இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home விழுதின் வேர்கள் காவிய வரலாறு படைத்த மாவீரன் சீலன்.!

காவிய வரலாறு படைத்த மாவீரன் சீலன்.!

1978ம் ஆண்டு மாசித்திங்கள் 4ம் நாள்! இலங்கையின் முப்பதாவது சுதந்திரதினம் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாட அன்றைய ஜே.ஆர் தலைமையிலான சிறிலங்கா அரசு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

பாடசாலைகள் முதல் சகல அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்பது அரசின் கட்டளை. தன்மானமுள்ள தமிழ்மகன் எவனும் இவ்வைபவத்தை மனதாலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டான். அவ்வாறே,

அன்று கல்லூரி மாணவனாக இருந்த “சாள்ஸ் அன்ரனி” என்ற சீலனின் நெஞ்சிலும் நெருப்புக் கனன்றது.

“கொலை வாள் ஏந்திய சிங்கக்கொடிக்கு தலை வணங்குவதால் தமிழனுக்கு என்ன லாபம்?” என்று சீற்றத்துடன் சிந்தித்த அந்த சிறுத்தை, தமிழீழத்தின் உள்ளக் குமுறலையும் எழுட்சிகொண்ட இளைஞர்தம் எண்ணத்தின் வண்ணத்தையும் சிங்கள அரசுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டும் என முடிவு செய்தான்.

அவ்வாறே திருமலை இந்துக் கல்லூரியில், அன்று அரசுக்கு அஞ்சியோராலும், அடிபணிவோராலும் மரியாதையாக ஏற்றப்பட்ட சிங்கக்கொடி கரியாகிப் புகையாகிக் காற்றோடு கலந்துபோயிற்று!

இதுகண்டு புளகாங்கிதமடைந்தான் புலிநிகர்த்த சீலன்.

அவனோடு அவன் நண்பர்களும் மகிழ்ந்தனர்.

நண்பர்களின் குறிப்பிடத்தக்க இருவர், கணேசும், புலேந்திரனும் ஆவர்.

(மேஜர் கணேஸ், லெப்.கேணல் புலேந்திரன்) இந்நிகழ்வினால் அன்று, திருகோணமலை பதற்றமடைந்ததுடன், நாட்டின் பல பாகங்களிலும் பரபரப்பாகப் பேசவும் பட்டது.

கொடியெரிப்பு நிகழ்வினால் சீற்றமடைந்த சிங்களப் பொலிசார் கல்லூரி அதிபர், ஆசிரியர், மாணவரென பலரைக் கைதுசெய்து “விசாரித்தனர்”. இதன் விளைவாய் “சாள்ஸ் அன்ரனி” என்ற நமது சீலன் மிக மோசமாகத் தாக்கப்பட்டதுடன் 14 நாட்கள் விசாரணைக் கைதியாகவும் அடைக்கப்பட்டான்.

ஆனால், மனவுறுதி கொண்ட மாணவனான அந்த மறப்புலியிடமிருந்து எந்தத் தகவலையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பொலிசார் ஏமாற்றத்துடன் விடுவித்தனர்.

இனவெறி படைத்த சிங்களக் காடையர்களினாலும், படையினராலும் திருமலையில் அடிக்கடி நடாத்தப்படும் வெறியாட்டமும், வீடெரிப்புக்கள், மன்பரிப்பு முதலியன கண்டு சீற்றமும் சிந்தனையில் நெருப்பும் கொண்டு நின்ற சீலனின் வாழ்வில் மேற்படி நிகழ்வுகள் ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்பைத் தந்தன.

அக்காலகட்டத்தில், முளைவிட்டு வளர்ச்சிப் பாதையை நாடிக்கொண்டிருந்த, தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, விடுதலை விருப்புக் கொண்ட சீலனின் கவனத்தை ஈர்ந்ததில் புதுமையேதுமில்லை.

எனவே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட சீலன் அளவிலா மகிழ்வோடும், ஆழமான பற்றோடும், வீர விவேகங்களோடும் செயற்பட்டான்.

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் சீலனின் பங்களிப்பானது அளப்பரியதும், இயக்க வளர்ச்சிக்கு அத்திவாரமும் போன்றதாகும். 27.10.1982ல் சீலன் தலைமையேற்று நடாத்திய சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின் வெற்றிகண்டு சிறீலங்கா அரசு மிரட்சியடைந்ததுடன், புலிகளின் திடமான வளர்ச்சியையும் உணர்ந்து கொண்டது.

மேலும், பொன்னாலையில் கடற்படையினர் மீதான வெற்றிகரத் தாக்குதல். 18.05.1983ல் (உள்ளூராட்சித் தேர்தல் தினத்தன்று) கந்தர் மடத்தில் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொண்ட தாக்குதல், காங்கேசன் சீமெந்து ஆலையில் இருந்து வெடிக்க வைக்கும் கருவியைக் கைப்பற்றி வந்த வீரமான நிகழ்வு, விலகும்படி வேண்டுகோள் விடுத்தும் விலகாது சிங்கள அரசின் பாதந்தாங்கிக் கிடந்த இனத்துரோகிகளை களையெடுத்தமை, என சீலனின் போராட்ட வாழ்வில் நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்கா.

ஈற்றில் 1983ம் ஆண்டு ஆடித்திங்கள் 15ம் நாளில் மீசாலையில் துரோகிகளின் காட்டிக்கொடுப்பினால் சுற்றிவளைத்த எதிரிகள் குண்டுதுளைத்துக் காயமுற்ற நிலையில் இலட்சிய உறுதியுடன் இயக்க மரபுக்கமைய உயிருடன் எதிரியிடம் சிக்கக்கூடாது என்பதற்காகவும், கையிலிருந்த ஆயுதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற காத்திரமான உணர்வுடனும் சக போராளியான “ஆனந்”தோடு, தனது சக போராளியின் (நண்பனான “அருணா”வின்) கையாலேயே கட்டாயப்படுத்தி “என்னையும் ஆனந்தையும் சுட்டுவிட்டு ஆயுதத்தைக் காப்பாற்றிக்கொண்டு செல்” என்று இணையில்லா அர்ப்பணிப்பாளனாய் வீரச்சாவை ஏற்றுக்கொண்டான்.

இந்த மாவீரன் மறைந்து பல ஆண்டுகள் நிறைவெய்திய போதும், தமிழீழம் உள்ளவரை அவனது புகழ் நிலைத்து நிற்கும். அவன் எம் நெஞ்சங்களில் என்றும் வாழ்கின்றான். இந்த மாவீரனின் வாழ்வும் சாவும் ஆயிரமாயிரம் போராளிகளை உருவாக்கும் உந்துசக்தி வாய்ந்த உன்னதமான காவிய வரலாறு என்றால் மிகையாகாது.

நினைவுப்பகிர்வு:- நிலா தமிழ்தாசன்.
 வெளியீடு : எரிமலை இதழ்  (கார்த்திகை 1993) 

மீள் வெளியீடு :வேர்கள் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் தமிழ்வீரன் பாலசுப்பிரமணியம் பாலரூபன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2008   லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்) ஆறுமுகம் ஆனந்தகுமார் மட்டுவில்நாடுமேற்கு, நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007   2ம் லெப்டினன்ட் சங்கீதன் சாரங்கபாணி சசிகுமார் கோணாவில், கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007   வீரவேங்கை முரசொலி தர்மதுரை அரிகரன் கொத்தம்பியார்குளம், துணுக்காய், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.2007   லெப்.கேணல் ரமணன் வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் சூரியகட்டைக்காடு, நானாட்டான்,...

லெப். கேணல். ரமணன்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்...

மேஜர் கிண்ணி .!

எதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '.! என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள்...

2ம் லெப்டினன்ட் அகரப்பாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் அகவிழி (தென்றல்) யோகநாதன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் ஆடல்கொடி மரியநாயகம் யேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் கனிமொழி ஞானப்பிரகாசம் கயின்வேஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் வீரப்புலி பிறேமன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் தென்றல் வேலுச்சாமி புவனேஸ்வரன் கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2007 லெப்டினன்ட்...

Recent Comments