இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அலைகடல் நாயகர்கள் கேணல் பகலவன் .!

கேணல் பகலவன் .!

1989ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆரம்பத்தில் யாழ்மாவட்ட தாக்குதல் படையனியிலும் பின்பு சாள்ஸ் அன்ரனி படையனியிலும் பல தாக்குதல்களில் பங்குபற்றிய இவர் 1993ம் ஆண்டு கடற்புலிகள் படையணியில் இணைந்து முதன்மை கனரக ஆயுத சூட்டாளராகவும் எமது சண்டைப்படகுகளின் பிரதான ஆயுதங்களின் சிறந்த சூட்டாளராக பல கடற்சமர்களில் பங்குபற்றி பின்னர்.

படகுக்கட்டளை அதிகாரியாகவும்,பின் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் ,பனியாற்றியபோது இவரின் திறமையைக்கண்டு ஆழ்கடல் விநியோக கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டார். கடலில் நடைபெற்ற அதிகளவான அதாவது ஏறத்தாழ165க்கு மேற்பட்ட கடற்சமர்களிலும் ஆழ்கடல் விநியோகத்திலும் அதிகளவு பங்குபற்றிய பெருமை இவருக்குண்டு.சமாதான காலப்பகுதியில் மன்னார் மாவட்ட கடற்புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டு இயக்கத்திற்கு பலம் சேர்க்கும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

 

இறுதி யுத்தம் ஆரம்பமான போது மன்னார் பூநகரி கடல்நடவடிக்கைள்,கடற்சமர்கள், ஈரூடகதாக்குதல்கள் என அணைத்தையும் வழிநடத்தி இறுதிவரை கடுமையாக போராடி 4.2.2009 அன்று பேப்பாறைப்பிட்டிப் பகுதியில் சிங்களப்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது கேணல் பகலவன் அவர்கள் தான் நேசித்த தாய்மண்ணை முத்தமிட்டு வீரச்சாவை தழுவிக்ககொண்டார்.

ஆக்கம் : கடலிலே காவியம் படைப்போம்.

“புலிகளின்  தாகம்  தமிழீழத் தாயகம் “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments