
அதிகாரப் பகை வென்றவர்
அழி வொன்றே தருகின்ற படை மீது இடி கொண்டு
நிற்கின்ற வலு கொண்டவர்
முலையுண்ட மடி மீதில் எவர்வந்தும் குடிக்கொள்ள
முடியாது எனச் சொன்னவர்
முதிராத இளவாலை வயதென்ற நிலைமீறி
முழவோடு களம் கண்டவர்.
உலைகின்ற விதிநாளை இலையென்று மகிழ்வோடு
உறவுக்கு பதில் தந்தவர்
உயிரென்ன உறிரென்று உரிமைக்கு விலையாக உயிர்பூவை பிடி என்றவர்
சிலையாகி வாழ்கின்ற திருவாசற் படியேறிச்
சிரம்தாழ்த்தி விளக்கேற்றுவோம்.
சினமூரும் மனதோடு குளிக்குள்ளே விழிமுடிச்
சிரிக்கின்றோர் புகழ் படுவோம்.
கவியாக்கம் :புதுவை இரத்தினதுரை
வெளியீடு :-சூரியப்புதல்வர்கள் 1999
மீள் வெளியீடு :மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”