முடிவின்றி காடுகளில் முடிவடையும் வயல்வெளிகளினூடும், வீதியை மூடும் காட்டு மரங்களினூடும், சிறு ஆறுகளைத் தாண்டி நீண்டுகொண்டிருந்தது அந்த வீதி. இடையிடையே வயல்களில் தெரியும் காவற்குடில்களும், திடல்களில் தெரியும் கிராமங்களையும் கடந்து, ஐந்தாம் கட்டைச் சந்தியின் ஊடாக நாங்கள் கூழாவடியினுள் பிரவேசித்தோம்.
 
சூழ்ந்த காட்டினுள் பரவிய வயல் வெளிகளைக் கொண்டிருந்தது கூழாவடிக் கிராமம். அந்தப் பிரதேசத்தில் எல்லாக் கிராமங்களையும் போல, நகரதத்திலிருநது வெகு தொலைவில தனிதத்திருநத் து. மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கே, மட்டக்களப்பு வாவியில் பிரிக்கப்பட்டிருந்த படுவான்கரையில் அநேக கிராமங்களில் ஒன்றாக, அன்றாடம் தன் கிராம மக்களை மாத்திரம் தன் முற்றத்தில் கண்ட கிராமம் இன்று அந்தப் பிரதேசத்தில் எல்லோராலும் பேசப்படும், நாடிச்செல்லப்படும் கிராமமாகிவிட்டது.
 
கோறளை தெற்கு பிரதேச செயலர் பிரிவின் ஒரேயொரு முழுநேர வைத்தியசாலையாக, மட்டக்களப்பு வாவியின் கீழே அப்பிரதேசத்தில் சுற்றியிருக்கும் ஈரளைக்குளம், பெரிய கொட்டு, நடுக்காட்டுக் கிராமம், திகிலிவெட்டை, கோராவெளி, பள்ளத்துச்சேனை, சந்திவெளித் திடல், தரவை, குடும்பிமலை என முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களுககு; ம ; இரணட் hயிரம ; வரையிலான குடுமபங்களுக்குமான ஒரேயொரு மருத்துவமனையாக விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவமனை அங்கே நிமிர்ந்து நின்றது.
 
புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிதி உதவியுடன் கடந்த 26.09.2005 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் பகுதி, மகப்பேற்று விடுதி, ஆண் – பெண் நோயாளர் விடுதி, மருத்துவ விடுதி என எல்லாம் தனித்தனியே அமையப் பெற்றிருந்தது.
 
அந்தப் பகற்பொழுதில் அங்கே திரண்டிருந்த பலபத்து மக்களுடன் ஒருவராய் நானும் இணைந்துகொண்டேன். மருத்துவமனையின் வெளிநோயாளர் விடுதி இருக்கையில் இருந்தவாறே அருகிலிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்தேன்.
 
“இஞ்ச முந்தி பூச்சி சடிச்சா (பாம்பு) சாவுதான் தம்பி”
 
“வயல் வெட்டையுக்க, காடுகளுக்க, வேட்டைக்குப் போகேக்க ஏதாவது நடந்தா ஆறு தாண்டி மெயினில வாழைச் சேனைக்குத் தான் போகோணும்.”
 
“இடையில கிரான் பாலத்தில் ஆமிக்காரன் இரிக்கான்.”
 
“ஐஞ்சு மணியான, பிறகு அங்கால போகேலாது.”
 
“அவன் வந்து பாதையை திறக்க ஒரு மணித்தியாலமாவது செல்லும்”
 
“உப்பிடித்தான் தம்பி, ஒருக்கா வடமுனையில ஒராளுக்கு பூச்சி கடிச்சதெண்டு கொண்டுபோனாங்க”
 
“அங்கையிருந்து கிரான்பாலம் ஒரு முப்பது முப்பத்தைந்து கிலோமீற்றர் வரும்”
 
“ஒருமாதிரியா ஆளைக் கொண்டந்திட்டம், ஆமி பொயின்ர திறக்க ஒரு மணித்தியாலமாச்சு”
 
“அங்கால கிரானுக்கு போகவே ஆள் முடிஞ்சிச்சு தம்பி”
 
பழைய நினைவுகளுடன், ஏதோ விச ஜந்து தீண்டி வீங்கிப்போயிருந்த தனது மருந்திட்ட காலொன்றைத் தடவியவாறு அந்த நடுத்தர வயது உழைப்பாளி எனக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
 
எந்த மருந்துவ வசதியுமற்று நீண்ட தூரம் பயணித்த பின்னும் இராணுவத்தினரின் அலட்சியங்களினால் மருத்துவமனை செல்லமுடியாமல் இப்படி எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.
 
நீண்டதூரம் நடந்த களைப்புடன் கர்ப்பிணிப் பெண்னொருவரை தாயொருவர் கூட்டிவந்திருந்தார். அவர்கள் இருக்கைக்கு அருகில் சென்று அவர்களுடன் கதைக்கத் தொடங்கினேன்.
 
தூரத்தே மியான்குளத்திலிருந்து அவர்கள் ‘கிளினிக்’ வந்ததாகச் சொன்னார்கள்.
 
“முந்தியெல்லாம் நாம இப்படி ஓரிடமும் போறதில்லை தம்பி”
 
“எங்களுக்கு போக றோட்டுமில்லை, வருந்தங்காட்ட ஆஸ்பத்திரியுமில்லை”
 
“மியாங்குளத்தில் இருந்து வெட்டைக்கு, வாழைச்சேனை போறதெண்டா முடியாத காரியம்”
 
“இப்படித்தான் தம்பி என்ர மூத்த மகளுக்கு பிரசவம் கஸ்டமாப் போச்சு”
 
“அப்ப சரியான மழைக்காலம், ஆறுகள் எல்லாம் றோட்டை குறுக்கறுத்து ஓடிச்சு ஒரே வெள்ளக்காடு, ஒரு மாதிரியா புலிபாய்ஞ்சகல் கொண்டத்திட்டம்”
 
“பெருவெள்ளம் தம்பி தோணியள் ஒண்டும் கரையில இல்லை. பிரசவ வலி எடுத்திட்டுது”
 
“பிறகு ஆம்பிளையள் கொஞ்சப்பேர் காட்டுக்கபோய் பட்டமரம் கொண்டுவந்து தோணிகட்டித்தான் அங்கால போனனாங்கள்”
 
“அதுக்கிடையில் பிரசவமாயிற்று. அனா தாயை காப்பாற்றேலாமப் போச்சு”
 
தனது மகளை நினைத்து கண்ணீர் விட்ட அந்தத் தாயின் முகத்தில் கவலை ரேகையுடன் தாங்கள் இதுவரை அனுபவித்த துன்பத்தின் வடுவும் முகத்தில் தெரிந்தது.
 
காடுகளின் நடுவே ஆங்காங்கே காணப்பட்ட ஊர்களிலெல்லாம் அவர்களுக்கு மருத்துவவசதிகள் ஏதுமே அப்போது இருக்கவில்லை. வேட்டைக்குப் போகும்போது வயல்களில் வேலை செய்யும்போதும் விலங்குகளால் தாக்கப்பட்டவர்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் மருத்துவத்திற்குச் செல்லும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எனச் சொல்லி கைதுசெய்யப்பட்டும் இருந்தனர்.
 
“இப்படித்தான் ஒருநாள் தம்பி, முறுத்தானையில வயல் வெட்டைக்க வேலைசெய்யேக்க ஒராளுக்கு நெஞ்சுக்குத்து வந்திட்டிது,
 
“கொண்டுபோக என்ன இரிக்கி, ஒண்டில் சைக்கிள் எடுக்கணும் அல்லாட்டி வண்டில் கட்டணும்.
ஒருமாதிரி கிரானுக்கு கொண்டுபோக முன்ன ஆள் முடிஞ்சிது.”
 
“இஞ்ச இவ்வளவு நாளும் இரிக்கம், அநேகமா சின்னதா ஒரு வருத்தமோ, நெஞ்சுக்குத்தோ வந்தா, பூச்சி குத்தினா, காட்டில ஆனையடிச்சு, பண்டிவெட்டி காயப்பட்டால் பொடிதான் கிரானுக்கு வரும். ஆள் தப்பியிராது.”
 
அவர்களது பிரதேசத்தில் எங்கேயுமே, எப்போதுமே ஒரு முழுநேர வைத்தியசாலை இருந்ததில்லை.
 
“சந்திவெளிக்கு போகவேணும் தம்பி, பத்து பதினைஞ்சு கட்டை தாண்டி, அங்கதான் மருந்து கொடுக்கிற ஒர் இடம் இருக்கு”
 
“அதுகும் இடைக்கிடை தான் மருந்து கொடுப்பார்கள்”
 
“வருத்தம் இடைக்கிடையா வரும் தம்பி?” கூழாவடி வாசியொருவர் கூறினார்.
 
இப்பொழுதுதான் அவர்களின் பிரதேசத்தில் அவர்களுக்கென ஒரு மருத்துவமனை ஆரம்பித்திருக்கின்றது. யாருக்கும் அஞ்சாமல் எந்த இராணுவத்தினரிடமும் வைத்தியசாலை செல்ல அனுமதி கேட்காமல் எங்கேயிருந்தாலும் சைக்கிளிலே வந்துவிடக்கூடிய தூரத்தில் அவர்களுக்கெனவோர் வைத்தியசாலை உருவாகியிருக்கின்றது.
 
ஒரு வைத்தியருடனும் ஐந்து மருத்துவ தாதிகளுடனும் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாக தீபம் திலீபன் வைத்தியசாலையைப் பார்த்தபொழுது பெருமையாக இருந்தது. அங்கிருந்து நான் புறப்படும்போது இறுதியாக பெண்டுகள்சேனையில் இருந்து வந்திருந்த முதியவர் ஒருவர் என்னுடன் வாசல்வரை கதைத்துவந்தார்.
 
“எனக்கு என்ர அப்பற்ற அப்பருக்கு அறிந்த காலம் முதல் எங்களுக்கு வைத்தியசாலை ஒண்டுமே இல்ல தம்பி.”
 
“மருந்தெடுக்க ஏலாமலே, இஞ்ச எத்தனை பேர் சேத்துப்போச்சின”
 
“இப்ப இந்த திலீபன் வைத்தியசாலை தான் முதலா எங்களுக்கு வந்திருக்கு”
 
“இப்பதான் தம்பி என்ர சந்ததியிலேயே முதலா நான் ஒரு வைத்தியசாலையை எங்கட சுற்று வட்டாரத்தில காணுகிறன்”
 
“எவ்வளவு நிம்மதியா இருக்கு”
 
நீண்ட அவர்களின் நெருக்கடி வாழ்வின் சுமைகளை நினைத்து நடந்துகொண்டிருந்தேன் “எவ்வளவு நிம்மதியா இருக்கு “ அவர்களுடைய வார்த்தை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தது.
 
ஆக்கம்:- அன்புமாறன்
விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 2005) 
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments